பேச்சு:பெர்னதெத் சுபீரு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic ஒலிப்பு
ஒலிப்பு
தொகுஜெயரத்தின, சோடாபாட்டில்,
இக்கட்டுரையில் பெர்னதெத் அல்லது பெர்நதெத் என்பது பெரிய சிக்கல் இல்லை. ஆனால் இப்புனிதரின் இறுதிப் பெயர் பிரஞ்சு மொழியில் "சுபீரூ" என்றுதான் ஒலிக்கும். எனவே சுபீரஸ் என்பதை அகற்றிவிட்டு சுபீரூ என்று ஆக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--பவுல்-Paul 14:56, 23 ஆகத்து 2011 (UTC)
- ஆதரவு ஐயா வத்திக்கான் வானொலியின் செய்தியில் (காண்: புனித பெர்நதெத் சுபீரஸ் பற்றிய திரைப்படம்) சுபீரஸ் எனக் கையாளப்பட்டிருந்தாதாலேயே இவ்வாறு தலைப்பிட்டேன். ஆனாலும், "சுபீரூ" என மாற்றுவதில் எனக்கேதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:21, 24 ஆகத்து 2011 (UTC)
- ஜெயரத்தின மாதரசன், தாங்கள் சுட்டிய இணைப்பைப் பார்த்தேன். எனவே, சுபீரு, சுபீரஸ் ஆகிய இரு வடிவங்களையும் ஏற்பது சரியெனத் தோன்றுகிறது. "திருத்தந்தை பவுல்" பக்கம் உருவாக்கியிருக்கிறீர்கள். நன்று. திருத்தந்தையரின் படிமத்தின் கடைசி வரியில் "other" என்பதற்கு இணையாகத் தமிழில் "மற்றத் திருத்தந்தையர்..." என்று வருகிறது. அங்கே ஒற்று மிகாது. எனவே, அதை "மற்ற திருத்தந்தையர்" என்று திருத்துங்கள். இன்னொரு வேண்டுகோள்: ஆங்கில விக்கியில் "உலக இளையோர் நாள்" கட்டுரையில் ஒரு வார்ப்புரு பயன்படுத்துகிறார்கள். இங்கே:உலக இளையோர் நாள். தமிழிலும் அதைப்போல ஒன்று உருவாக்கினால் நலமாயிருக்கும். --பவுல்-Paul 17:30, 24 ஆகத்து 2011 (UTC)
- ஆயிற்று ஐயா, தங்களில் வழிகாட்டுதளின் படியே வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர்-இல் பிழையினை திருத்தியுள்ளேன். மேலும் வார்ப்புரு:உலக இளையோர் நாள் என ஆங்கிலத்தில் உள்ளது போல உருவாக்கி உள்ளேன். இதனை உலக இளையோர் நாள் 2011 கட்டுரையில் சேர்த்தும் உள்ளேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:57, 24 ஆகத்து 2011 (UTC)
- நன்றி, ஜெயரத்தின மாதரசன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்! --பவுல்-Paul 03:07, 25 ஆகத்து 2011 (UTC)