பேச்சு:பேராக்
கட்டுரையில் பல சுவையான செய்திகள் உள்ளன. குறிப்பாக தமிழ் சபாநாயகர்கள் பற்றிய செய்தி சுவையான இருந்தது. --Natkeeran 18:18, 1 மார்ச் 2011 (UTC)
எழுத்துப் பிழை
தொகுபேராக் என்று எழுதுவது தவறு. வல்லினம் மொழியீறு ஆகாது.. பேரா அல்லது பேராக்கு என்று எழுதலாம்.. Thanighaivel (பேச்சு) 14:01, 9 சூன் 2021 (UTC)
- வழிமாற்று வைத்திருக்கிறேன். உள்ளூரில் ஊடகங்களில் பேராக்கு என்ற பெயரைப் பிரபலப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 22:10, 9 சூன் 2021 (UTC)
- தமிழில் எழுதும்பொழுது வல்லின ஒற்றில் முடியுமாறு எழுதுதல்கூடாது. இதனைத் திருத்த வேண்டுகின்றேன். பேரா என்றோ பேராக்கு என்றோ மாற்ற வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 21:48, 22 சூன் 2021 (UTC)
வணக்கம், நான் குறிப்பிட்ட இரண்டு சொற்களும் பயன்பாட்டில் உள்ளது.. பேரா, ஆதிக பயன்பாட்டில் உள்ளது.. அதைவிட அதிகமாக, பிழையான பேராக் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.. தவறுகளைத் திருத்திக் கொள்ளலாமே.. Thanighaivel (பேச்சு) 00:35, 10 சூன் 2021 (UTC)
- ஆதரவு - --செல்வா (பேச்சு) 21:48, 22 சூன் 2021 (UTC)
@Kanags:, @Ksmuthukrishnan:, @Thanighaivel:, ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழில் பேரா என்று எழுதியிருக்கின்றார்கள், பார்க்கவும். சீனமொழியிலே பீலீ என்று தந்திருக்கின்றார்கள் (霹雳) ஆகவே பேரா என்றெழுதுவது சரியாக இருக்கும். பேராக்- என்பது போல 'க்' வரவேண்டுமானால் பேராக்கு என்றெழுதலாம். மலாய் மொழியில் அது 'ஃ' போல ஒலிக்கலாம் போல் தெரிகின்றது. மலாய் மொழி ஒலிப்பாக (Malay pronunciation) [peraʔ] என்று தந்துள்ளார்கள். அருள்கூர்ந்து பேரா என்றோ பேராக்கு என்றோ தலைப்பை மாற்ற வேண்டுகின்றேன். அடிப்படையில் தணிகைவேல் கூறிய கருத்து சரியென்றே கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 15:25, 23 சூன் 2021 (UTC)
- மலேசியாவில், சிலர் சரியான முறையில் பேரா என்றும் ஆள்கின்றனர். மலேசியத் தமிழ்க்கல்வி பற்றி எழுதும் 'மேனாள் முகமை அமைப்பாளர்' மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும் என்னும் பதிவில் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டுள்ளார்: "1898 ஆம் ஆண்டு சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பேரா மாநிலத்தில் பாகான் செராய் அரசினர் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது." [1]. பலர் தவறுதலான முறையில் "பேராக்" என்றும் ஆள்கின்றனர். சிலராக இருந்தாலும், சரியான முறையை நாம் பின்பற்றலாம் என்று கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 20:04, 23 சூன் 2021 (UTC)
- @செல்வா: மலாய் மொழியில் பேராஹ் என்றுதான் ஒலிக்கப்படுகிறது. இது தமிழில் பேராக் என்பதற்கே கிட்டவாக உள்ளது. Penang >> பினாங்கு என்பது போல பேராக்கு என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:48, 23 சூன் 2021 (UTC)
- பேராக்கு என்று மாற்றலாம். மிக்க நன்றி @Kanags:. --செல்வா (பேச்சு) 02:01, 24 சூன் 2021 (UTC)
மலாய் மொழியில் இறுதியில் வரும் புள்ளியிட்ட ககரம் ஒலிக்கப்படுவதில்லை. எனவே பேரா என்றெழுதவதே முறை. Penang என்பதைப் பிழையாகத்தான் பினாங்கு என்றெழுதியிருக்கிறார்கள். அதன் சரியான ஒலிப்பு பெனாங் என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 03:25, 24 சூன் 2021 (UTC)
- @Kanags:மேலே பாகிம் (@Fahimrazick:) சொல்வதுபோல பேரா என்றெழுதுவது சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன். மலேசியாவிலும் சிலர் பேரா என்றெழுதுகின்றனர். ஆகவே பேரா என்றே மாற்றலாம் என்று கருதுகின்றேன். கருத்துக்கு நன்றி பாகிம். --செல்வா (பேச்சு) 12:04, 24 சூன் 2021 (UTC)