முகாமைத்துவம் என்றால் management என்று பொருளா? தமிழ்நாட்டில் முகாம் என்றால் camp (army etc.) என்று பொருள் படும். முகாமைத்துவம் என்றால் தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு என்னவென்று விளங்காது என்று எண்ணுகிறேன். முகாம் என்ற சொல்லும் ஏதோ உருது போன்ற மொழிச்சொல் என்றுதான் நினைக்கிறேன். முகாம் என்பதற்கும் முகாமைத்துவம் என்பதற்கு தொடர்பு இல்லை என்று நினைக்கிறேன். எதோ முக்கியத்துவம் போன்ற பொருள் இருக்கும் போல் தெரிகிறது. முகாமைத்துவம் என்பதை சற்று விளக்கிக் கூறுகிறீர்களா? தமிழ்நாட்டில் மேலாண்மை, மேர்பார்வை போன்ற சொற்களைப் பெரும்பாலும் managerial, management, supervision, supervisory போன்ற சொற்களுக்கு ஈடாக பயன் படுத்துகிறார்கள். மேலாள் = manager. நேரப் பயன்பாடு அல்லது நேரப் பகிர்வு என்றோ ஏன் எளிமையாக ஆளலாகாது?

மேலும், வினைத்திட்பம் என்றால் வினையை திறம்பட செய்து முடித்தல். வினையாண்மை என்றால் வினையை செவ்விய முறையில் செய்து முடிக்கும் ஆற்றல் அல்லது வல்லமை பெற்றிருத்தல். வகுதி என்றால் design. எனவே காலவகுதி, நேரவகுதி என்றும் ஆளலாம். காலத்திட்பம், நேரம் பகிர் திட்பம் என்றும் கூறலாம். சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு. வேறு ஏதாவது சொற்களுக்கும் பயன் படலாம் என எழுதியுள்ளேன்.--C.R.Selvakumar 19:01, 6 ஜூலை 2006 (UTC)செல்வா

ஈழத்தில் management, manager என்பவற்றுக்கு முகாமைத்துவம், முகாமையாளர் என்ற பதங்களே பயன்பாட்டில் உள்ளன. மேல்+ஆள்+மை=மேலாண்மை என்றால், மேலாண்மை என்பதை விட முகாமைத்துவம் என்பதே பொருத்தமான சொல் என்று படுகிறது. முகாமைத்துவம் என்ற சொல்லின் அடி தொடர்பில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் தற்காலத்தில் management மேலாண்மை அல்ல. --கோபி 20:08, 6 ஜூலை 2006 (UTC)

முகாமை என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் தெரிவித்தால் நல்லது. தாங்கள் ஏன் தற்காலத்தில் management என்பது மேலாண்மை அல்ல என்று கூறுகிறீர்கள் என விளங்க வில்லை. மேல் மட்டத்தில் இருந்து எல்லாவற்றையும் வகுத்து, செலுத்துவதே மேலாண்மை. வள்ளுவருடைய குறள் இதற்கு மிகச்சிறந்த வரையறை தருகின்றது. இதனை இதனால் இவன் செய்வன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல். இதில் இதனை என்பது defining the mission, இதனால் என்பது with such and such resources and abiliites, இவன் முடிப்பன் choosing the person(s) and acertaining the selection based on his(their) ability to complete and fulfill. என்றாய்ந்து after considerable analysis as above. Then delegate to him or the persons. தொல்காப்பிய விதிப்படி, ஆண்பால் ஒருமையில் ஒரு விதி சொன்னால், அது பெண்பால், பலர்பாலுக்கும் ஆகும். திருடியவனைச் சிறையில் வைக்க வேண்டும் என்றால் திருடியவளையும் சிறையில் வைக்க வேண்டு, திருடியவர்களையும் சிறையில் வைக்க வேண்டும். மேலாண்மை என்பது மேல் மட்ட திட்டங்கள் வகுத்தலும், தீர்வு முறைகள் அலசுவதும், தக்காரைக்கொண்டு திறம்பட செலுத்தி செயல்படுத்தி விளைவு ஏற்படுத்துவதும் ஆகும். --C.R.Selvakumar 20:29, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
முன்பு இச்சொல் குறித்து விக்கிபீடியாவில் நடந்த உரையாடலையும் இங்கு பார்க்கலாம். ஒரு நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள சொல்லை விலக்கி வைக்கத் தேவையில்லை. வழக்கம் போல் மாற்றுச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தர வேண்டியது தான் :) வர வர ஏகப்பட்ட விதயங்களுக்கு இந்த அடைப்புக் குறி முறையையே தீர்வாகச் சொல்லிக்கோண்டு வருகிறேன். பேசாமல் இதற்கு அடைப்புக்குறி கொள்கை என்று பெயர் வைத்து விடலாம் :)--ரவி 07:53, 7 ஜூலை 2006 (UTC)

இலங்கையில் முகாமைத்துவம் என்ற சொல்லே புழக்கத்திலுள்ளது,மேலாண்மை என்ற சொல்லை இப்பொழுதான் அறிகிறேன் --kalanithe

ஹென்றி ஃபயோல் (1841 - 1925) முகாமைத்துவச் செயல்களாக planning, organising, co-ordinating, controlling, commanding என்பவற்றை அடையாளங் கண்டார். அது அந்தக் காலம். இப்பொழுது commanding என்பதை leading, motivating, communicating என்பவை பிடித்துக் கொண்டுள்ளன. மேலாண்மை என்பது commanding என்பதுடனேயே அதிகம் பொருந்துவதாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அதனாற்றான் தற்காலத்தில் management மேலாண்மை அல்ல என்றேன்.

manage என்பதை மேலாண்மை என்று ஏற்றுக்கொண்டால் நேர மேலாண்மை என்பது எவ்வளவு தூரம் பொருந்தும்? மேலிருந்து ஆளுமை செய்தல், ஆண்மை செய்தல் மேலாண்மை, இல்லையா? நேரத்தை எவ்வாறு ஆண்மை செய்வது? அதனை manage பண்ணலாம். முகாமை செய்யலாம்.

நான் முகாமைத்துவம் என்ற சொல்லுக்கு வக்காலத்து வாங்குவதாகக் கருத வேண்டாம். உண்மையில் அதன் அடிச்சொல் தெரியவில்லை. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்து" அமைவதுவே எனக்கு அதிகம் உவப்புடையது. அதனாற்றான் மேலாண்மை குறிக்கும் பொருளின் தவறைச் சுட்டிக் காட்டுகிறேன்.

தவறானதேயாயினும் சில சொற்கள் வழகத்திலிருந்து மாறாமலேயே தொடர்ந்து வருகின்றன. (உ-ம்: மண்ணெண்ணை) அவ்வகையில் மேலாண்மை என்பதே தொடர்ந்தும் பாவிக்கப்பட வாய்ப்பு அதிகம். ஏனெனில் அது தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ்நாட்டில் பாவிக்கப்படுவதால்.

//ஒரு நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள சொல்லை விலக்கி வைக்கத் தேவையில்லை. வழக்கம் போல் மாற்றுச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தர வேண்டியது தான் :)// இதில் எது மாற்றுச் சொல்? தமிழகத்தவருக்கு முகாமை மாற்றுச் சொல் என்றால் ஈழத்தவருக்கு மேலாண்மையே மாற்றுச் சொல். ஆகையால் உரிய redirect செய்து மாற்றுச் சொல் கட்டுரையின் ஆரம்பத்தில் தருவதே பொருத்தமாயிருக்கும். கோபி 17:35, 7 ஜூலை 2006 (UTC)

கோபி என்ன சொல்ல முனைகின்றார் என்று தெரிகின்றது. அதாவது மேலான்மை என்ற சொல்லில் அதிகாரம் வலுத்து இருக்கின்றது. இன்று நிர்வாகம் என்ற பதத்தில்தான் நாம் இதை கையாள வேண்டும். இதைப்பற்றி சற்று விபரமாக பின்னர் எழுதுகின்றேன். --Natkeeran 18:09, 7 ஜூலை 2006 (UTC)

கோபி, நீங்கள் கூறுகிறீர்கள்//manage என்பதை மேலாண்மை என்று ஏற்றுக்கொண்டால் நேர மேலாண்மை என்பது எவ்வளவு தூரம் பொருந்தும்? மேலிருந்து ஆளுமை செய்தல், ஆண்மை செய்தல் மேலாண்மை, இல்லையா? நேரத்தை எவ்வாறு ஆண்மை செய்வது? அதனை manage பண்ணலாம். முகாமை செய்யலாம்.//

நான் நேர மேலாண்மை என்று என்று சொல்லவில்லை. ஆனால் ஆண்மை என்பது ஆள் என்பதின் அடியில் இருந்து பிறந்தது. ஆள் என்பது இயக்குவது, சிந்தித்துக் கட்டுபடுத்துவது, போன்ற பொருள்களில் வருவது. வினையாண்மை என்னும் சொல்லில், வினையை திறம்பட செய்தல், காலத்தோடு செய்தல், குறைந்த செலவில் செய்தல் என்னும் பொருள் எல்லாம் பொருந்தியது ஏனெனில், திறம் என்பது எல்லாவற்றையும் குறிக்கும். ஆள் > ஆண்மை = திறம். வினையாண்மை = வினையாற்றும் திறம். நேரம் ஆண்மை என்றால் தவறாகாது, ஆனால் சிறப்பாக அமையவில்லை. நேரத்தை ஆளுவது (திறம்பட, பயன் பெருக வகிர்ந்து செலவிடல்). திருவள்ளுவர் பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் . என்று சொல்லுகிறார். அதில் பொருள், கருவி, காலம், வினை, இடம் ஆகிய ஐந்தில் காலம் என்பது 3ஆவது. அதைச் செவ்வனே அறிந்து (தக்க நேரம், வினைக்குத் தக்க அளவு என்று பல கோணங்களில் ஆய்ந்து) செலவிடல் வேண்டும். இது நேரமாண்மைதான், எனினும் இதனினும் நல்ல சொல் கிடைக்கலாம் (ஒரு சிலவற்றை முன்னர் குறித்துள்ளேன், அவைகளைவிட சிறந்த சொல் கிடைக்கலாம்). எனவே, இடத்தை ஆளலாம், நேரத்தை ஆளலாம், பொருளை ஆளலாம், கருவி, வினை களை ஆளலாம். கருவியாண்மை எனில், மிகச்சிறந்த முறையில், கருவியைப்ப்பயன்படுத்தும் திறம் என்று பொருள். பொருளாண்மை எனில், பொருளின் வல்லமையைக் குறிக்கலாம், ஆலது, ஒருவர் பொருளை எப்படி சிறப்பாக பயன்பெருகுமாறு கையாளுகிறார் என்பதைக் குறிக்கலாம். இடவாண்மை எனில், இடத்தைச் செப்பமுற பயன் படுத்துதல். முகாமை என்பது என்னவென்று தெரியாததால் முகாமை செய்யலாம் என்பது சரியா என்று புரியவில்லை.

அடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள்: //தவறானதேயாயினும் சில சொற்கள் வழகத்திலிருந்து மாறாமலேயே தொடர்ந்து வருகின்றன. (உ-ம்: மண்ணெண்ணை)//

மண்ணில் இருந்து எடுப்பது மண்ணெண்ண. கண் எண்ணை, காது எண்ணை என்றால், கண்ணுக்கு இடும் எண்ணை, காதுக்கு இடும் எண்ணை என்று பொருள். உயவு எண்ணை (உயவெண்ணை) என்றால் உராய்வைக் குறைக்கும் lubricating oil . இதனை உயவு நெய் என்றும் சொல்லுவர். ஆங்கிலத்திலும் Baby oil என்றால், குழந்தைக்குப் பூசும் எண்ணை. மண்ணெண்ணை என்பது தவறில்லை. எள்ளில் இருந்து எடுக்கும் நெய் எண்ணை. அது பொதுவாக எல்லா வகை நெய்களுக்கும் பொதுச்சொல்லாய் மாறிவிட்டது (அது மொழி வழக்கு). எண்ணை என்பதை விடுத்து நெய் என்னும் சுருங்கிய சொல்லை ஆளலாம், ஆனால் மாற்றுவது கடினம்.--C.R.Selvakumar 22:11, 7 ஜூலை 2006 (UTC)செல்வா

எண்ணை என்பது பேச்சு வழக்கு. எண்ணெய் சரியான எழுத்து வழக்கு.--Kanags 22:34, 7 ஜூலை 2006 (UTC)

ஆமாம். எண்ணெய் என்பதுதான் சரி. தவறுதலாக எழுதியுள்ளேன். நன்றி. எள் +நெய் = எண்ணெய். பிற எழுத்துப்பிழைகளும் தவறுகளும் உள்ளன மேலே. --C.R.Selvakumar 22:38, 7 ஜூலை 2006 (UTC)செல்வா

உண்மையில் மண்ணெய் என்பதே சரியானது, இல்லையா? அப்படிப் பயன்படுத்தப்படுவதையும் வாசித்துள்ளேன். ஆனால் நீங்கள் கூறியது போல எண்ணெய் என்பது எல்லா வகை நெய்களுக்கும் பொதுவாகி விட்டது. அதுபோலவே management என்பதை மேலாண்மை என்பதன் பொருத்தப்பாடு குறைவானாலும் அதுவே தொடர்ந்து பயன்பட வாய்ப்பிருக்கிறது.

முகாமை என்பதன் அடிச்சொல் தெரியாததால் அதனைப் பரிந்துரைப்பது பொருத்தமில்லை என்ற வாதம் சரியானது. ஆனால் ஈழத்தில் முகாமை என்பது எல்லோராலும் பயன்படுத்தப்படுவது. அதற்கான காரணம் இலங்கை அரசாங்கப் பாட நூல்களில் அது பயன்படுவதே என நினைக்கிறேன். ஆதலால் அதனைத் தவிர்ப்பது பொருத்தமற்றது.

செல்வா, உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. கோபி 02:25, 8 ஜூலை 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:50, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:50, 14 மே 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேர_மேலாண்மை&oldid=3607031" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நேர மேலாண்மை" page.