மதிப்புடன் தங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழத்துக்களும். தமிழில் பண்பாட்டியல் என்ற சொல்லும் பண்பாட்டு மானிடவியல் என்ற சொல்லும் புழக்கத்தில் வந்து வெகு நாட்களாகிறது. இப்படியாக புதிய பதிய சொற்களை தேவையற்றுக் கொண்டுவருவது தமிழின் ஊடான வளரச்சிக்கு உதவாது. தயையுடன் கருத்தில் கொள்க.


பரிந்துரை தேவை

தொகு
  • wikt:ta:popular culture பொதுப் பண்ணொய்யாரம் (கருத்தளவிலே popular culture, pop culture என்பது பொது மக்கள் கொண்டாடும் கலை, பண்பாடு பற்றிய தற்கால ஈடுபாடுகள் எனலாம். குறிப்பாக இளைஞர்கள் விரும்பி ஈடுபாடு காட்டும் பாடல், நடை உடை பாவனைகள், கலைநுட்பப் போக்குகள் முதலிவற்றைக் குறிக்கும். ஒய்யாரம் என்றாலே கலை, அழகு முதலியவற்றின் முன்னோட்ட வீச்சைக் குறிக்கும். பொதுமக்கள் + கலை, பண்பாடு + ஒய்யாரம் என்பதை எவ்வாறேனும் குறிப்பதாக சுருக்க வேண்டும். எனவே இப்போதைக்குப் பொதுப் பண்ணொய்யாரம், அல்லது பொதுப் பண்ணோச்சம் (பண் + ஓச்சம்), அல்லது பொதுக் கலையோச்சம் என்று கூறலாம். ஓச்சம் என்றால் சிறப்பான உயர்வு.
நீங்கள் people culture என்று பொருள் கொள்வதாக தெரிகின்றது. பொது என்பது - common எனபதையே சிறப்பாக சுட்டும். culture என்றால் பண்பாடு என்ற சொல்லை பரவலாக பயன்படுத்துகின்றோம்.

Popular culture என்பதில் பொதுமக்கள் பரவலாக கைக்கொள்ளும் கலை-பண்பாட்டு பழக்க வழக்கங்களும் ஈடுபாடுகளையும் குறிக்கும். எனவே People culture என்று சொல்வது பொருந்தும். எளிய மொழி பெயர்ப்பு வேண்டும் எனில் பொதுமக்கள் பண்பாடு = பொதுப் பண்பாடு என்றே கொள்ளலாம். ஆனால் pop culture என்று சொல்வதிலே இளைஞர்களோ முதியவர்களோ தம்காலத்தில் அல்லது தற்காலத்தில் புதுத் தூக்கலாக மிகு வீச்சுடன் உள்ளதாக உணரப்படும் கலை, பண்பாட்டு ஈடுபாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடும். பண்பாடு என்பது காலத்தால், வழிவழியாய் வந்த பல்லோர் துணையால் சிறப்பேறி நுட்பேறி பண்பட்ட கலைச் சிறப்பான வெளிப்பாடு. popular culture என்பதில் சிலவோ பலவோ அப்படி பிற்காலத்தில் பண்பட்ட கலை-பண்பாடாகக் கருதப்படலாம்.பண்பாடு என்பதற்குச் சரியான ஆங்கில்ச்சொல் இல்லை, அதே போல culture என்பதற்கும் இணையான தமிழ்ச்சொல் இல்லை (கலை, பண்பாடு என்பது சற்றேறக்குறைய பொருந்தும்). எனவே நான் பரிந்துரைத்ததில் பண்பாடு என்பதை ஒருவாறு தவிர்த்துள்ளேன். பொது என்பது common, common people, general public, public ஆகியவற்றுக்கு இணையாகப் பல இடங்களில் பயனபடுத்த இயலும்.--C.R.Selvakumar 00:35, 28 செப்டெம்பர் 2006 (UTC)Reply

culture (பண்பாடு), mass culture (பெருந்தொகை பண்பாடு?), pop culture, high culture (மேல்வர்க்க பண்பாடு), counter culture (மறைநிலை பண்பாடுகள்??), multiculture (பன்முக பண்பாடு), "primative" culture, folk culture (நாட்டார் பண்பாடு) போன்ற கருத்துக்களை வேறுபடுத்தி காட்டவேண்டும். பொது என்ற சொல்லில் POPULAR என்ற கருத்துரு வருகின்றதா? தற்சமயம் ஏதாவது வழக்கில் இருக்கின்றதா?

பரவலர் பண்பாடு (= popular culture) என்றும் சொல்லலாம். counter culture என்பதற்கு எதிர்ப் பண்பாடு, எதிர்முரண் பண்பாடு எனலாம். folk culture என்பதை நாட்டார் பண்பாடு எனலாம், நாட்டுப்புறப் பண்பாடு எனலாம். multiculture என்பது பல்லினப்பண்பாடு எனலாம். popular என்னும் சொல் population, பொதுமக்கள், மக்கள் என்பதோடு தொடர்புடையதே.--C.R.Selvakumar 00:35, 28 செப்டெம்பர் 2006 (UTC)Reply


கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 00:56, 28 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம்.

தொகு

விளக்கம் தேவை?--Natkeeran 07:35, 6 டிசம்பர் 2006 (UTC)

இன்னுமொரு வரையறை...

தொகு

பண்பாடு பண்பு படுத்தப்பட்ட அல்ல பண்பட்ட அல்லது திருத்தங்களுக்கு உள்ளாகிய ஒரு சமூகத்தின் வழக்கங்களை குறிக்கும். பண்பாடு என்றும் திருத்தங்களுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டே நிற்கின்றது. --Natkeeran 07:37, 6 டிசம்பர் 2006 (UTC)

"பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது. பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப்படுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததன் விளைவாய் கற்றுக்கொண்ட மொழி, கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர். உணவு, உடை, திருமணம் செய்கிற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்." http://keetru.com/kathaisolli/feb07/mukil.html

பண்பாடு என்றால் என்ன? கா. சிவத்தம்பியின் விளக்கம்

தொகு

பண்பாடு என்பதனை எவ்வகையில் விளங்கிக் கொள்வது?

பண்பாடு என்பது உண்மையில் மானுடவியல் சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். ஆங்கிலத்தில் பொதுவாக ‘Culture’ என்று சொல்வதற்கான தமிழ்ப் பதமாக இப்பொழுது கலாச்சாரம் என்று சொல்கிறார்கள். உண்மையில் கலாச்சாரம் என்பதற்கும் பண்பாட்டுக்கும் குழப்பம் கிடையாது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் பண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இந்த வாழுகின்ற முறைமை என்பதனுள் வாழ்க்கையின் சகல அம்சங்களும் அடங்கும்.

அன்றாட வாழ்க்கை, உறவு முறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவு வகைகள், ஆடை ஆபரணங்கள், வைபோகங்கள், சடங்குகள் இவற்றின் ஊடாக, தோன்றுகிற ஒரு மனநிலை. இவற்றின் அடியாக வருகின்ற அந்த வாழ்க்கைமுறை இன்னொன்றோடு ஒப்பு நோக்குகிறபொழுது அல்லது ஒப்பு நோக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்ற பொழுது என்னை அடையாளங் காட்டுவதாக நான் கருதுகிறேன்.

அதுதான் பண்பாடு. அந்த பண்பாட்டினுள் இரண்டு பிரதானமான விடயங்கள் உள்ளன. ஒன்று வாழ்க்கை முறை, மற்றொன்று பெறுமானங்கள். இந்த வாழ்க்கை முறைக்கும் பெறுமானங்களுக்கும் தொடர்புண்டு. பெறுமானம் என்பது values.

பெறுமானம் என்பது ஒரு எண்ணக்கரு நிலைப்பட்ட முக்கியத்துவமுடைய சிந்தனை மனப்பாங்கு. ஆனால் அவற்றிற்கு ஒரு பலம் உண்டு. இந்த பெறுமானங்கள் ஒரு தனிமனிதனுடைய, ஒரு குழுமத்தினுடைய கண்ணோட்டங்களைத் தீர்மானிக்கிறது.

யாரைக் கல்யாணம் பண்ணலாம், யாரைக் கல்யாணம் பண்ணக் கூடாது என்பது, ஒரு அயலவரை எப்படி மதிக்கிறது, ஒரு ஆசியரை எப்படி மதிக்கின்றது என்பது எல்லாம் பெருமானங்கள்தான்.

இவை யாவும் ஒருமுகத் திரண்டு நமக்குள்ளே இருப்பதனால் நாங்கள் பண்பாடு என்பதனை எங்களுடைய ஒரு வாழ்க்கை முறையின் அடையாளமாகக் கருதுகிற ஒரு தன்மை உண்டு. இதனால்தான் இந்த பண்பாடு என்ற ஒரு சொல்லுக்கு ஒரு அசாதாரணமான முக்கியத்துவம் வந்திருக்கிறது.

http://www.keetru.com/thamizhar/aug07/sivathambi.php

பண்பாடு சொல்லாடல்கள்

தொகு

--Natkeeran 21:50, 30 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பண்பாடு&oldid=3459975" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பண்பாடு" page.