பேச்சு:பாலுணர்வுக் கிளர்ச்சியம்

தலைப்பை பாலியல் தூண்டல் இலக்கியம் எனலாமா? வேறு நல்ல மொழிபெயர்ப்பு தெரிந்தால் பரிந்துரையுங்கள். த.இ.ப. இழிபொருள் இலக்கியம் என்கிறது, எனக்கு முழு ஏற்பு இல்லை. -- சுந்தர் \பேச்சு 08:21, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

பாலியற் தூண்டல் இலக்கியம் என்பது erotica என்பதற்கே பொருந்தி வரும் என நினைக்கிறேன். ஆபாசம் என்பது - ஆபாச இலக்கியம், ஆபாசத் திரைப்படம் எனப் பொருந்தி வருமென்றே படுகிறது. ஆனால் ஆபாசம் என்ற சொல்லின் பொதுப் பயன்பாடு காரணமாகவே அத்தலைப்பிலிருந்து நகர்த்தினேன். பொருத்தமான வேறு சொற்கள் இல்லையெனின் ஆபாசம் என்றே பயன்படுத்தலாமா? கோபி 08:24, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

ஆபாசம் என்ற சொல்லின் பொதுப் பயன்பாடு என்ன? --Natkeeran 00:32, 29 செப்டெம்பர் 2008 (UTC)Reply

தமிழ் என்ன? --Natkeeran 15:37, 17 ஏப்ரல் 2010 (UTC)

போர்னோகிராபி தமிழல்லவே@. ஆபாச செயல்களை கணினி, திரைப்படம், கைப்பேசி என்று தொழில் நுட்பம் மூலம் பயன்படுத்துவதையே போர்னோகிராபி என்கின்றார்கள். தமிழில் தொழில்நுட்ப முறையிலான ஆபாசம் என்று வைக்கலாமே@..

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

பாலுணர்வுக் கிளர்ச்சியம் அல்லது பாலுணர்வுக் கிளர்ச்சியியல் எனப்பொதுவாக சொல்லலாம் எனினும், கோடிய பாலுணர்வுக் கிளர்ச்சியம் என்று சேர்த்துச் சொல்வது பொருந்தும். கோடிய என்றால் வளைந்த, பிறழ்ந்த என்னும் பொருள் தரும் ஆனால் அது "நடுநிலை" அற்ற சொல்லாக்கம் என சாடக்கூடும். அப்படியெனில் மிகுபாலுணர்வியம் எனலாம். ஆனால் இதனை hypersexuality, sex addition என்பது போன்ற உள நிலைகளைக் குறிப்பதில் இருந்து வேறு படுத்திக் காண வேண்டும் (http://www.informaworld.com/smpp/content~db=all?content=10.1080/10720160802289249). மார்ட்டின் காஃவ்க்கா (http://en.wikipedia.org/wiki/Martin_Kafka) இதனைப்பற்றி ஒரு கனடிய வானொலி நிகழ்வில் அவரே கூறக்கேட்டுள்ளேன். அமெரிக்க உளவியல் குமுகாயம் (American Psychiatric Association (APA)) இவற்றை விரிவாகக் கூறுகின்றது என்றார். அவர்கள் வெளியிடும் உளநோய்க் குறைபாடுகளுக்கான தேர்முறை மற்றும் புள்ளியியல் கையேடு (Diagnostic and Statistical Manual of Mental Disorders, or DSM) (உநோ.தே.பு.கை, சுருக்கமாக தேபுகை)இவை பற்றி விளக்கி உள்ளார்களாம். வன்பாலுணர்வுக் கிளர்ச்சியம் என்றும் கூறலாம்.--செல்வா 02:54, 6 சனவரி 2011 (UTC)Reply

”பாலுணர்வுக் கிளர்ச்சியம்” என்பதே நன்பு பொருந்தி வருகிறது. கொடிய/வன்பாலுணர்ச்சி இரண்டுமே நடுநிலையற்றவை. “மிகு” என்பதும் நடுநிலையற்றது தான் (போர்னோகிராஃபி என்பது சாதாரணமானது. இயல்பு/இயற்கை நிலைக்குப் புறம்பனதல்ல). hypersexuality, sex addiction என்பதற்கும் சாதாரண pornography என்பதற்கும் நெடுந்தூரம். நாம் உருவாக்கும் கலைச்சொல்லில் judgemental வாடை அடிக்கக் கூடாதென்பது என் எண்ணம் (ஆபாசம் என்பதைப் போல). --சோடாபாட்டில்உரையாடுக 03:05, 6 சனவரி 2011 (UTC)Reply

மிகச்சரியான கலைச்சொல்லை பயன்படுத்தியிருக்கின்றீர்கள். நான் சில தகவல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்ய விரும்புகிறேன். கட்டுரையை விரிவு செய்ய உதவுங்கள்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இது மிகவும் பெரிய செயற்கைச் சொல்லாக இருக்கிறது. ஆபாசம் என்ற பொது வழக்கில் உள்ள சொல்லே பொருத்தமான சொல்லாகப் படுகிறது. --Natkeeran 03:51, 4 பெப்ரவரி 2011 (UTC)
ஆபாசம் என்பது கலாச்சார ஜட்ஜ்மெண்ட்டோடு இருக்கிறதே. மெலும் obscenity என்ற பொருளில் பயன்படுகிறது. obscenity /porn/erotica/அசிங்கம்/காணச் சகியாதவை எல்லாவற்றுக்கும் “ஆபாசம்” என்று ஒட்டு மொத்தமாக ஒரே வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள். தனியே பிரித்துக் காட்ட வேண்டிய நிலை உள்ளது. கிளர்ச்சியம் என்று வேண்டுமானால் வழக்கில் சுருக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:00, 4 பெப்ரவரி 2011 (UTC)
காமம், சிற்றின்பம், பாலின்பவியல்/பாலின்பக் கலைகள், ஆபாசம் என்று பல சொற்கள் உள்ளன. எல்லாமே தனிமனித, அல்லது பண்பாட்டு மதிப்பீடே. கிளர்ச்சியம் என்று சொல்வதிலும் சிக்கல் உள்ளது. கிளர்ச்சி ஒரு பொதுச் சொல். ஆபாசம் என்பதற்கு பொதுவில் தரப்படும் பொருள், ஆங்கிலச் சூழலில் பொருந்தி வரவில்லை என்பதும் சரியே. சிக்கலாகாவே உள்ளது. --Natkeeran 04:16, 4 பெப்ரவரி 2011 (UTC)
Return to "பாலுணர்வுக் கிளர்ச்சியம்" page.