பேச்சு:பேராலயம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic Cathedral > Basilica > Shrine
கிறித்தவத் தேவாலயங்கள் கட்டுரையில் கண்டுள்ளபடி இதனை பீடாலயம் அல்லது மறைமாவட்டப் பேராலயம் என அழைப்பது பொருத்தமாகும். எனவே தலைப்பை அதற்கேற்ப மாற்றுகின்றேன். பெருங்கோவில்/பேராலயம் என்பது பசிலிக்காவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. --மணியன் (பேச்சு) 03:23, 6 அக்டோபர் 2014 (UTC)
- பவுல் அவர்களின் கருத்தையும் அறிவது நல்லது.--Kanags \உரையாடுக 05:05, 6 அக்டோபர் 2014 (UTC)
- கிறித்தவர்கள் வழக்கமாக ”மறைமாவட்டப் பேராலயம்” என்று கூறுவர். Cathedra என்னும் இலத்தீன் (கிரேக்கம்) சொல்லுக்கு "இருக்கை", "ஆசனம்" என்னும் பொருள் உண்டு. ஆனால் பீடம் என்பது altar என்பதற்கு இணையாகக் கொள்ளப்படுகிறது. ஆகவே, "பீடாலயம்" என்னும்போது பீடத்தை (altar) உள்ளடக்கிய கோவில் என்று திரிபான பொருள் தரக்கூடும். இப்பின்னணியில் cathedral என்பதற்கு "பீடாலயம்" அவ்வளவு பொருத்தமாக இல்லை, அது கிறித்தவர்களிடையே வழக்கத்திலும் இல்லை. எனவே "மறைமாவட்டப் பேராலயம்" (மறைமாவட்டத் தலைமைக் கோவில்) என்று கூறலாம். அது பொது வழக்கிலும் உள்ளது.--பவுல்-Paul (பேச்சு) 02:56, 7 அக்டோபர் 2014 (UTC)
- ஆயிற்று --மணியன் (பேச்சு) 04:52, 7 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 07:00, 7 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:04, 7 அக்டோபர் 2014 (UTC)
Cathedral > Basilica > Shrine
தொகுஇலங்கையில் Cathedral என்பது பேராலயம் எனவும், Co-cathedral என்பது இணைப்பேராலயம் எனவும் அழைக்கப்படுகிறது. Basilica எவ்வாறு அழைக்கப்படுகின்றது எனத் தெரியாது. இங்கு த.வி.யில் Basilica என்பது பெருங்கோவில் (பேராலயம்) என அழைக்கப்படுகிறது. Basilica of Our Lady of Good Health என்பது தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி அழைக்கப்படுவதையும் காணலாம். Basilica என்பது திருத்தலம் என அழைக்கப்படலாமா? அல்லது Shrine என்பதுதான் திருத்தலமா?--AntonTalk 20:05, 11 திசம்பர் 2014 (UTC)
- இலங்கையில் Basilica என்பது பசிலிக்கா என்று அழைக்கப்படுகிறது. இது கிறித்தவத்துடன் மட்டும் தொடர்புபடாமல் கட்டிடவியலுடனும் தொடர்புடையதால் அச்சொல்லே பாவனையில் உள்ளது. எனவே, இக்கட்டுரைத் தலைப்பினை பேராலயம் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். --AntonTalk 14:09, 15 திசம்பர் 2014 (UTC)