பேச்சு:பாறசாலை சட்டமன்றத் தொகுதி
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
பயனர்:Uksharma3, പാറശ്ശാല என்பதை பாறஷ்ஷால/பாறஸ்ஸால என்று எழுத்துப்பெயர்ப்பு செய்யலாம். தமிழில் பாறசால என்று எழுதுவது சரியாக இருக்கும். பாறை, சாலை ஆகியவற்றின் கூட்டுச்சொல்லே இது. பரஸ்சால என்று குறிப்பிடுவது தவறாகும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:45, 5 திசம்பர் 2020 (UTC)
- மலையாளத்தில் சில இடங்களில் പ ப என்றும் சில இடங்களில் പാ பா என்றும் எழுதியுள்ளார்கள். விக்கி மலையாளக் கட்டுரையில் பா என்றே எழுதப்பட்டுள்ளது. ஆகவே ப என்பதை பா என்று மாற்றலாம். ஆனால் பாரஸ்ஸால என்று தான் வரும். (வேண்டுமானால் ஸா வை சா என எழுதலாம்) ஸ் தமிழா இல்லையா என்பது தமிழ் விக்கியில் எப்போதும் பிரச்சினையாகவே உள்ளது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கோட்டில் ஸ் என்பது தமிழ் எழுத்துகளுடன் தான் இருக்கிறது. இதை சிலர் வடஎழுத்து என்று தவறாக (எந்த அடிப்படையுமின்றி) சொல்கிறார்கள். வடக்கில் இந்த எழுத்து யாருக்கும் தெரியாது. உண்மையில் இது வடமொழியைத் தமிழில் எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்தே. தமிழ் எழுத்து என்பதே காலத்துக்குக் காலம் தோற்றம் மாறிவந்துள்ளது. இப்போதுள்ள தமிழர்களால் சோழர் கல்வெட்டுகளைப் படிக்க முடியாது. ஆகவே எது தமிழ் எழுத்து என்பதை யார் வரையறை செய்வது? இன்றைய நிலையில் கணினியே பெருமளவு பயன்படுத்தப்படுவதால் கணினி ஒருங்கோட்டில் காணப்படும் எழுத்துக்களே தமிழ் எழுத்துகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஒருங்கோட்டு முறையை தமிழ் புழக்கத்தில் உள்ள எல்லா நாட்டு அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆயினும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் (வேறு உள்நோக்கத்துடன்) இதனை எதிர்த்து அவற்றை வட எழுத்து என்று கூறி வருகின்றனர். அப்படி அது தமிழ் எழுத்து இல்லையென்றால் அதனை ஒருங்கோட்டிலிருந்து நீக்க யாராவது ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்றால் இல்லை. தமிழ் விக்கியிலும் சிலர் இந்த ஆதாரமில்லாத கோட்பாட்டை வைத்துக்கொண்டு ஸ் போன்ற எழுத்துகளை எழுதக்கூடாது என்று சொல்கின்றனர். ஆனால் தமிழகத்தின் முக்கிய தலைவர் ஒருவரின் பெயரே ஸ் எழுத்துடன் தான் தொடங்குகிறது. தமிழ் விக்கியிலுள்ள அவரைப்பற்றிய கட்டுரையின் தலைப்பே ஸ் எழுத்தில் தான் தொடங்குகிறது. அதனை மாற்ற ஒருவரும் முன்வரவில்லை. தமிழ் விக்கியில் இந்த இரட்டை நிலைப்பாட்டினால் வேறு கட்டுரைகளில் இடங்கள், மனிதர்களின் பெயர்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் கட்டுரையில் ஜோ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கமலா ஹாரிஸ் மட்டும் கமலா ஆரிசு என எழுதப்பட்டுள்ளது. ஜோ பயன்படுத்த முடியுமானால் ஹா, ஸ் ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை.
தமிழ் விக்கியின் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு யாரிடமிருந்தாவது தகுந்த பதில் கிடைக்கிறதா என எதிர்பார்க்கிறேன்.--UKSharma3 உரையாடல் 02:22, 6 திசம்பர் 2020 (UTC)
- இது கிரந்தப் பிரச்சனை இல்லை. நீங்கள் பா என்பதை ப என்றும், றகரத்தை ரகரமாகவும், ஸ்சா என்ற ஒவ்வாத கூட்டெழுத்துக்களையும் ('பரஸ்சால') குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே நான் சுட்டினேன். பாறையே மலையாளத்தை பாற என்றாகிறது என்று நான் விளக்கம் கொடுத்துவிட்டேன். நீங்கள் மீண்டும் பாரஸ்ஸால என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சோலை மலையாளத்தில் ஷோலா ஆகிறது. தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் உள்ள இடங்களில் தமிழ்ப்பெயர்களில் சகரம் சில இடங்களில் ஷகரமாக மலையாளத்தில் இடம்பெறும். கேரளத்திலும் கூட பல தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருத இலக்கணப்படியே எழுதப்படுகின்றன. எ.கா: (திருசிவப்பேரூர் -> த்ருஸ்ஸூர், புதுச்சேரி-> புதுஷ்ஷேரி, செறுமண்ணூர் -> ஷொறணூர்). மேற்சொன்ன விளக்கத்தைக் கூட விடுங்கள். எல்லைப்பகுதியில் உள்ள இடங்கள் தமிழிலும் மலையாளத்திலும் சில வேறுபாடுகளுடனே எழுதப்படுகின்றன. இந்த இடம் தமிழ்நாட்டு எல்லையில் உள்ளது என்பதையும், பாறசாலை என்று குறிப்பிடும் வழக்கம் தமிழில் உண்டு என்றும் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாறசாலை என்று எழுதினாலும் தவறில்லை. இதில் கிரந்தச் சிக்கல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:59, 25 திசம்பர் 2020 (UTC)