பரோட்டா வடநாட்டு உணவு என இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வடநாட்டு உணவுதான் என்பதற்கு சான்றுகள் ஏதும் உள்ளனவா?

எனக்குத்தெரிய சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா உட்பட ஹொங்கொங் போன்ற நாடுகளில் "பரோட்டா" சுடும் சமையல்காரர்களை தமிழ்நாட்டில் இருந்தே அழைக்கப்படுகின்றனர். ஹொங்கொங், சீனா போன்ற நாடுகளில் சாதாரண சமையல் காரர்களை விட மிகவும் அதிகமான ஊதியத்தைப் பரோட்டா சுடுபவர்கள் பெருகின்றனர். மேலும் ஹொங்கொங்கில் தமிழர் உணவகங்களை விட அதிகமான எண்ணிக்கையில், பாக்கிசுத்தானியர் மற்றும் வடயிந்தியர் உணவகங்களே உள்ளன. அக்கடைகள் எல்லாவற்றிலும் பரோட்டா இல்லை. ஒரு சில கடைகளில் இருந்தாலும் அதில் தமிழ்நாட்டு தமிழர்களே பரோட்டா சுடுகின்றனர். வடயிந்திரிடம் கேட்டப்பொழுது அவர்கள் "பரோட்டா" மதாராசி உணவு என்கின்றனர்.

அதேபோன்று, சீனாவில் எனக்குத்தெரிய நூற்றுக்கணக்கான உணவகங்களில் பரோட்டா சுடுவதற்கு என்றே, தமிழ்நாட்டு தமிழர்கள் வருவிக்கப்பட்டு வேலை செய்கின்றனர். அங்கே சாதாரண ஒரு சமையல்காரரின் மாதம் ஊதியம் 450 முதல் 600 RMB பெரும் அதேவேளை, பரோட்டா சமையலார் ஒருவர் 5000 - 8,000 RMB பெருகின்றனர். அவர்களில் ஒருவரும் வடயிந்தியர் இல்லை. --HK Arun 15:56, 18 ஏப்ரல் 2011 (UTC)

இந்திய உணவக நூல்களில் இருந்து பிறகு எடுத்துத் தருகிறேன். (பார்த்திருக்கிறேன், தற்போது கைவசம் இல்லை. தேடி எடுக்கவேண்டும்). பரோட்டா தமிழர்களால் பெரும் வரவேற்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது உணவாகவே ஆகிவிட்டது. கோதுமைப் பற்றாக்குறையால், மைதா பயன்பாடு அதிகமான போது, நாம் இதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்--சோடாபாட்டில்உரையாடுக 04:29, 19 ஏப்ரல் 2011 (UTC)

A Parotta or Barotta, is a common layered flat bread of Southern India. This is not to be confused with the North Indian Paratha. ஆங்கில விக்கிப்பீடியாவைப் en:Parotta பார்க்கவும் --HK Arun 13:14, 19 ஏப்ரல் 2011 (UTC)

வட இந்தியாவில் தோன்றியது என்பதை நீக்கி விட்டேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் அக்கட்டுரையில் தற்போது சான்றுகள் இல்லை. எனவெ உறுதியாக தமிழக உணவு என்று எழுத இயலவில்லை. நூலகத்திற்கு செல்லும் போது இது குறித்து சான்றுகளைத் தேட முயலுகிறேன். (பரோட்டா/பராத்தா ஒரே விதமான உணவு வகையிலிருந்து தோன்றியவை என்பது என் புரிதல், இரண்டும் ஒரே குடும்பம் என்பது போல சில பக்கங்கள் சொல்லுகின்றன. [1][2][3])--சோடாபாட்டில்உரையாடுக 15:57, 19 ஏப்ரல் 2011 (UTC)

பராத்தாவும் புரோட்டாவும்

தொகு

பராத்தா (வட இந்தியா) - முழுக்க முழுக்க கோதுமை மாவினால் செய்யப்படுவது. plain பராத்தா என்பது அப்படியே நமது ஊர் சப்பாத்தி போலவே இருக்கும். ஆலூ, கோபி, மெத்தி எனப் பலவகைகள் உண்டு. இவற்றுள் லச்சா பராத்தா பார்க்க நமது ஊர் புரோட்டா போல இருக்கும்.

புரோட்டா-தென்னிந்தியா - முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படுவது. (மைதா உடலுக்கு நல்லதன்று).--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:45, 8 திசம்பர் 2013 (UTC)Reply

கடலூர் பரோட்டா

தொகு

கட்டுரையில் கடலூர் பரோட்டா செய்முறை, எவ்விதத்தில் பரோட்டா செயல் முறையிலிருந்து மாறுபடுகிறது எனத் தெரியவில்லை. அப்பகுதியை நீக்கலாம் எனக் கருதுகிறேன்.--இரா. பாலா (பேச்சு) 03:00, 13 சூன் 2017 (UTC)Reply

இக்கட்டுரையின் தலைப்பை புரியடை என பெயர் சூட்டலாம் காண்க இங்கு  அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 10:46, 28 சூன் 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரோட்டா&oldid=2320978" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பரோட்டா" page.