பேச்சு:பேட்ஃசின் போலியொப்புரு
இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியுள்ள கலைச்சொற்களைச் சரி பார்க்க வேடுகிறேன். Tamil Lacewing என்ற பொதுப்பெயரை எவ்வாறு மொழிபெயர்க்கலாம். அல்லது இப்பாப்பாத்திக்கு தமிழில் வழங்குசொல்லை யாரேனும் அறிந்தால் மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 15:14, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
- சிறப்பானதொரு தலைப்பை எடுத்துத் துவங்கியதற்கு Bravo சுந்தர்! mimicry என்பதற்கு ஒப்புப்போலிப் பண்பு என்று அகராதியில் [1] கொடுக்கப்பட்டுள்ளது; மேலும், பேட்டிசின் அழகச்சா, பேட்டிசியன் அழகச்சா? --பரிதிமதி 01:47, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
- வாழ்த்துக்கும் பரிந்துரைக்கும் நன்றி, பரிதிமதி. அழகச்சு, நெட்டாங்கு ஆகியன http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&matchtype=exact&display=utf8 http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex பேரகரமுதலியில் உள்ள பரிந்துரைகள். இவை இந்த இடத்தில் பொருந்தினால் இவற்றை வைத்துக் கொண்டு, கூடுதல் பரிந்துரையாக ஒப்புப்போலிப்பண்பு என்பதையும் தரலாம். வழக்குச் சொல் துல்லியமாகப் பொருள் தந்தால் புத்தாக்கத்தைக் (neologism) காட்டிலும் முகன்மை பெறும். (அழகச்சு பொருள் துல்லியம் தருகிறதா என்பதைக் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்வாவிடம் கேட்டுப் பார்க்கலாம்.)
- பேட்டிசியன் என்பது ஆங்கில விகுதியான -இயன் என்பதை ஆள்வது தானே? பேட்டிசின் விளைவு என்றோ பேட்டிசின் அழகச்சு என்றோ சொல்வது இயூலரின் கணக்கு என்பது போன்ற பொருள் தருமென்ற நினைப்பில் அவ்வாறு எழுதினேன். சரிதானே?
- திருத்தங்கள் இருந்தால் கட்டாயம் செய்யுங்கள்.
இம்மெய்ப்பாட்டுக்கானஇதே போன்ற வியத்தகு விளைவுகளுக்கான பறவையின காட்டுகள் இருக்குமென்றே நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்திருந்தால் சேருங்கள். தமிழர் பெரிதும் வாழும் பகுதிகளில் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும் என்பதாலேயே தமிழ் இலேசுச்சிறகிப் பட்டாம்பூச்சி, கட்டுவிரியன் போன்ற காட்டுகளைச் சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:09, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
இந்தத் தமிழ் விக்கிக்கட்டுரை தொடர்பான ஆங்கில விக்கி உரையாடல்
தொகுஇக்கட்டுரைக்கான தகவல்களைப் பெறுவதற்காக ஒரு நல்ல உயிரின நோக்கரும் விக்கிப்பீடியாவுக்கு நூற்றுக்கணக்கான வரைபடங்களை நல்கியவருமான ஆங்கில விக்கிப் பயனர் சியாமளை (கார்த்திக்கின் நண்பர்) அணுகினேன். அவரது பின்னூட்டம் இங்கே. -- சுந்தர் \பேச்சு 17:51, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
Lycodon aulicus
தொகுSome Tamil names used in Sri Lanka are listed on
- http://www.archive.org/stream/cu31924002872756#page/n183/mode/1up/
- http://www.archive.org/stream/snakesofceylon00aber#page/51/mode/1up/
I do not have Whittaker or Whittaker & Captain's books but I think the confusion among most people between this and the common krait is too great and they tend to err on the side of safety - http://www.archive.org/stream/somesouthindiani00flet#page/232/mode/1up/ http://www.archive.org/stream/imperialgazettee09hunt#page/95/mode/1up/ Shyamal (talk) 16:25, 29 August 2010 (UTC)
- Hi Shyamal, thanks for quickly pulling out references. There seems to be many name suggestions (valappannayan, kundan karawila from your source, olaippambu, ...) floating around. It looks like what we used to call, in our coconut-groove rich region, olaippambu (perhaps alluding to dried coconut leaves) and Ayyappan Kutti for whatever reason. Two traits: it being mistaken for the Common Krait and many snakes of the species seen in the vicinity of each other stand out in my memory. I wanted the Tamil Vernacular names for the Tamil Wiki article on Batesian mimicry. :-) -- Sundar \talk \contribs 17:09, 29 August 2010 (UTC)
- It is not a particularly good example of Batesian mimicry - I think the banded pattern in snakes (and other reptiles) is very widespread primitive trait - not a resemblance that can be shown (and not one that has been shown ) as being selected due to the advantage gained from appearing like a venomous species (and the only mimicry examples where humans selection has a role is perhaps Vavilovian mimicry) - as for actual identification across Tamil Nadu, one can expect that en:Oligodon arnensis, en:Bungarus_caeruleus and en:Lycodon aulicus (and most likely also en:Dryocalamus nympha) would be identified as "Katti Viriyan" Shyamal (talk) 17:26, 29 August 2010 (UTC)
- (edit-conflict)Interesting this bit is! Though there are a couple of citations at http://ta.wikipedia.org/wiki/பேட்டிசின்_நெட்டாங்கு#cite_note-snake-5 suggesting a mimicry by Lycodon travancoricus and Lycodon aulicus of the Common Krait, perhaps, I should treat this as a weaker example than the lepidoptera examples. So much for my semi-synthesis in an effort to provide locally relevant examples. -- Sundar \talk \contribs 17:43, 29 August 2010 (UTC)
- Agree. In this case, if anything, human selection would force the reverse phenomenon--aggressive mimicry. :) What I thought was that the predators (other snakes) would be involved in this. -- Sundar \talk \contribs 17:43, 29 August 2010 (UTC)
- You might find these papers interesting coral snakes field experiments Shyamal (talk) 02:11, 30 August 2010 (UTC)
ஆங்கிலப் புத்தகம்
தொகுசுந்தர், நேற்று இத்தலைப்பைப் பற்றிய ஒரு நூலின் மதிப்புரையை அமெரிக்கன் சயன்ட்டிசுட்டு (American Scientist) செப்டம்பர்-அக்டோபர் 2010 இதழில் படித்தேன் (பக் 436-437). இந்நூல், பீட்டர் வோ'ர்ப்'சு என்பார் எழுதிய டேஆசில்டு அண்டு டிசீவ்டு: மிம்மிக்ரி அண்டு கேஆமவ்'லாழ்சு, (இயேல் பல்கலைக்கழக வெளியீடு, 2009 (Peter Forbes, Dazzled and Deceived: Mimicry and Camouflage, Yale University Press, 2009) என்பது. நான் நூலை இன்னும் பார்க்கவில்லை, நூல்மதிப்புரையைத்தான் படித்தேன். மதிப்புரையே விருப்பூட்டுவதாக இருந்தது. பல அரிய செய்திகளைக் குறிப்பிட்டு எழுதிய மதிப்புரையை, "Such caveats aside, I unhesitatingly recommend the book to both scientists and nonscientists" என்று கூறி நிறைவு செய்கிறார். --செல்வா 12:59, 1 அக்டோபர் 2010 (UTC)
- கட்டாயம் ஆர்வமூட்டும் என நம்புகிறேன். எத்தனை விந்தையான நிகழ்வு? எத்தனை அருமையான இயக்கம்? மாந்தரின் திரைக்கதையெல்லாம் இயற்கையின் விந்தை நிகழ்வுகளின் முன்னால் எம்மாத்திரம்? :) -- சுந்தர் \பேச்சு 13:05, 1 அக்டோபர் 2010 (UTC)
பாராட்டு + கருத்துகள்
தொகுசுந்தர், நன்கு உழைத்து, நுணுக்கமான இயற்கையின் கூறு ஒன்றை விளக்கி இருக்கின்றீர்கள். இக்கட்டுரை இன்னும் சற்று எளிமைப் படுத்த வேண்டும் என்று நினாஇக்கின்றேன். புரியாத புதிய சொற்கள் அடுக்கலாக வரும் பொழுது அது குழப்பம் ஏற்படுத்தக் கூடும். ஆகவே சற்று விரித்து எழுதலாம். முதலில் பெயர்களை எடுத்துக்கொண்டால். Henry என்பதை என்றி என்று எழுதலாம். Bates என்பதை பேட்ஃசு என்று எழுதலாம் (இது திருக்குறளில் வரும் கஃசு என்னும் சொல் போன்றதே. ஆனால் இதுவும் பழக்கமில்லாததால் குழப்பம் உண்டாக்க்கூடியது. இந்த -ஃசு என்னும் ஒலிப்பைப் பழகிக்கொண்டால், பற்பல இடங்களில் திரிபு குறைவாய் இருக்குமாறு எழுதி ஒலிக்க முடியும். பேட்ஃசின் நெட்டாங்கு என்று எழுதலாம். இந்த நெட்டாங்கு, அழகச்சு என்னும் சொற்கள் சற்றே வெவ்வேறு பொருள் தருவன. நெட்டாங்கு என்பது முகத்தையோ வாயையோ நீட்டியோ கோணியோ பழித்துக் காட்டுவது. அழகச்சு என்பது அது போன்றது என்றாலும், அழகுகாட்டுதல் என்பது போல நடித்துக் காட்டுதலைக் குறிக்கும். இங்கே ஒப்புரு கொள்வதை ஆங்கிலத்தில் மிம்மிக்கிரி என்று சொன்னாலும் அழகுகாட்ட்டுதலோடோ, நெட்டாங்காங்காகவோ கொள்ளுதல் பொருந்தி வருவதாகத் தெரியவில்லை. இதனைப் பொய்யொப்பு எனலாமோ அறியேன். வேறு நல்ல சொல் தேவையாக இருக்கும் என்பது என் கருத்து. போலி என்பதும் நல்ல சொல். இதனை ஒட்டியும் நல்ல சொல் ஆக்கலாம். மேலும் படித்துவிட்டு வந்து கருத்து இடுகின்றேன். --செல்வா 03:37, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
- பயனுள்ள கருத்துகள், செல்வா. -ஃசு ஏற்கனவே தமிழ்ச்சொற்களில் வழங்கி வந்துள்ளதால் அதைப்பயன்படுத்துவதில் எனக்குச் சிறிதளவும் தயக்கம் இல்லை. என்றி என்று தந்தால் சரியாக இருக்குமென்றே நினைத்தேன், உறுதியாகத் தெரியாததால் விட்டு விட்டேன். நெட்டாங்குக்கு ஒப்புப்போலிப்பண்பு என அகராதி.காம் தளம் தருவதை பரிதிமதி சுட்டிக்காட்டியிருந்தார். அதைக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் சில இடங்களில் மட்டும் ஒட்டவில்லை. ஒரு கலைச்சொல்லை இறுதி செய்து விட்டால் அத்தனை மாற்றங்களையும் செயல்படுத்துவேன். நீங்களும் மற்றவர்களும் நினைக்கும் மாற்றங்களை இயன்றால் நேரடியாகக் கட்டுரையிலேயே செய்யலாம். (ஏற்கனவே, சிறிதரன் முதல் பத்தியை ஒழுங்குபடுத்தித் தந்துள்ளார்.) -- சுந்தர் \பேச்சு 03:50, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
முதற்பத்தி
தொகுசுந்தர், இப்பொழுதுள்ள முதற்பத்தி கீழ்க்கண்டவாறு உள்ளது:
பேட்டிசின் நெட்டாங்கு[1] அல்லது பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு[2] (Batesian mimicry) என்பது ஊறு விளைவிக்காத ஓர் உயிரினம் கோண்மாக்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றோர் உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் படிவளர்ச்சித் தோற்றப்பாடு ஆகும். பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இதனை, கீழுள்ளவாறு மாற்றலாமா?
சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்திற்கான அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் பேட்ஃசின் நெட்டாங்கு (அல்லது பேட்ஃசின் பொய்யுரு, அல்லது பேட்ஃசின் போலியொப்புரு) என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்ஃசு (Henry Bates) என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று கோண்மாக்களிடம் (வேட்டையாடும் எதிரிகளிடம்) இருந்து தப்பும் தன்மை ஒரு படிவளர்ச்சி வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது.
--செல்வா 22:34, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
- மிகத்தெளிவாகவும் புரிந்து கொள்ள எளிமையாகவும் உள்ளது செல்வா. தயங்காமல் மாற்றி விடுங்கள். -- சுந்தர் \பேச்சு 09:51, 1 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி சுந்தர். ஓர் அருமையான கட்டுரையை எழுதியுள்ளீர்கள். முதற்கட்டமாக விரைவாக எல்லா பகுதிகளையும் படித்து திருத்தியுள்ளேன் (இன்னும் ஒரு முறை பார்க்க வேன்ண்டும் என்று எண்ணியுள்ளேன்). Lacewing என்பதை இலேசிறகி என்று ஆக்கியிருக்கின்றீர்கள். இலேசு என்றால் எடை குறைவான என்று பொருள். இங்கே, lacework என்பது நூலைக் கொண்டு மென்பின்னலாக துணிபோல் நெய்து சட்டை, பாவாடை, மேசைவிரிப்பின் கரை போன்றவற்றுக்குக்காகச் செய்யும் பின்னல்வேலைப்பாடாலால் ஆன வலைத்துணி. மென்வலை, மென்பின்னல் என்னும் பொருளில் பயன்படுக்ன்றது என்று நினைக்கின்றேன். பின்னல்துணிச் சிறகி, மென்வலைச் சிறகி என்பது போல பிறபெயர்கள் எண்ணிப்பார்க்க இயலுமா? இலேசிறகி சொல் அழகாக உள்ளது, இந்தவகை மென்வலைத் துணிகளில் சில இலாசாகவும் இருக்கும் (ஆனால் பல அப்படி இல்லை). சிந்தனையைக் கிளறுகிறேன். அவ்வளவுதான். சரியான சொல்லாக அமைய வேண்டும் என்பதும்நோக்கம்.--செல்வா 17:33, 1 செப்டெம்பர் 2010 (UTC)
- இத்தனை ஆர்வத்துடன் விரைந்து அருமையான மாற்றங்களைச் செய்தமைக்கு நன்றி, செல்வா. உங்கள் மாற்றங்களை விரும்பிப் படித்தேன். நன்றாக உள்ளது. உடனடியாகப் பொருத்தமான சொல் தெரியாததாலேயே இலேசிறகி என்று எழுதினேன். மென்வலைச்சிறகி (சிறகும் இறகும் ஒன்றா?) நன்றாக உள்ளது. கட்டாயம் பயன்படுத்தலாம். இப்பட்டாம்பூச்சி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பரவலாகக் காணப்படுவதால் வழங்குமொழியிலோ இலக்கியத்திலோ பெயர் இருந்தால் அதைக் கட்டாயம் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 04:32, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- ஓ! உங்களுக்குப் பிடித்து இருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி, சுந்தர். Lcewing என்பது வேறு ஒரு தனி வகையான பூச்சியினம் கண்ணாடி வலை போல (ஒளியூடிருவும்படி), மிக அழகான மென்மையான இறகுகள் கொண்டிருக்கும் (Chrysopidae குடும்பத்தைச் சேர்ந்தது; பார்க்கவும்). [நீங்கள் கேட்ட கேள்வி: ஆம் சிறகு-இறகு இரண்டும் ஒன்றே. இறகு இறக்கை ஆகும், சிறகு சிறை ஆகும். இறகு என்பது இறக்கையில் உள்ள ஒற்றை கீற்றைக் கூடக் குறிக்கும் தமிழில் இப்படி சி->இ ஆகும் வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டுகள் மிகப்பல. இதனை மர்ரே எம்மனோ போன்ற அறிஞர்கள் ஒரு விதியாகவே அறிவித்திருக்கிறார்கள். அது எல்லா இடத்துக்கும் பொருந்தாது, எனினும் பல இடங்களில் காணலாம். சிப்பி-இப்பி, சமை-அமை இப்படிப் பல.). ஆங்கிலத்தில் மிம்மிக்ரி என்பது தமிழில் உள்ளது போன்ற பழித்துக்காட்டுதல், நெட்டாங்கு, அழகச்சு, அழகுகாட்டுதல் அல்ல (இவை பழித்துக் காட்டுதல் போன்ற உணர்வுநிறம் கொண்டுள்ளது). ஒன்றைப்போல் மற்றொன்று இயங்கிக்காட்டுவதை நடிப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம் (இது ஏமாற்று என்னும் பொருள் கொண்டும், இல்லாமலும் சுட்டும் ஒரு சொல்). To mimicry என்பதை ஒப்புக்காட்டு (ஒப்புகாட்டு?) என்று சொல்லலாம். போலியொப்புரு என்பது பொருந்தும் போல் தெரிகின்றது. வினையாகப் பயன்படுத்த வேண்டுமெனில் ஓப்புகாட்டுதல் (போலியாக ஒப்புகாட்டுதல்) என்று கூறலாம். இது பற்றி இன்னும் சிந்திக்க வேண்டியுள்ளது. --செல்வா 14:45, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி செல்வா. போலியொப்புரு நன்றாக உள்ளது. (பரிதிமதி முன்னர் காட்டிய ஒப்புப்போலிப்பண்பு இத்தகைய விளைவுக்குச் சரியாக இருந்தாலும், அந்தப் பண்பையுடைய உயிரினத்தைக் குறிக்கப் பயன்படுத்த முடியவில்லை.) சற்று எண்ணிப் பார்த்து விட்டு தலைப்பை மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 02:59, 3 செப்டெம்பர் 2010 (UTC)