பேச்சு:பரதன் (திரைப்பட இயக்குநர்)

பரதன் (திரைப்பட இயக்குநர்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


                                                பரதனின்  பண்பு 
                              

ஒருவனை ஊர் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதனால்அப்படியொன்றும் பெரிய பாதிப்பு வந்து விடாது. ஆனால் அவனுடைய குடும்பத்தினர், உற்றார் கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவனை விட துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் மிகவும் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்தான் பரதன். இராமாயண கதாபாத்திரங்களிலேயே மிக உயர்ந்த, ஆனால் இராமாயண கதாபாத்திரங்களினால் புரிந்து கொள்ளப் படாத கதாபாத்திரம் பரதனுடையது. பரதன் மிக உயர்ந்தவன் என்பதை நான் சொல்லவில்லை. கம்பரே சொல்கிறார்.

" ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?" என்று. அப்படியானால் அந்த காப்பியம் பரதாயாணம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எதனால் இராமாயாணம் ஆனது? தாயை, மூத்தவர்களை மதிக்கும் விசயத்தில் இராமன், மற்ற கதாபாத்திரங்களை விட உயர்ந்து நிற்கிறான். மின் விளக்குகளுக்கு ஒவ்வொரு அளவு கோல் உண்டு. 10 வாட் பல்பிலிருந்து 1000 வாட் வரைகூட உண்டு. இவை எல்லாவற்றுக்கும் மதிப்பு இரவிலும், இருண்ட இடங்களிலும்தான். காலையில் உதய சூரியன் உதித்து வந்து விட்டால் எந்தவொரு "வாட்" க்கும் மதிப்பு கிடையாது. சூரிய ஒளியில் எல்லா "வாட்"டும் மங்கித் தெரியும். இராமனுடைய மூத்தோர் சொல் மதிக்கும் பண்பின் முன்னால், பரதனுடைய, உயர்ந்த பண்புகள் அடிபட்டுப் போய் விடுகிறது.

பரதனுக்குத்தான் அரசுரிமை, ராமன் காடு செல்ல வேண்டும் என்று கைகேயி சொன்னபோது, "நான் ஏன் போக வேண்டும் என்றோ, அதை அப்பா சொல்லட்டும்" என்றோ இராமன் சொல்லவில்லை. மாற்றாந்தாயின் கட்டளையைக் கூட தந்தை சொன்னதாக ஏற்று மரவுரி தரித்து காடு சென்றான். இப்போது பரதன் விசயத்துக்கு வருவோம். பரதனை, பெற்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. தகப்பன் புரிந்து கொள்ளவில்லை. தமையன் புரிந்து கொள்ளவில்லை. மந்திரி புரிந்து கொள்ளவில்லை.

கைகேயி, தசரதனிடம் இரண்டு வரம் கேட்ட போது, அதாவது, இராமன் காடு செல்லவேண்டும், பரதன் அரசாள வேண்டும் என்று கேட்ட போது, இந்த விசயத்தில் பரதனுக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்பது கூட தெரியாத தசரதன், கைகேயியைப் பார்த்து, " நீ எனக்கு மனைவியும் அல்ல; உன் மகன் (நல்லா கவனிக்கணும் - நம்ம மகன் என்றோ அல்லது என் மகன் என்றோ கூட சொல்லாமல் "உன் மகன்" என்கிறார். இதிலிருந்தே தசரதனுக்கு பரதன் மீது எந்த அளவுக்கு வெறுப்பு உண்டானது என்பது புரிகிறது.)

இராமன் வனம் சென்ற சில நாளிலேயே தசரதன் இறந்து போக, அவரின் மறைவு பரதனுக்கு தெரிவிக்கப் படவில்லை. இவ்வளவுக்கும் பரதன், தனது மாமன் வீட்டுக்குத்தான் போயிருக்கிறான். (ஒரு பெண்ணின் கணவன் இறந்து போனால், அவளது தாய், தந்தை வழி உறவுகளுக்கு முதலில் சொல்லி அனுப்புவதுதான் நடைமுறை வழக்கம். அந்த வழக்கம் கூட பின்பற்றப் படவில்லை.)

தற்செயலாக அயோத்தி திரும்பும் பரதன், கொடிகள் தாழக் கிடப்பது, மக்கள் முகத்தில் சோகம் அப்பிக் கிடப்பது, மக்கள் அவன் மீது உமிழ்ந்த வெறுப்பான பார்வை , இவை எதற்கும் காரணம் விளங்காமல்தான் அரண்மனை வந்து சேருகிறான். வந்த பிறகுதான் தந்தை இறந்து போன விஷயம், இராமன் வனவாசம் சென்ற விஷயம் எல்லாம் தெரிய வருகிறது.

பரதனைக் கண்டதும், தலைமை பொறுப்பில் உள்ள மந்திரி கேட்கிறார் " முடி சூட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யலாமா?" என்று. ( மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்றொரு பழமொழி உண்டு. எல்லா விசயங்களையும் எடை போட்டுப் பார்த்து அலசி ஆராய்ந்து, தப்பு எந்த பக்கம், அதில் பரதனுக்கு பங்கு இருக்கிறதா, உடன்பாடு இருக்கிறதா என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருந்தாரென்றால் , பரதனைப் பார்த்ததும் அப்படியொரு கேள்வியைத் தூக்கிப் போட்டிருக்க மாட்டார்.)

எல்லாக் குழப்பத்துக்கும் தாய்தான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் பரதன், தகாத வார்த்தைகளால் தாயை கடிந்து கொள்கிறான். நீ எனக்கு வேண்டாம், அண்ணனைத் தேடி நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இராமனை போலவே மரவுரி தரித்து காடு செல்கிறான். ( தாயறியா சூல் உண்டா என்ற பழமொழி இங்கே பொய்த்துப் போய் விடுகிறது. ஒருவனுக்கு சேர வேண்டிய ஒன்றை தந்திரமாகப் பெற்று மகனுக்கு வாங்கித் தருகிறோமே. இதை மகன் விரும்புவானா என்பதுகூடத் தெரியாத தாயாகத்தான் கைகேயி இருந்திருக்கிறாள். ஆக, பரதனைப் பெற்ற தந்தை புரிந்து கொள்ளவில்லை. தாய் புரிந்து கொள்ளவில்லை. மந்திரி புரிந்து கொள்ளவில்லை.)

மரவுரி தரித்து வனம் செல்கிறான் பரதன். அவன் வருகிறான் என்ற செய்தி கேட்டதுமே, கொதித்தெழுகிறான் குகன். அவனது வீரர்களை அழைத்து "போருக்கு தயாராகுங்கள். இந்த பரதனை அடித்து விரட்டுவோம் என்றெல்லாம் சொல்ல, வேட்டுவ குல வீரர்களோ எதுவுமே பேசாமல் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்களை உற்சாக படுத்த பலவாறு வீர உரை ஆற்றுகிறான் குகன்.ஆனால் அவர்களோ போருக்கு தயாராக வில்லை (காரணம் கடைசியில் வருகிறது)

பரதன் வரும் சேதி ராம லட்சுமணர் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேருகிறது. கொதித்தெழுகிறான் லட்சுமணன் . அவனை உண்டு இல்லைன்னு பார்த்து விடுகிறேன் என்று லட்சுமணன் பொங்கி எழ ( பரதனைப் பெற்றவள், ராமனை காட்டுக்கு ஓட்டிவிட்டாலென்றால், மகன் இங்கு வந்து தொல்லை கொடுக்க வருகிறானோ என்கிற ஆத்திரம் லட்சுமணனுக்கு) அவனுடைய ஆத்திரத்துக்கு அணை போட்டு அடக்கி வைக்கிறான் ராமன்.

பரதனை பார்த்ததும், எதுவுமே பேசாமல் முகம் திருப்பி நிற்கிறாள் சீதை.

எந்த அண்ணனுக்காக தாயிடம் சண்டை போட்டுவிட்டு வந்தானோ, அந்த அண்ணன் கேட்கிறான் " தம்பி,அரியணை சுகமளிக்கிறதா?" என்று. அந்தவகையில் இராமன், பரதனைப் புரிந்து கொள்ளவில்லை.

அப்படிஎன்றால் பரதனை சரியாக புரிந்து கொண்டவர் யார்தான் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழத்தானே செய்கிறது. அதற்கான விடை.

பரதனை மிக சரியாக, பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவர்கள், குகனுடைய படை வீரர்கள்தான். ( பரதன் கூடவே இருந்து பழகியவர்களுக்கு தெரியாமல் போன ஒரு விசயத்தை, படிப்பறிவில்லாத காட்டுவாசிகள், ஒரே ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்டார்கள்.) அதாவது, பரதன் வருவது கண்டு கோபம் கொண்ட குகன் (படகோட்டி) பரதனை விரட்டி அனுப்ப, போருக்கு தயாராகும்படி சொல்லி வீரவுரை ஆற்ற, எந்தவொரு reaction ணும் இல்லாமல் படை வீர்கள் நிற்பதுகண்டு அதற்கான காரணம் கேட்கிறான் குகன். ஏனென்றால் தலைவன் எட்டடி பாய்ந்தால், இவர்கள் பதினாறு அடி பாயத் தயாராக நிற்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் இன்று அமைதியாக நிற்கக் கண்டு காரணம் கேட்கிறான் குகன். அவர்கள் சொல்கிறார்கள் : " வருகிறவனைப் பார்த்தால் சண்டைக்கு வருகிறவன் மாதிரி தெரியலையே. போருக்கான எந்த ஆயுதமும் இல்லை. இவனும் நமது தலைவன் இராமன் மாதிரி மரவுரி கட்டியல்லவா வந்திருக்கிறான். போருக்கு வருபவன் மரவுரி கட்டி சந்நியாசி மாதிரியா வருவான்?" என்று கேட்கிறார்கள். அப்போதுதான், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு அமைதி நிலைக்கு வரும் குகன், ஓடி சென்று, பரதனை, ராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறான்.


ஆக மொத்தத்தில், பரதனை மிகச் சரியாக புரிந்து கொண்டது, படிப்பறிவில்லாத பாமர, வனவாசிகள்தான்.


( இந்த கட்டுரையை, அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்பாகிக் கொண்டிருந்த " இன்று ஒரு தகவல்" பகுதிக்கு எழுதி அனுப்பி இருந்தேன். இது பல வருடங்களுக்கு முன்பே வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பாக ஒரு உபன்யாச உரையில் கேட்டது. உபன்யாச உரை ஆற்றியவர் (மறைந்த) புலவர் கீரன் அவர்கள் )

Return to "பரதன் (திரைப்பட இயக்குநர்)" page.