பேச்சு:பழங்களின் பட்டியல்

ஈச்சம்பழத்துக்கு ஆங்கிலம் என்ன? --Natkeeran 02:38, 9 நவம்பர் 2011 (UTC)Reply

பேரீச்சம்பழம் = Date fruit. ஈச்சம்பழம் என்று பேரீச்சையைத்தான் இப்போது மக்கள் பிழையாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், ஈச்சை என்பது ஒரு சிறிய தாவரம். அதன் பழங்கள் பேரீச்சம் பழங்களைப் போலவே சுவையும் சதையின் தன்மையும் கொண்டது. ஈச்சைத் தாவரத்தின் உருவமும் கிட்டத்தட்ட பேரீச்சையை ஒத்திருப்பினும் அது மிகச் சிறியது. அது தவிர ஈந்து என்று இன்னுமொரு பழ மரம் உள்ளது. இலங்கையின் கிராமப் புறங்களில் சிறுவர்கள் ஈச்சம்பழம் மற்றும் ஈந்துப் பழம் போன்றவற்றைப் பறித்து உண்பதுண்டு. இந்தியாவில் எப்படி என்பது சரியாகத் தெரியவில்லை.--பாஹிம் 02:54, 9 நவம்பர் 2011 (UTC)Reply

விளக்கத்துக்கு நன்றி. ஆனால் இங்கு] வேரு ஒரு பழமாகத்தான் குறிப்பிடுகிறார்கள் போல் தெரிகிறது.--Natkeeran 03:07, 9 நவம்பர் 2011 (UTC)Reply
நீங்கள் சுட்டிய தளத்தில் ஈஞ்சு என்று குறிப்பிட்டிருப்பது ஈச்சையைத்தான். எனினும் ஈச்சை என்பதுதான் பொதுவான வழக்கு. அது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இலங்கையின் ஏனைய உலர் வலயப் பகுதிகளிலும் உள்ளது. நான் ஈச்சைத் தாவரத்தைப் பார்த்தும் அதன் பழங்களை உண்டுமிருக்கிறேன்.--பாஹிம் 03:14, 9 நவம்பர் 2011 (UTC)Reply

இங்கு அம்பறெல்லா என்ற சிங்களச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கிறேன். அதன் தமிழ்ப் பெயர் மாங்காய்நாரி என்பதாகும்.--பாஹிம் 03:01, 9 நவம்பர் 2011 (UTC)Reply

Return to "பழங்களின் பட்டியல்" page.