பேச்சு:புல்வாய்

புல்வாய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
புல்வாய் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

புல்வாய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை விரிவாக, ஆதாரங்களுடன், உயிரோட்டம் மிக்கதாக இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளைத் தமிழ் விக்கியில் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுகள் கார்த்திக். தூண்டுமுட்சுரப்பு என்றால் என்ன?--ரவி 22:54, 22 ஜூலை 2008 (UTC)

நன்றி ரவி :-) தூண்டுமுட்சுரப்பு என்றால் hormone. --கார்த்திக் 05:48, 23 ஜூலை 2008 (UTC)

தூண்டுமுட்சுரப்பு என்ற சொல்லைக் கேள்விப்பட்டத்தில்லையே? சுரப்பி என்ற சொல் தான் பரவலான பயன்பாட்டில் உள்ளதே?--ரவி 14:11, 23 ஜூலை 2008 (UTC)

இது "stimulating hormone" என்பதை குறிக்கின்றது. இதையும் பார்க்கவும் http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=hormone&OptSearch=&id=All&text2=&text1=&link=http%3A%2F%2Fwww.tamilvu.org%2Flibrary%2Fo33%2Fhtml%2Fo3300001.htm&cat=null&book=null இச்சொல் குழப்பம் ஏற்படுத்துமெனில் மாற்றிக்கொள்ளலாம் :-) --கார்த்திக் 14:22, 23 ஜூலை 2008 (UTC)

கூகுளில் தேடியதில் ஒரு இடத்திலும் காணவில்லை. எத்தனை சொற்கள் அகரமுதலிகளில் உறங்குகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு :( தூண்டு சுரப்பிகள் என்று சொன்னால் தெளிவாகப் புரிவது போல் இருக்கிறது--ரவி 17:31, 23 ஜூலை 2008 (UTC)

ஆம் ரவி:-) தூண்டு சுரப்பிகள் என்பது எளிதாக இருக்கிறது. இதை தூண்டு சுரப்பிகள் என்றே மாற்றிவிடுகிறேன். நன்றி ரவி --கார்த்திக் 17:51, 23 ஜூலை 2008 (UTC)

தூண்டு சுரப்பிகள் = Stimulating Glands ; தூண்டு சுரப்பை = Stimulating Hormone --கார்த்திக் 17:55, 23 ஜூலை 2008 (UTC)

வியத்தி வரலாறு தொகு

வியத்தி வரலாறு?? (விருத்தி வரலாறு?)--சிவக்குமார் \பேச்சு 16:21, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply

என்ன பொருளில் வியத்தி என்று கார்த்திக் ஆண்டுள்ளார் என்று விளங்கவில்லை. வியத்தி என்றால் வெளிப்படையாக தோன்றுவது. சமசுகிருத சொல்லாகிய வியக்தி (வ்யக்தி) என்னும் சொல்லின் தமிழ்வடிவம். ஆனால் இங்கு கார்த்திக் என்ன பொருளில் ஆண்டுள்ளார் என்ரு தெரியவில்லை.--செல்வா 18:21, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கட்டுரையைப் படித்தால் வியத்தி வரலாறு என்பது ஒரு விலங்கினம் பருவம் எய்துவது முதற்கொண்டு இனப்பெருக்கம் தொடர்பானவற்றைத் தொட்டுச் செல்வது போல் உள்ளது. பருவ வரலாறு எனலாமா?--ரவி 21:00, 11 மே 2009 (UTC)Reply

தலைப்பும் வாழிடமும் தொகு

இதன் பரவலாக வழங்கும் பெயர் கலைமான் தானா? இப்படியென்றால் வெளிமான் பக்கத்திலிருந்து மாற்றுவழி தர வேண்டும். ஏனெனில் வல்லநாடு காப்பகத்தை வல்லநாடு வெளிமான் காப்பகம் என்றே குறிக்கின்றனர். மேலும், இதன் வாழிடத்தில் வல்லநாடு காப்பகத்தையும் சேர்க்கலாமல்லவா? -- சுந்தர் \பேச்சு 09:30, 27 ஏப்ரல் 2009 (UTC)

இம்மானிற்கு வெளிமான், திருகுகொம்பு மான், புல்லாய் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்கள் உண்டு சுந்தர். இவ்விலங்கின் பெயரை பல மொழிகளில் (மராட்டி, கன்னடம், இந்தி) கேட்டுள்ளேன். தமிழ் பெயர்கள் மட்டுமே இதனுடைய உடலமைப்பையோ அல்லது வாழிடத்தையோ குறிக்கிறது, வேறு மொழிகளில் எல்லாம் கிருட்டிணனுடன் உள்ள தொடர்பே !

இதன் வாழிடத்தில் வல்லநாடு காப்பகத்தையும் சேர்க்கலாம்--கார்த்திக் 15:09, 27 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி, கார்த்திக். -- சுந்தர் \பேச்சு 17:43, 27 ஏப்ரல் 2009 (UTC)
கலைமான் என்பது ஆண்மான் என்னும் பொருள் உள்ளதையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். கலை என்றாலே ஆண்மான். கலையும் பிணையும் என்றால் ஆண் மான், பெண் மான். மானின் குட்டிக்கு மறி (மான் மறி) என்று பெயர். இப் பெயர்களையெல்லாம் நாம் போற்றி கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும், கலை என்றால் என்ன, பிணை என்றால் என்ன, மறி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். --செல்வா 17:48, 27 ஏப்ரல் 2009 (UTC)
ஓ. மேலும், தொல்காப்பியத்தில் உள்ள இரலையுங் கலையும் புல்வாய்க்குரிய என்ற பாவுக்கு இரலை, கலை என்னும் ஆண்பால் பெயர்கள் புல்வாய் எனும் மானினத்துக்கு உரியன என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அப்படியெனில் கட்டுரையின் தலைப்பு புல்வாய் அல்லது வெளிமான் என்றிருக்க வேண்டும். உரையில் இவ்வின ஆண்பால் விலங்குகளைக் கலைமான் என்றும் இரலை என்றும் அழைப்பர் எனலாம். அவ்விலங்கினத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவ வேறுபாடு மிகுந்ததால் தனிச் சொற்கள் வெகுவாகப் புழங்கியிருக்கக் கூடும். -- சுந்தர் \பேச்சு 17:58, 27 ஏப்ரல் 2009 (UTC)
ஆமாம் சுந்தர். கலை என்பது ஆண் மானின் கிளைத்த கொம்பின் பெயர் அடிப்படையில் எழுந்த பெயர். கலை என்பது ஆண் மானின் கொம்பால் வந்த பெயர். --செல்வா 18:04, 27 ஏப்ரல் 2009 (UTC)
கார்த்திக், உங்களுக்கு மறுப்பில்லை என்றால் தலைப்பை மாற்றிவிடலாம். உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். -- சுந்தர் \பேச்சு 18:07, 27 ஏப்ரல் 2009 (UTC)
எனக்கு மறுப்பேதுமில்லை சுந்தர் கண்டிப்பாக மாற்றிவிடலாம்:)--கார்த்திக் 18:13, 27 ஏப்ரல் 2009 (UTC)

குழப்பம் தொகு

கார்த்திக், உடல் அமைப்பு என்ற கட்டுரைப் பகுதியில் முதலில் திருகு கொம்புகள் இருக்கிறது என உள்ளது. பிறகு கடைசி வரியில் கொம்பு இல்லை என்கிறது. குழப்பம் ! பெண் மானின் பெயர் தான் புல்வாயா? அதனை வெறும் புல்வாய் என்றும் மற்றதை ஆண் புல்வாய் என்றும் பல இடங்களில் பொத்தாம் பொதுவாக புல்வாய் என்று குறிப்பிடுவதும் குழப்பமாக இருக்கிறது :( --ரவி 21:02, 11 மே 2009 (UTC)Reply

தொல்காப்பியத்துக்கான சுருக்கமான விளக்கவுரையைப் பார்த்து நான் பரிந்துரைத்தது புல்வாய் என்பது. ஒருவேளை அது பெண்மானை மட்டும் குறிப்பதாக இருக்கலாம். வெளிமான் பொதுப்பெயர்தானா? இரலை எதைக் குறிக்கிறது? தெரிந்தவர்கள் விளக்கவும். மோசோசரசிடம் தொல்காப்பியத்துக்கான நீண்ட தெளிவான விளக்க நூல்கள் உள்ளன. கேட்டுப் பார்க்கிறேன். கார்த்தி, செல்வா, அல்லது சிவா ஏதேனும் சான்றுகள் இருந்தால் பதியுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:20, 12 மே 2009 (UTC)Reply
செல்வா நமது அண்மைய முகநூல் உரையாடலின்படி புல்வாய் என்பது இந்த இனத்துக்கான சிறப்புப்பெயரில்லை என்றே தோன்றுகிறது. பொருத்தமான பெயரைப் பரிந்துரையுங்களேன். -- சுந்தர் \பேச்சு 04:24, 23 சனவரி 2015 (UTC)Reply

பெயர் விளக்கம் தொகு

கார்த்திக், செல்வா எழுதும் கட்டுரைகளில் கட்டுரையின் தலைப்பை விளக்கி எழுதுவார். குறிப்பாக விலங்குகள் தொடர்பான கட்டுரையில் அவற்றுக்கான தமிழ்ப் பெயரின் பின்னணி, பொருத்தம் குறித்து அறிவது சுவையாக இருக்கும். உங்கள் கட்டுரைகளிலும் இவற்றைக் காண்பது நன்றாக இருக்கும்--ரவி 21:03, 11 மே 2009 (UTC)Reply

இனி எழுதும் கட்டுரைகளில் அவ்வாறே செய்கிறேன் ரவி :)--கார்த்திக் 05:31, 12 மே 2009 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புல்வாய்&oldid=1793192" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புல்வாய்" page.