பேச்சு:நைதரசன் நிலைப்படுத்தல்

நைதரசன் நிலைப்படுத்தல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பை மாற்ற தொகு

இந்தக் கட்டுரையின் தலைப்பை நைதரசன் நிலைப்படுத்தல் என மாற்றலாம் எனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 08:21, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஆம், பல உயிர்களின் இயக்கத்தினால் இது நிகழ்வதால் நிலைப்படுத்தல் என்பதே தகும். -- சுந்தர் \பேச்சு 08:25, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply
  • வளிமண்டலத்தில் நைதரஜன் அளவு மாறாமல் நிலைப்படுத்தப்படுத்தப்படுகிறது. இயற்கையாகவே இது நிகழ்வதால் நிலைப்படுதல் என்ற தலைப்பிட்டேன். நிலைப்படுத்துதல் என்றால் பிறருடைய முயற்சியால் நிலைப்படுத்தப்படுதல் போன்ற பொருள் வருமா? எனக்கு தலைப்பை மாற்றுவதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. தக்கது எதுவோ அதனை மாற்றிவிடலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:27, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இது இயற்கையாக நிகழ்ந்தாலும் (மாந்தரல்லாத) சில உயிர்களின் செயலால் நிகழ்வதால் அவ்வாறு கருதினேன். இப்போது உங்கள் கருத்தைப் படித்தபின் எனக்கும் சற்று தயக்கம் உள்ளது, பார்வதி. மற்ற உயிர்களின் இயக்கத்தை இயற்கை எனக் கொள்வதா அல்லது உயிறற்ற வினைகளை மட்டுமே அவ்வாறு கொள்வதா எனத் தெரியவில்லை. முன்னது சரியென்றால் மனிதனுக்கு மட்டும் ஏன் விலக்கு என்ற கேள்வியும் எழுகிறது. எல்லாம் மாந்த நோக்கு மொழிகளினால் வருவது. :) -- சுந்தர் \பேச்சு 12:42, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இலங்கையில் நாம் இதனை நைதரசன் பதித்தல் என்றே படித்தோம். முக்கியமாக அவரை இனத் தாவரங்களின் வேர்முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளிமண்டல நைதரசனை அமோனியாவாக மாற்றுவதனால், அது பதித்தல் அல்லது நிலைப்படுத்தல் என அழைப்பதே சரியாக இருக்குமெனத் தோன்றுகின்றது. நைதரசன் தானாகவே அமோனியாவாக மாறுவதில்லை. மாறாக பாக்டீரியாவால் மாற்றப்படுகின்றது/பதிக்கப்படுகின்றது/நிலைப்படுத்தப்படுகின்றது. இது உயிரியல் அல்லது வளிமண்டல நைதரசன் நிலைப்படுத்தல். மேலும் இந்தக் கட்டுரையில் இன்னமும் விளக்கமாகச் சேர்த்துக் கொள்ளப்படாத, Industrial nitrogen fixation (தொழிற்சாலை நைதரசன் நிலைப்படுத்தல் அல்லது வேதியியல் நைதரசன் நிலைப்படுத்தல்) ஐயும் கருத்தில் கொள்ள வேண்டும். அதில் உர உற்பத்தியில் நைதரசன் நிலைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் நைதரசன் நிலைப்படுத்தல் நேரடியாக வளிமண்டலத்தில் நைதரசன் அளவை மாறாமல் வைத்திருப்பதில்லை. நைதரசன் நிலைப்படுத்தலுடன், வேறும் பல நிகழ்வுகள் இணைந்து நைதரசன் வட்டத்தின் மூலமே நைதரசன் அளவு மாறாமல் வைத்துக் கொள்ளப்படுகின்றது. எனவே நிலைப்படுத்தல் என்பதே சரியாக இருக்கும் எனத் தோன்றுகின்றது. விக்சனரியிலும் பாருங்கள். --கலை (பேச்சு) 12:30, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

  விருப்பம் நன்றி கலை. -- சுந்தர் \பேச்சு 06:32, 24 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to "நைதரசன் நிலைப்படுத்தல்" page.