இயற்கை: செய்திகள் சிந்தனைகள் என்ற நூலில் ஆசிரியர் இவற்றை புணல்க்காடுகள் என்று ஆண்டிருக்கிறார். -- சுந்தர் \பேச்சு 01:46, 18 மே 2008 (UTC)Reply

சுந்தர், இது புனல் காடு என்று இருக்கவேண்டுமோ என்று எண்ணுகிறேன். புனல் என்னும் சொல் நீர், ஆறு, குளிர்ச்சி என்னும் பொருள்கள் கொள்ளும் (கழகத் தமிழ் அகராதி பார்க்கவும், அல்லது சென்னை பல்கலை அகரமுத்லியைக் காணவும். ஆனால் புணல் என்று சொல் தமிழில் கிடையாது என்று நினைக்கிறேன். மழைக்காட்டிற்குத் தமிழில் சரியான பெயர் பொழில். (பொழிதல் என்றால் மழை பெய்தல்; பொழில் என்பது மழைக்காடே!)). புனல்க்காடு என்னும் சொற்கள் தேவை இல்லை என்பது என் தனிக்கருத்து. ஆனால் அடிக்குறிப்பாக குறிக்கலாம். புணல்க்காடு என்று ணகரம் வருவதாக இருந்தால் அதன் பொருள் என்ன என்றும், எப்படி அது ஒரு புதுச்சொல்லாகியது என்றும் விளக்கம் தரவேண்டும் என்று நினைக்கிறேன். --செல்வா 13:25, 18 மே 2008 (UTC)Reply
மன்னிக்கவும், அது எனது தட்டச்சுப்பிழைதான். புனல் காடு என்பதை அடிக்குறிப்பாக மட்டும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 14:31, 18 மே 2008 (UTC)Reply

உண்மையில் பொழில் தான் மழைக்காடு என்றால் பொழில் என்பதையே முதன்மைப்படுத்தலாம். (குறைந்நபட்சம், அடைப்புக்குறிக்குள், வழிமாற்று தரலாம்.) rain forest = மழைக்காடு என்பது போல் அல்லாமல் தமிழில் இயல்பாக உள்ள சொற்களுக்கு முன்னுரிமை தரலாம்.--ரவி 16:42, 18 மே 2008 (UTC)Reply

ஆம். எப்படி அருவி என்ற தமிழ்ச்சொல்லைக் காட்டிலும் நீர்வீழ்ச்சி என்ற மொழிபெயர்ப்பு பரவத்தொடங்கியதோ, அதுபோல் நிகழக்கூடாது. (இக்குறிப்பை தியடோர் பாசுகரனின் நூலில் இருந்து பெற்றேன்.) -- சுந்தர் \பேச்சு 06:22, 19 மே 2008 (UTC)Reply
பொழில் மழைக்கு மட்டும் தான் பொருந்துமா? பனிக்குப் பொருந்தாதா? சரி, மழை பொழிதல் என்றால் அது எப்படி rainforest ற்குப் பொருந்தும்? rainfallற்குப் பொருந்தலாம். Rainforests are forests characterized by high rainfall, with definitions setting minimum normal annual rainfall between 1750-2000 mm (68-78 inches).--Kanags \பேச்சு 10:52, 19 மே 2008 (UTC)Reply
பொழில் என்பது முதற்பொருளாய் மழைக்கு மட்டுமே பொருந்தும். அதுமட்டுமல்ல, வெப்ப மண்டல மழைக்கு மட்டுமே பொருந்தும் என்று கூட சொல்லலாம். ஏனெனில், பொழில் என்பது பொழுது = கதிரவன், பகலவன் என்னும் பொருள்வழி வருவது. எனவே பொழில் என்பது வெப்பமண்டலத்தில் செழிப்பாகப் பெய்யும் மழையைக் குறிக்கும். பொழி என்னும் வினையின் செயலைக் குறிக்கும் பெயற்சொலாக பொழிதல் என்று ஆகும் என்பது உண்மை. ஆனால். பொழில் என்பது அந்த பொழிதலால் விளையும் காட்டை இங்கு குறிக்கும். இது எப்படி என்றால் வறுவல், வதக்கல் என்னும் சொற்கள் வறுத்தல், வதக்குதல், என்னும் தொழிலைக் குறிக்காமல் வறுத்தல் தொழிலால் கிடைக்கும் பொருளை, வதக்குதலால் கிடைக்கும் பொருளை (உணவு வகையை)க் குறிப்பது போல, இது தொழிலாகுபெயர் எனலாம். வடி என்பது வடித்தல் என்னும் வினையைக் குறித்தாலும், வடிக்கப்பயன்படும் வடிகட்டி என்னும் பொருளையும் வடி என்பது குறிக்கும். ஆடு என்னும் சொல் ஆடல் என்று ஆடும் வினையைக் குறித்தாலும், ஆடல் என்பது ஒரு கலை வடிவத்தைக் குறிக்கும் (கூத்து). இதே போல பாடு, பாடல். பாடல் என்பது பாடப்படும் வகைப் பாட்டையும் குறிக்கும் (பாடுகின்ற தொழிலல்ல). கழகத் தமிழ் அகராதியையோ பிற நல்ல அகராதியையோ பார்த்தால் பொழில் என்பது காடு என்று குறிக்கப்பட்டிருக்கும். சென்னை பல்கலை அகரமுதலியில் forest என்னும் பொருள் கொடுத்துள்ளது. உண்மையில் அது rainforest in a tropical region என்னும் துல்லிய பொருள் உடையது. தூவிப்பனி பெய்வதை பொழில் என்று சொல்வது பொதுவாகப் பொருந்தாது. தூவிப்பனி பெய்வதை கனடாவில் வாழும் நான் எழில் (அழகு) என்று சொல்வேன் :) பொழில் என்னும் சொல் மழைக்காடு என்னும் இடத்தின் பெயராக இல்லாமல், வினையாகக் கொண்டால் பொழிதல் என்பது அடர்த்தியாக, செறிவாகப் "பெய்யும்" "வீழும்" ஏதொன்றையும் குறிக்குமாறு பொருள் நீட்சி பெருவது இயற்கையே. இதலாலேயே சொற்பொழிவு என்பது மழைபோல் விடாது பேசிப் பொழியும் நிகழ்வைக் குறிக்கின்றது. பொழிப்புரை என்பது விரிவாக விளக்கம் தரும் உரைநடை விளக்கத்தைக் குறித்தது. எனவே தூவிப்பனி பெய்கிறது, தூவிப்பனி வீழ்கின்றது என்று கூறுவதுபோல தூவிப்பனி பொழிகின்றது என்று சொல்லலாம், தவறே இல்லை (ஆனால் முதற்பொருள் அல்ல, பொருள்நீட்சிப்பொருள்). ஆகவே முதற்பொருள் கதிரவனால் (பொழுது = கதிரவன்) வெப்பம் ஏறி, நீரானது கார்மேகமாய் வந்து அடர்ந்து பெய்யும் மழையால் விளையும் காட்டுக்குப் பொழில் என்று பெயர். எனவே பொழில் என்பது ஓர் "இடம்" (பெருங்காடு, மழைக்காடு). பொழில் என்பது ஆடல், அல்லது பொங்கல் என்பது போல வினைவழி குறிக்கும் ஓர் ஆகுபெயர். எனினும் வினைப்பெயரையும் குறிக்கும் என்பதனையும் உணர்தல் வேண்டும். அதாவது ஆடுகின்ற செயலை, பொங்குகின்ற செயலை, பொழிகின்ற செயலையும் குறிக்கும். ஆகுபெயராக வேறொன்றையும் குறிக்கும்.--செல்வா 14:25, 19 மே 2008 (UTC)Reply

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 10:56, 24 சனவரி 2013 (UTC)Reply

பொழில் தொகு

இக்கட்டுரையின் தலைப்பு பொழில் என்று இருப்பதே சிறந்தது. என் ஊர் பக்கம் உள்ள மழைக்காடுகல் எல்லாம் பொழில் என்ற பெயரில் உள்ளன. உதாரணம் பைம்பொழில் தற்போது இது பண்பொழி என்று அழைக்கப்படுகிரது. இதை படிப்பவர் அவ்வூரில் பண்பும் ஒழியும் நிரைந்தவர்கள் உண்டு என்றே நினைப்பர்.

தென்காசியின் முந்தைய பெயர் செண்பகப்பொழில். இந்தியா சில பேருக்கு குமரிக்கண்டம் என்பது நாவலந்தன் பொழில். அதனால் பொழில் என்பது பரவலான வார்த்தையே. தமிழின் நிலை உயர வேண்டுமெனில் சொற்குவியல்களை திரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேற்று மொழியை தன் மொழிப்படுத்தும் போது மட்டுமெ காரணப்பெயரிடலாம் என்பது என் கருத்து. மழைக்காடுகள், நிர்வீழ்ச்சி போன்ற சொற்களை தவிர்க்கலாம்.

மலை அடிவாரத்தில் பதினென் சித்தர் மூலிகைப் பொழில் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:58, 17 சனவரி 2013 (UTC)Reply

  விருப்பம் -- சுந்தர் \பேச்சு 10:56, 24 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொழில்&oldid=1305809" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பொழில்" page.