பேச்சு:பச்சைப் பேரோந்தி

உடும்பு என்னும் பெயர்

தொகு

தமிழ்நாட்டில் உடும்பு என்பதன் அறிவியற் பெயர் என்ன? இக்கட்டுரை அமெரிக்க உடும்பு பற்றியது. இதற்கும் தமிழ்நாட்டில் (/இந்தியாவில்) இருக்கும் உடும்புக்கும் என்ன தொடர்பு என்பது இன்னும் தெளிவாக எனக்குத் தெரியவில்லை. கார்த்திக் போன்றவர்கள் உதவ வேண்டுகிறேன். அமெரிக்க உடும்பைப்பற்றி இன்னும் கருத்துகள் சேர்க்க உள்ளன - பின்னர் சேர்க்கின்றேன்.--செல்வா 04:20, 7 ஜனவரி 2009 (UTC)

 
en:Bengal monitor - Varanus bengalensis படம் வயநாட்டில் எடுக்கப்பட்டது. அதனால் தமிழ்நாட்டிலுள்ள உடும்புகளும் இதே இனத்தைச் சேர்ந்தவைகளாக இருக்க வேண்டும். நான் விடியற்பொழுதுகளில் சோழவந்தான் அருகே (வைகறையில் வைகைக்கரையில்!) பார்த்துள்ளேன். படத்திலுள்ளதைக் காட்டிலும் கரியதாக இருந்தது. சங்க காலத்தில் மட்டுமல்ல இன்னாள் வரை இவற்றை மக்கள் சிலர் உண்கிறார்கள். -- சுந்தர் \பேச்சு 05:26, 7 ஜனவரி 2009 (UTC)
இந்தப்படம் கோயம்புத்தூரில் எடுக்கப்பட்டது. -- சுந்தர் \பேச்சு 06:14, 7 ஜனவரி 2009 (UTC)
தூள் கிளப்பிட்டீங்க, சுந்தர்! மிக்க நன்றி. இப்பொழுது இங்குள்ள கட்டுரையை சீர்திருத்தி, கூடவே தொடர்பான சில கட்டுரைகளையும் எழுத வேண்டும். இந்திய, தமிழக உடும்பைப்பற்றி சுவையான (கட்டுரையைப் பற்றி சொல்கிறேன் :) நான் நிலைத்திணை உண்ணி) கட்டுரை ஒன்று எழுத வேண்டும். கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்கு உடும்புக்கறி கொடுத்தாராம். சிலைகூட உள்ளது தஞ்சாவூரில்--செல்வா 17:55, 7 ஜனவரி 2009 (UTC)
நன்றி செல்வா. நிலைத்திணை உண்பவராயினும் விலங்குகளைப் பற்றி பல சுவையான கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள், பாராட்டுகள். இயன்ற பொழுது விரித்து எழுதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:41, 8 ஜனவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பச்சைப்_பேரோந்தி&oldid=2664944" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பச்சைப் பேரோந்தி" page.