பேச்சு:பிறவிச்சுழற்சி

வேறு ஒரு விளக்கம்தொகு

ஒரு பயனர் சம்சாரம் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தந்திருந்தார். இந்த விளக்கம் பொருந்தவில்லை. --Natkeeran 15:38, 7 டிசம்பர் 2008 (UTC)

மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்காக இந்து மதம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் மோட்சம் ஆகும். இதில் முதல் மூன்று இலக்குகளை அடைந்திடும் பருவத்திற்கு சம்சாரம் என்று பெயர். சம்சார வாழ்வின் சாரம் என்னவென்றால் : அற வழியில் நடந்து ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும். மனைவி மக்களோடு தூய இல்லற வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று இன்பத்தினை துய்க்க வேண்டும். இதனால் இவற்றுக்கு பெயர் 'தர்ம அர்த்த காம' தேடல்கள் என்று.

சம்சார வாழ்க்கையில் நன்கு பக்குவப்பட்ட பின், ஒருவர் அடுத்த நிலையான துறவு நிலைக்கு தயாராகிறார். துறவு நிலையில் அடுத்த இறுதி இலக்கான மோட்ச நிலைக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். சம்சார வாழ்க்கையில் ஒருவர், வாழ்க்கையை முழுதுமாக வாழ்வதில் தன் மனதை செலுத்துகிறார். துறவுக்காக அவர் சம்சார வாழ்க்கையில் வாழ்வதில்லை. தானாக மனம் பக்குவப்பட்டு, துறவுக்கு தயார் செய்யுமே தவிர சம்சார வாழ்க்கையில் துறவைப் பற்றி நினைப்பதில்லை. இந்த வகையில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானது எனச் சொல்லலாம்.

Return to "பிறவிச்சுழற்சி" page.