பேச்சு:பண்பியல் வெளிப்பாட்டியம்

இதிலும் இது போன்ற தலைப்புகளிலும் "வாதம்" என்பது தேவை இல்லாதது மட்டுமல்ல, பொருந்தாததும் என்று நினைக்கிறேன். பண்பியல் வெளிப்பாட்டியம் என்று கூறலாம். இயம் என்பது ஒரு இயல்பு, போக்கு, அமைப்பு, ஒழுக்கம் என்பதை குறிக்கும். இயம் என்பது -இசம் என்பதோடு நெருங்கிய உறவும் உடையது (ய --> ச தமிழ் இயல்பும் கூட. பாய் --> பாசனம். இயை --> இசை, குயவன் --> குசவன்; உயர்வு, உயர்த்தி -->உசத்தி; வயம் --> வசம்). எனவே இயம் என்னும் பின்னொட்டை இடப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 16:08, 10 ஜூன் 2008 (UTC)

தலைப்பிலும், உள்ளடக்கத்திலும் உரிய மாற்றங்கள் செய்துள்ளேன். மயூரநாதன் 16:29, 10 ஜூன் 2008 (UTC)
நன்றி, மயூரநாதன்.--செல்வா 12:35, 11 ஜூன் 2008 (UTC)

Start a discussion about பண்பியல் வெளிப்பாட்டியம்

Start a discussion
Return to "பண்பியல் வெளிப்பாட்டியம்" page.