பேச்சு:பயணிகள் தொடருந்து சேவை

Latest comment: 7 மாதங்களுக்கு முன் by Ksmuthukrishnan

@Ksmuthukrishnan: கொமுட்டர் என்று தமிழில் சொல் எதுவும் இல்லை. commuter Rail என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "பயணிகள் தொடருந்து" என்றவாறோ அதனை ஒத்த சொற்களாகவோ மொழிபெயர்க்கப்பட வேண்டும். இக்கட்டுரையை ஒத்த ஏனைய கட்டுரைகளுக்கும் அவ்வாறே தலைப்பு மாற்றப்பட வேண்டும். கொமுட்டர் தொடருந்து என்பதற்கு வழிமாற்றுக்கூட இருக்கக்கூடாது.--Kanags \உரையாடுக 22:50, 5 ஏப்பிரல் 2024 (UTC)Reply

அப்படியே செய்யலாம் ஐயா. இருப்பினும் தமிழ்நாட்டு தொடருந்துகளில் மெட்ரோ எனும் தொடருந்துகளுக்கு மெட்ரோ தொடருந்து என தலைப்பு கொடுத்து இருப்பதால், மலேசியாவில் 'கொமுட்டர்' எனும் சொல் சரியாக அமையும் என நினைத்தேன். இருப்பினும் பெயர் மாற்றம் செய்யலாம். நன்றிங்க. Ksmuthukrishnan (பேச்சு) 02:34, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
கொமுட்டர் என்பதை நேரடியாக தொடருந்து என பயன்படுத்தலாமா? எடுத்துக்காட்டாக, Senawang Komuter station என்பதை செனவாங் தொடருந்து நிலையம் என மாற்றலமா? Ksmuthukrishnan (பேச்சு) 03:01, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Ksmuthukrishnan: Commuter Rail என்ற இந்தக் கட்டுரை மலேசியாவுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் ஒரு பொதுவான கட்டுரை. commuters என்பது பயணிகள் என்று பொருள். "பயணிகள் தொடருந்து சேவை" என இக்கட்டுரைக்குத் தலைப்பிடலாம். மலேசியாவைப் பொறுத்தவரையில், Senawang Komuter station - செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம் என்றிருக்கலாம். செனவாங் கொமுட்டர் நிலையம் என்பதை வழிமாற்றாகவும் வைத்திருக்கலாம். அதனைக் கட்டுரையிலும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 05:03, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம் என்பது மிகவும் நேர்த்தியான தலைப்பு.
அத்துடன் Commuter Rail என்பதை "பயணிகள் தொடருந்து சேவை" என மாற்றிவிடுவோம். நன்றி. Ksmuthukrishnan (பேச்சு) 05:39, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
Return to "பயணிகள் தொடருந்து சேவை" page.