பேச்சு:பெலோ அரிசாஞ்ச்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
நகரத்தின் பெயர் இங்குள்ள உச்சரிப்பின்படி கையாளப்பட்டுள்ளது. பிழையாக இருந்தால் இங்கு காரணத்தைப் பதிந்து விட்டு மாற்றவும்.--மணியன் (பேச்சு) 04:03, 8 சூலை 2013 (UTC)
- மூல மொழி ஒலிப்புக்கு நெருக்கமாக இருக்கும் அதே வேளை, தமிழ் முறைகளையும் பின்பற்றலாமே? ஞ்ச் என்று சொல்லை முடிப்பதில்லை. ந்த், ங் என்று ஏற்கனவே பிழையாக முடியும் வழக்கம் நிறைய இருப்பதால், மேற்கொண்டாவது புதிய பிழைகளைப் பரவலாக்காமல் இருக்கலாமே? அரிசாஞ்சு என்று எழுதலாம். நன்றி.--இரவி (பேச்சு) 06:31, 8 சூலை 2013 (UTC)
- ஆம், நானும் சொல்ல நினைத்தேன். தவிர அந்தக் குற்றியலுகர ஒலி மிகவும் குறைந்த அளவிலானது. உண்மையிலேயே வல்லொலி மெய்யில் சொற்கள் முடிந்தாலும் நாக்கை மீண்டும் கீழே விலக்கி காற்றை வெளியே விடத்தானே செய்கிறோம்? அவ்வகையில் ஒலிப்பு நெருக்கமும் பேணப்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 08:05, 8 சூலை 2013 (UTC)
- இங்குள்ள ஒலிப்பின் படி இது பெலூ ஆரிசாந்தி எனப் பலுக்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 08:17, 8 சூலை 2013 (UTC)
- ஆங்கிலக் கட்டுரையிலேயே ஒலிப்புக்குறிகளை வழங்கும்போது பெலோ அரிசாஞ்ச் என்பது உள்ளூர் பலுக்கல் என்றும் பிற இடங்களில் பெலோ ஆரிசாந்தே எனப்படுகிறது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. விக்கிமீடியாவில் தலைப்புகளுக்கு placeholder போல கொடுக்க முடிந்தால் என்போன்றவர்களுக்கு நன்மை பயக்கும் ;) இறுதியாக ஒலிப்புக்கு நெருக்கமாகவும் தமிழ் முறைகள் படியும் தலைப்பை மாற்றி விட வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 13:17, 8 சூலை 2013 (UTC)