பேச்சு:பாடல் பெற்ற தலங்கள்

இப்பகுப்புக்குள் அடங்கும் கோயில்கள் தொடர்பான விபரங்களை ஒரு சிறு நினைவு நூலிலிருந்தே பெற்றேன். தலங்களின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருப்பின் பொருத்தமான மாற்றங்கள் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடல் பெற்ற தலங்களில் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்கள் எவை என்பது தொடர்பான விபரங்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும். பின்னர் விக்கிமூலத்தில் குறித்த பதிகங்கள் சேர்க்கப்படும்போது அவற்றுக்கான இணைப்பைக் கொடுத்தல் வேண்டும். கோயில்கள் தொடர்பான குறுங்கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கவுள்ளேன். கோபி 11:34, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, பாடல் பெற்ற தலமென்றால், தேவாரத்தில் அத்தலம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமா அல்லது சமயக்குரவர்களே அக்கோயிலுக்குச் சென்று அப்பாடலை பாடியிருக்க வேண்டுமா? இலங்கையில் உள்ள கோயில்களும் பாடல்கள் பெற்றிருப்பதால் இந்த ஐயம்.--ரவி 12:26, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

குறித்த தலத்தின் மீது பாடல் பாடப்பட்டிருப்பின் அது பாடல் பெற்ற தலம்தான். பெரும்பாலும் பாடல்களில் தலப்பெயர் இருப்பதை அவதானிக்கலாம். --கோபி 13:11, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

(இணைக்கப்பட்டது) பெருந்தகை சோடாபாட்டில்!
தொகுப்பாய்க் கிடந்த ஊர்களை எண்ணிட்டுச் செம்மைப்படுத்தியுள்ளீர்கள்.
எனது பணியை எளிமையாக்கித் தரும் தங்களின் தொண்டுக்கு எளியேன் கடப்பாடு

பாடல் பெற்ற தலங்கள் என்னும் தலைப்பு இதற்குப் பொருந்தாது. நான்கூட புகழூரிலுள்ள ஆறுநாட்டான் மலைக்கோயில் மீது 'ஆறுநாட்டான் உலா' என்னும் சிற்றிலக்கியம் படைத்துள்ளேன். நாமக்கல் வட்டம் மோகனூரிலுள்ள உமையம்மை மீது 'கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்' என்னும் இலக்கியம் படைத்துள்ளேன். இவையெல்லாம் பாடல்பெற்ற தலங்கள் அல்லவா?

எனவே தேவாரத் திருத்தலங்கள் வேறு, பாடல் பெற்ற தலங்கள் வேறு. இரண்டும் தனித்தனியே இருந்துவிட்டுப் போகட்டும்

இவற்றையும் பார்க்க என்று இரண்டிலும் இணைப்பு காட்டிவிடலாம் --Sengai Podhuvan 22:53, 3 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இன்று உலகில் உள்ள அனைத்து சைவக் கோயில்களும் ஒரு வகையில் பாடல் பெற்ற தலங்களே. ஆனாலும் "பாடல் பெற்ற தலங்கள்" என நம் முன்னோர் குறிப்பிடுவது "தேவாரத் திருத்தலங்களே". எனவே பாடல் பெற்ற தலங்களுக்கு தனிக் கட்டுரை தேவையில்லை (உலகின் அனைத்துக் கோயில்களும் பட்டியலிட வேண்டி வரும்). பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையை தேவாரத் திருத்தலங்கள் கட்டுரையுடன் இணைப்பதே சிறந்தது.--Kanags \உரையாடுக 23:28, 3 செப்டெம்பர் 2011 (UTC)Reply

கவன ஈர்ப்பு (உடன் வேண்டுகோள்)

தொகு
  • பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையில் பாடல் பெற்ற முருகன் கொயில்கள் பல இருந்தன. இந்தப் பொருத்தமற்ற வழிமாற்றத்தால் அவை அழிந்துபின.
  • பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையில் ஆறுநாட்டான் மலை, மோகனூர் முதலான பிற்காலப் பாடல் பெற்ற ஊர்ப் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அவை அழிந்துபோயின.
  • தேவாரத் திருத்தலங்களும், வைணவ 108 திருத்தலவகளும் 9 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில்கள். பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையில் பிற்காலக் கோயில்களும் இருந்தன. அவற்றைப் பகுத்துக் காட்டுவதை விடுத்து சற்றும் வரலாற்று நோக்கு இல்லாமல் மறைக்கப்பட்டுள்ளன. பழையதை மீட்டு இந்தப் பகுப்பினை அறிஞர்கள் செய்வார்கள் என நம்புகிறேன்.
  • எதிர்காலத்தில் பேச்சுப் பகுதியில் கூறப்பட்டுள்ள செய்திகளையும், கட்டுரையிலுள்ள செய்திகளையும் நன்றாக அலசிப் பார்த்து இணைப்புகளைச் செய்யுமாறு வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:49, 3 மார்ச் 2013 (UTC)
Return to "பாடல் பெற்ற தலங்கள்" page.