பேச்சு:பத்து பிரண்டாம்
இதனை பத்து பிரண்டாம் என்க் குறிப்பிடுவதை விட படு பிரண்டாம் குறிப்பிடுவது நல்லது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:13, 7 சனவரி 2015 (UTC)
- மலேசியா இலங்கையைப் போன்றே தமிழர்களும் வாழும் நாடு. அம்பாந்தோட்டையை ஹம்பாந்தோட்ட என எழுதுவீர்களா? அது போன்றே இதுவும். மலேசியத் தமிழர் இதனை எவ்வாறு அழைக்கின்றனரோ அவ்வாறே இங்கும் எழுதப்பட வேண்டும். பார்க்க: பத்துமலை. ஏன் Badu என எழுத யோசித்தீர்கள்?--Kanags \உரையாடுக 10:03, 7 சனவரி 2015 (UTC)
தங்கள் கருத்துக்கு நன்றி. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:13, 7 சனவரி 2015 (UTC)
பத்து பிரண்டாம்
தொகுவணக்கம். மலேசியா வாழ் தமிழர்கள் பத்து பிரண்டாம் என்றுதான் அழைக்கிறார்கள். அழைத்தும் வருகிறார்கள். மலாய்க்காரர்கள் பத்து பெரெண்டாம் என்று அழைக்கிறார்கள். அவர்களிடம் பிர எனும் எழுத்துகள் பெரெ என்று மாறும். ஆக, தமிழர்கள் எப்படி அழைக்கிறார்களோ, அப்படியே நாமும் பெயரிடுவது சரியாக அமையும் என்பது என் கருத்து.
இந்தப் பத்து பிரண்டாம் சிறுநகரில் இருந்து 10 கி.மீ. அப்பால் இருக்கும் டுரியான் துங்கல் கிராம நகரில், சிங் லியான் ரப்பர் தோட்டத்தில் நான் பிறந்தேன். டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தேன். பத்து பிரண்டாம் வழியாக பேருந்தில் மலாக்கா நகருக்குப் போய், காஜா பேராங் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.
மலேசியாவில் ஊர்களின் பெயர்களை எப்படி அழைக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்குத் தெரியும். பத்து பிரண்டாம் என்பதுதான் சரியாக அமையும். மலேசியாவில் உள்ள சில பெயர்கள்
இன்னும் நிறைய இருக்கின்றன. நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 11:00, 7 சனவரி 2015 (UTC)