பொத்துவில் படுகொலை

பொத்துவில் படுகொலை என்பது இலங்கையின் உள்நாட்டுப் போரில் சச்சரவுக்குள்ளான ஒரு நிகழ்வாகும். 2006 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 18 ஆம் நாள் சிறுபான்மை இன முஸ்லிம் பொதுமக்கள் 10 பேர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென் பகுதியிலுள்ள பொத்தவிலில் உள்ள இரத்தல் குளம் எனப்படும் நீர்த்தேக்கத்தைத் துப்புரவாக்குவதில் ஈடுபட்டிருந்த போது கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 19-35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களாவர்; அவர்களில் மூவரின் கழுத்து வெட்டப்பட்டு தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன; மற்றவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு அல்லது தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.[1]

பொத்துவில் படுகொலை
பொத்துவில் is located in இலங்கை
பொத்துவில்
பொத்துவில்
பொத்துவில் (இலங்கை)
இடம்பொத்துவில், இலங்கை
நாள்18 செப்டம்பர் 2006
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இசுலாமியர்கள்
தாக்குதல்
வகை
படுகொலை
இறப்பு(கள்)10
காயமடைந்தோர்0
தாக்கியோர்தமிழீழ விடுதலைப் புலிகள் / சிறப்பு அதிரடிப் படை (இலங்கை இராணுவம்)

சிறப்பு அதிரடிப் படை இந்நிகழ்வில் ஈடுபட்டதாக அச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் குற்றஞ்சாட்டியதாக ஆரம்பத்தில் ஒரு பிபிசி செய்தி குறிப்பிட்டது.[2] உள்ளூர் இசுலாமியர்கள் சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கி, சிறப்பு அதிரடிப் படையினரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு கோரினர். வாளேந்திய சிலர் வந்து 10 பேரைக் கொலை செய்து விட்டு சிறப்பு அதிரடிப் படையின் கண்களில் அகப்படாமல் எவ்வாறு சென்று விட முடியும் என்று அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்.[3] ஆரம்பத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் இந்நிகழ்வு தொடர்பில் விசாரிக்க ஒரு பன்னாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டுமென்றே வேண்டினார்.[4] ஆயினும், இத்தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவரான கரீம் மீரா முகைதீன் என்பவர் படுகாயங்களிலிருந்து குணப்பட்ட போது, இத்தாக்குதலை நிகழ்த்தியோர் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதாக அடையாங்காட்டினார்.[5] விடுதலைப் புலிகள் இப்பழியை சிறப்பு அதிரடிப் படையினரின் மீது போட்டு விட்டுத் தப்பிக் கொள்ள தம்மால் முடிந்தளவு முயன்றதாக தெற்காசிய பயங்கரவாதத் தகவற் பிரிவு கூறியது.[1]

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் அரசாங்கம் ஒழுங்கற்ற முறையில் செயற்பட்டது. உயிர் தப்பிய ஒரே ஒருவர் வந்த நோயாளர் ஊர்தியையும் காவல் துறை, காலுமுனையிலுள்ள மருத்துவமனையில் நுழைய அனுமதி மறுத்தது. சிங்களர்கள் அதிகமுள்ள அம்பாரைக்கு அந்நோயாளார் ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் உயிர் பிழைத்தவர் ஆயுதமேந்திய காவலர்கள் மூலம் கையாளப்பட்டார். மேலும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, காவல்துறையினால் குற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை அழித்ததாக தெரிவித்தனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "SOUTH ASIA INTELLIGENCE REVIEW Weekly Assessments & Briefings Volume 5, No. 12,October 2, 2006". South Asia Terrorism Portal. பார்க்கப்பட்ட நாள் 2006-10-02.
  2. "Sri Lankan civilians found dead". BBC. 2006-09-18. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5355088.stm. பார்த்த நாள்: 2006-09-18. 
  3. "When will the war end?". The Morning Leader. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2006-09-30.
  4. "'Muttur must be a neutral zone'". The Morning Leader. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2006-09-30.
  5. http://www.thuruvamnews.com/2014/11/10.html பொத்துவிலில் 10 முஸ்லிம்கள் படுகொலை: முன்னாள் புலி உறுப்பினர் கைது
  6. "SRI LANKA'S HUMAN RIGHTS CRISIS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2019.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்துவில்_படுகொலை&oldid=3940861" இலிருந்து மீள்விக்கப்பட்டது