பேச்சு:பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் சூலை 29 அன்று வெளியாகிறது.. |
சுந்தர், வழக்கமாக நாம் கட்டுரையின் உள்ளிருந்து ஆங்கில விக்கிபீடியாவுக்கான நீல இணைப்புகளை தருவதில்லையே? இக்கட்டுரையில் அவ்வாறு உள்ள இணைப்புகளை தமிழ் விக்கிபீடியாவுக்கான சிகப்பு இணைப்புகளாக மாற்றி விடலாமா? அப்புறம், திகதிகளை குறிப்பிடும்போது மாதம் நாள், ஆண்டு (எடுத்துக்காட்டு-அக்டோபர் 10, 2005) என்ற முறையில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் எனத்தோன்றுகிறது. 2005-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் பத்தாம் நாள் என்று குறிப்பிடுவது கொஞ்சம் நீளமாகத் தோன்றுகிறது. இது குறித்த மாற்றத்தை கட்டுரையில் செய்துள்ளேன்.--ரவி (பேச்சு) 11:26, 10 அக்டோபர் 2005 (UTC)
- ரவி. முற்றிலும் சரி. ஆங்கில இணைப்புகள் நீக்கப்பட வேண்டியவையே. இக்கட்டுரை IAEA என்ற தலைப்பில் நன்பர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. நண்பர் தமிழார்வமும் தொழில்நுட்ப அறிவும் பெற்றவர். அவர் முதல் முதலாகக் கட்டுரை உருவாக்க செய்த முயற்சியே இது. அதனால், சில நடைப்பிறழ்வுகள் இருந்தன. அவர் தானாக வந்து கட்டுரை நகர்த்தல் மற்றும் வழிமாற்றுப் பக்கம் ஏற்படுத்துதல் எப்படி என்று கேட்டார். அவருக்கு விளக்கும்போது உருவானவையே அந்த ஆங்கிலத் தலைப்புக் கட்டுரைகள். -- Sundar \பேச்சு 12:48, 10 அக்டோபர் 2005 (UTC)
ஓ அப்படியா? தரமாக எழுதும் மற்றொரு புதுப்பயனர் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. அப்புறம், நம்ம ரெண்டு பேரும் நல்லா விடுப்பு அறிவிப்பு போட்டு விட்டும் இங்கு வேலை பார்க்கிறோம் :)--ரவி (பேச்சு) 14:08, 10 அக்டோபர் 2005 (UTC)
- ஆம். நான் கூறிய நன்பர் பயனர்:திரு. ஆம், விடுப்பு என்பதன் பொருளே தெரியாமல் போய்விட்டது. :-) -- Sundar \பேச்சு 04:36, 11 அக்டோபர் 2005 (UTC)
தலைப்பு
தொகு"முகமையகம்" என்பதை விட "முகவர் நிலையம்" என்பதே சாலச்சிறந்தது.இலங்கையில் இவ்வாரே அறியப்படுகிறது. தவிர "முகமையகம்" என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதே இல்லை - சுரேன்.
முகவர் = Agent
முகவர் நிலையம், முகவரகம் = Agency
- அமைப்பு என்பதை விட முகமையகம் நன்றாக உள்ளது. முகமையகம், முகவர் நிலையம் இரண்டுமே தமிழ்நாட்டில் கேள்விப்படாத சொற்கள் தான். எனினும் பாதுகாப்பு முகமை போன்ற சொற்களை கேள்விப்பட்டதுண்டு. முகவர் நிலையம் என்பதை agency என்று தமிழ்நாட்டில் புரிந்து கொள்வார்களா என உறுதியாகத் தெரியவில்லை. ஆக, முகமை, முகமையகம் ஆகிய இரு சொற் பயன்பாடுகளையும் ஆதரிக்கிறேன்.--ரவி (பேச்சு) 09:28, 17 அக்டோபர் 2005 (UTC)