பேச்சு:புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை
நல்ல பணி. இங்கே ஒரு பயனர் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்மக்களின் எண்ணிக்கை விழுக்காடுகளைக் கேட்டிருக்கிறார். இவருக்கு வழங்கவல்ல தகவல்கள் நம்மிடம் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் அவரிடம் தருவது மூலம் ஒரு அழகான மக்கள்தொகைப் பரம்பல் வரைபடம் நமக்குக் கிடைக்கும். -- Sundar \பேச்சு 08:23, 19 செப்டெம்பர் 2005 (UTC)
- சுந்தர் தகவல்களை தொகுக்க விருப்பம், ஆனால் தற்சமயம் நேரம் சற்று நெருக்கடி. மற்றும் ஆதாரபூர்வமாக (நேரடியாக நாடுகளின் தரவு மையங்களில் இருந்து) தொகுக்க எண்ணம், அதற்கு நேரம் சற்று அதிகம் தேவைப்படும். பிற பயனர்களிடம் அவ் தகவல்கள் இருந்து இணைத்தால் நன்று. --Natkeeran 03:24, 21 செப்டெம்பர் 2005 (UTC)
- முயற்சிக்கு நன்றி, நற்கீரன். நேரம் கிடைக்கும்போது மட்டும் தொகுக்கவும். மற்ற பயனர்களும் தங்களுக்குத் தெரிந்த புள்ளி விவரங்களைச் சேர்க்கலாம். -- Sundar \பேச்சு 04:01, 21 செப்டெம்பர் 2005 (UTC)
Notes
தொகுஹொங்கொங் தகவல்
தொகுஹொங்கொங் சீன தமிழர் 2000 என குறிக்கப்பட்டுள்ளது. இதில் ஹொங்கொங் தமிழர் கிட்டத்தட்ட 2000 என்பது சரியாகும். ஆனால் இந்த "சீன" என்றும் சேர்த்து எழுதியிருப்பது மாற்றப்பட வேண்டும். காரணம் சீனாவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அதை வேறாக குறிக்கப்பட வேண்டும். என்னிக்கை சரியாகத் தெரியவில்லை. குறிப்பாக சீன செஞ்சேன் பகுதிகளிலும், சீன தலை நகரான பீஜியிலும் வாழ்கின்றனர். இந்தோ-சீன தமிழ் (வானொலி)ஒலிபரப்புச் சேவையும் நெடுங்காலமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. HK Arun
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கை
தொகுநற்கீரன், நீங்கள் எனது உரையாடல் பக்கத்தில் இட்ட கேள்வி தொடர்பாக:
1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பே இலங்கை முழுவதிலும் முறையாக எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. இதன்படி மொத்த மக்கள் தொகை - 14.8 மில்லியன். இதில் சிங்களவர் 74%, தமிழர் மொத்தம் 18%, முசுலிம்கள் 7%. 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழர் மாவட்டங்களில் மதிப்பீட்டின் அடிப்படையில் மக்கள் தொகையைச் சேர்த்து வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 18.8 மில்லியன். இதில் சிங்களவர் 74.5%. தமிழர் 16.5 % (இலங்கை வம்சாவழி 11.9%, இந்திய வம்சாவழி 4.6%), முசுலிம்கள் 8.3%. 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ஏராளமான தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதுடன், பெருமளவில் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது தமிழரின் மொத்த அளவு 15%க்கும் கீழே குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. இதில் இலங்கை வம்சாவழித் தமிழர் 10% க்குக் குறைந்திருக்கக்கூடும் என்பது எனது கணிப்பு.
2001 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி இலங்கை வம்சாவழித் தமிழர் தொகை 2.23 மில்லியன். இந்திய வம்சாவழித் தமிழர் 0.859 மில்லியன்கள். முசுலிம்கள் 1.56 மில்லியன். எனவே தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வம்சாவழித் தமிழர் தொகை 2 மில்லியன் அளவுக்கோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. முசுலிம்களின் தொகை ஏறத்தாழ 1.8 - 1.9 மில்லியன் அளவை அண்மித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் இலங்கை வம்சாவழித் தமிழரும், முசுலிம்களும் கிட்டத்தட்டச் சம அளவில் இருக்கக்கூடும். இந்திய வம்சாவழித் தமிழரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1.0 மில்லியனாக இருக்கலாம். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இலங்கைத் தமிழருக்குப் பல அதிர்ச்சிகளை அளிக்கக் காத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் முசுலிம்கள் தமிழையே பேசி வருகிறார்கள். பிற மாகாணங்களில் நிலைமை எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் தமிழில் பேசினாலும் கூடப் பலர் சிங்கள மொழிமூலம் கல்விகற்பதை அறிந்திருக்கிறேன். மயூரநாதன் 19:30, 9 நவம்பர் 2010 (UTC)
தகவலுக்கு நன்றி மயூரநாதன். எனவே 4,900,000 தமிழ் பேசும் மக்கள் என்ற மதிப்பீடு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறன். --Natkeeran 00:24, 10 நவம்பர் 2010 (UTC)