பேச்சு:பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் பக்கத்தை உருவாக்கும்பொழுது உலகச் சிறுவர் நூல் நாள் பக்கத்தினை நான் பார்க்கவில்லை; பார்த்திருந்தால் அதனை தொகுத்து மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பேன். என்னும் பின்வரும் எண்ணங்களைக் கவனத்திற்கொண்டு முடிவெடுப்போம்:
உலகச் சிறுவர் நூல் நாள் என்னும் தொடர் World Children Book Day என்னும் ஆங்கிலத் தொடரின் தமிழாக்கம் ஆகும். International என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் 'பன்னாடு' என்பதாகும். Children என்னும் பன்மையைக் குறிக்கும் சொல் Child என்னும் ஒருமையைக் குறிக்கும் சொல்லை அடியாகக் கொண்டது. Child என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "குழந்தை" என்பதாகும். ஏனெனில் இச்சொல் மனித வாழ்வில் 0 - 18 அகவைக்கு உட்பட்ட பருவத்தினரை பால் வேறுபாடின்றிச் சுட்டும் பொதுச்சொல் ஆகும். ஆனால் சிறுவர் என்னும் பாலர்பால் சொல் சிறுவன் (Boy) சிறுமி (Girl) என்னும் பால் சுட்டும் ஒருமைச் சொல்களின் பன்மை வடிவம் ஆகும். எனவே இதனை Children என்னும் பால் வேறுபாடு அற்று பொதுமையைச் சுட்டும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லாகக் கொள்ள இயலாது; "குழந்தைகள்" என்பதே பொருத்தமான சொல்லாகும். எனவே International Chldren's Book Day என்னும் தொடருக்குச் சரியான மொழிபெயர்ப்பு, "பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்" என்பதே. ஆகவே, பன்னாட்டு குழந்தைகளின் புத்தக நாள் என்னும் பக்கத்தை உலகச் சிறுவர் நூல் நாள் பக்கத்தோடு இணைக்க பின்வரும் பணிகளைச் செய்ய வேண்டும்:
(1) உலகச் சிறுவர் நாள் என்னும் தலைப்பை பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் அல்லது பன்னாட்டுக் குழந்தைகளின் நூல் நாள் (நூல் நாள் என்பதில் ஒலிநயம் இல்லை) என மாற்ற வேண்டும். (2) உலகச் சிறுவர் நாள் என்னும் பக்கத்தில் இல்லாத, ஆனால் தற்பொழுது பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் என்னும் பக்கத்தில் இருக்கின்ற செய்திகளை முந்தைய பக்கத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்விரண்டு பணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோக்கையில் உலகச் சிறுவர் நூல் நாள் என்னும் பக்கத்தை நீக்கிவிட்டு, பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் என்னும் பக்கத்தையே தக்க வைத்துக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில், உ.சி.நூ.நா. பக்கத்தில் இருக்கும் அனைத்துத் தகவல்களும் ப.கு.பு.நா. பக்கத்தில் இருக்கின்றன. ஓப்பீட்டளவில் உ.சி.நூ.நா. பக்கத்தில் உள்ளவற்றைவிட அதிகமான, முழுமையான தகவல்கள் ப.கு.பு.நா. பக்கத்தில் இருக்கின்றன. --அரிஅரவேலன் (பேச்சு) 05:13, 6 ஏப்ரல் 2013 (UTC)
Start a discussion about பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்.