பேச்சு:பொத்துவில் படுகொலை

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

ஆங்கில விக்கியின் கடைசிப் பந்தியையும் சேர்க்கலாம். மேலும் பார்க்க: Pottuvil massacre: SLMC calls for independent inquiry, Pottuvil massacre: Perverts of the mafia --AntanO 04:29, 6 ஆகத்து 2016 (UTC)Reply

கடைசிப் பந்தியைச் சேர்க்காமைக்கான காரணம் அப்படுகொலையைப் புரிந்த குற்றவாளிகளிற் சிலர் கைது செய்யப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளமையே ஆகும். அடுத்தது கடைசிப் பந்திக்கு வழங்கப்பட்டுள்ள கூற்று ஆதாரமற்றது. ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள தொடுப்பு செயலற்றது.--பாஹிம் (பேச்சு) 04:38, 6 ஆகத்து 2016 (UTC)Reply

கட்டுரை நடுநிலையற்றது. Pottuvil massacre: SLMC calls for independent inquiry இங்கு ஆதாரம் உள்ளது. --AntanO 04:43, 6 ஆகத்து 2016 (UTC)Reply

விடுதலைப் புலிகளால் கழுத்தில் வெட்டப்பட்டு, பின்னர் தப்பிப் பிழைத்த கரீம் மீரா முகைதீனீன் வாக்குமூலத்தை விடவா நீங்கள் காட்டும் ஆதாரம் பொருந்துகிறது. கண்ணால் கண்டு, தாக்குதலுக்கு அகப்பட்டு, உயிர் பிழைத்தவரின் வாக்கு மூலம் இருக்கிறதல்லவா.--பாஹிம் (பேச்சு) 04:45, 6 ஆகத்து 2016 (UTC)Reply

Hoax என்றால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை, அது போலி, மாயை என்று பொருள். எதற்காக அன்ரன் நீங்கள் அந்த வார்ப்புருவை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இடுகிறீர்கள்? அப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லையா?--பாஹிம் (பேச்சு) 04:56, 6 ஆகத்து 2016 (UTC)Reply

Hoax என்பதற்கு பிழையான பொருள் வேண்டாம். பார்க்க: en:Wikipedia:Hoax--AntanO 05:01, 6 ஆகத்து 2016 (UTC)Reply

பிழையான பொருள் தருவது நானல்ல, நீங்கள். விடுதலைப் புலிகளின் அழிச்சாட்டியங்களையும் அட்டூழியங்களையும் யாராவது கூறி விட்டால், அவரைத் தடை செய்ய வழி தேடுவது சரியா? நான் கட்டுரையில் சம்பவத்தில் அகப்பட்டவரின் சாட்சியத்தை ஆதாரமாகத் தந்திருக்கிறேன். நீங்களோ அவ்வாறு எதுவுமேயில்லை என்று பொய்யுரைக்கிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 05:12, 6 ஆகத்து 2016 (UTC)Reply

கட்டுரை பற்றிய உரையாடுவது ஏற்புடையது. தேவையற்ற உரையாடல்கள் வேண்டாம். --AntanO 05:21, 6 ஆகத்து 2016 (UTC)Reply

கட்டுரை வெறுமனே பொய்யும் புனைந்துரையுமல்ல. நான் ஆதாரம் தந்திருக்கிறேன். அது எப்படி hoax ஆகும்?--பாஹிம் (பேச்சு) 05:27, 6 ஆகத்து 2016 (UTC)Reply

அது பிழை என நானும் ஆதரம் தந்துள்ளேன. --AntanO 05:30, 6 ஆகத்து 2016 (UTC)Reply

நீங்கள் தந்துள்ள விடயத்தை நான் ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். றவூப் ஹக்கீம் சர்வதேச விசாரணை வேண்டுமென்கிறார் என்பதைப் பார்க்கவில்லையா? மாறாக நீங்கள் கட்டுரை ஒரு புனைந்துரை என்பது போன்று hoax என்கிறீர்கள். அது முற்றிலும் தவறு. என்னைத் தடை செய்யவும் முயல்கிறீ்ர்கள். இது நேர்மையா?--பாஹிம் (பேச்சு) 05:34, 6 ஆகத்து 2016 (UTC)Reply

வேறு ஒருவரிடம் கருத்துக் கேளுங்கள். கட்டுரை த.வி.புலிகளே காரணம் என முடிகிறது. hoax பற்றி தந்துள்ள இணைப்பைப் பார்க்கவும். தடை பற்றிய பேச்சு அவசியமற்றது. நேர்மை பற்றிய கேள்வியும் அவசியமற்றது. --AntanO 05:41, 6 ஆகத்து 2016 (UTC)Reply
நடுநிலையான கட்டுரை. Curfew imposed in eastern Sri Lanka town after clashes --AntanO 05:43, 6 ஆகத்து 2016 (UTC)Reply

தடை பற்றிய பேச்சு கட்டாயமானது. முரண்பாட்டை இங்கு தீர்த்துக் கொள்ள முயல முன்னரே நீங்கள் வேண்டுமென்றே என்னைத் தடை செய்ய முயல்கிறீர்கள். அதனாலேயே நான் ஆலமரத்தடியில் இட்ட குறிப்பையும் அகற்றினீர்கள். அதுவே உங்களது நேர்மையைக் கேள்விக்குட்படுத்தியது. உங்களுக்கு நினைத்தவாறெல்லாம் நடப்பதற்கு விக்கிப்பீடியா ஒன்றும் உங்களது சொந்தப் பொருளன்று.--பாஹிம் (பேச்சு) 06:04, 6 ஆகத்து 2016 (UTC)Reply

நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ்நெற் இணைப்பு விடுதலைப் புலிகளின் வலைத்தளம். குற்றமிழைத்தவர்கள் நேர்மையாகக் கருத்துச் சொல்வார்களென்று எதிர்பார்க்க முடியாது.--பாஹிம் (பேச்சு) 06:06, 6 ஆகத்து 2016 (UTC)Reply

Antan, விக்கி முறைகளைப் புரிந்து இயங்கக்கூடிய நெடுநாள் பயனர்களிடம் இணக்க முடிவு காண முயல்வோம். தடை எச்சரிக்கை தேவையில்லை. நீங்கள் நேரடியாக ஈடுபடும் மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பதுவும் நன்று. --இரவி (பேச்சு) 09:01, 6 ஆகத்து 2016 (UTC)Reply

தொடர்ந்து இப்படித்தான் செய்வேன் என்பவரிடம் எப்படி இணக்க முடிவு காண்பது? //மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பதுவும் // இது புதிதாக இருக்கிறதே? எந்த விதி? --AntanO 09:25, 6 ஆகத்து 2016 (UTC)Reply
Antan, பாஹிம், ஒரு கட்டுரைப் பொருளில் சம்பவமொன்று குறித்து இருவேறு கருத்துக்கள் இருப்பது இயல்பே. இருவேறு ஆதாரங்கள் முரண்பாடு கொண்டு காணப்படுமாயின் இரண்டையும் முறைப்படி விபரிக்கலாம். எவை எவை ஆதாரமாக தரப்படலாம் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். இரவி கூறியபடி இணக்கமுடிவு முக்கியம். //ஒருவர் நேரடியாக ஈடுபடும் மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பது// என்பது விக்கி விதிகளுக்கோ அல்லது பொதுவான அறிவுப் பகர்வுக்கோ ஏற்றதாக அமையும் என நான் கருதவில்லை. விக்கியாக்க செயற்பாட்டில் ஒருவரை தனிப்படத் தாக்குவது அல்லது குறித்த விடயத்துக்குச் சார்புநிலைப் பட்டவர் என நேரடியாகக் குறித்துரைப்பது பொருத்தமில்லை. அன்ரன் துப்புரவுப் பணிகளில் ஆர்வம் காட்டுவதையும், பாகிம் மொழி குறித்து சிறப்பாகப் பங்களிப்பதையும் மனங்கொள்கின்றேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:42, 10 ஆகத்து 2016 (UTC)Reply
Return to "பொத்துவில் படுகொலை" page.