பேச்சு:பலமனைவி மணம்

தமிழ்நாட்டில் காணப்படும் நடைமுறைக் காரணங்கள் சில:

  • கூடுதல் மனைவிகள் -> கூடுதல் குழந்தைகள் - > கூடுதல் உழைப்பாளிகள், வருவாய் ஈட்டுவதற்கான வழி
  • முதல் மனைவி உடல்நலம் குன்றுவதால் வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் கவனிக்கவும் இரண்டாம் மனைவி கட்டுகின்றனர்.
  • முதல் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லாத போது
  • முதல் மனைவிக்கு குழந்தையே இல்லாத போது
  • முதல் மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகு முந்தைய குழந்தைகள் இறந்தால், ஆண் குழந்தை இறந்தால் வாரிசுகள், ஆண் வாரிசு பெறுவதற்காக அடுத்த மணம் புரிதல்.

இத்தகைய திருமணங்களில் அக்கா, தங்கைகளே மனைவிகளாக அமைவதும் உண்டு.

இவை பொருத்தமாகத் தோன்றினால் கட்டுரையில் சேர்க்கலாம்--ரவி 20:40, 18 ஜூலை 2008 (UTC)

ரவி நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே. முதல் இரண்டு காரணங்களயும் ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏனையவை குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவுகளுக்கான காரணங்கள். ஒரு சமுதாயத்தில் காணப்படும் பல மனைவி மண முறைமைக்கான காரணங்கள் அல்ல. மயூரநாதன் 20:49, 18 ஜூலை 2008 (UTC)

நான் அறிந்தவர்களில் 2+ :) மனைவிகள் வைத்திருப்பவர்களை ஆய்ந்து பார்த்தால் மேற்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று வந்தது. ஆய்வு நோக்கில் எந்தக் காரணங்கள் பொருந்துமோ அவற்றை மட்டும் கட்டுரையில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி--ரவி 21:10, 18 ஜூலை 2008 (UTC)

பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம் நூலில் மிகவும் விரிவான நேர்த்தியான தகவல்கள் கிடைக்கின்றன. தற்போது இந்த நூல் என்னிடம் இல்லை. --Natkeeran 23:15, 18 ஜூலை 2008 (UTC)


தலைப்புதொகு

பலதார மணம் என்றே இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:05, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

தாரம் தமிழ்ச் சொல்லா? இல்லை என்றே நம்புகிறேன். இல்லாவிடில் வழிமாற்றாக வைத்திருக்கலாம், கட்டுரையிலும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:13, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
இக்கட்டுரை பல பெண்களை திருமணம் செய்வதைக் குறிக்கதால், பலதார மணம் பலதுணை மணம் என்பதற்குப் பொருந்தும். --AntanO 07:49, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலமனைவி_மணம்&oldid=2022592" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பலமனைவி மணம்" page.