பனித்தூவி
பனித்தூவல் (Snow/Snowflake) அல்லது பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வடிவங்களில் உருவாவதைக் காணலாம்..[1]> தகுந்த சூழல்களில் வளிமண்டலத்தில் படிகமுற்று உருவாகியதும் அதன் சுழற்சி முழுவதும் இது பனிப்படிகமாகவே அமைகிறது. இது வலிமண்டலத்தில் மில்லிமீட்டர் அளவுக்குப் பெரியதாகி, பொழிந்து டரை மேற்பரப்பில் படி ந்து திரள்கிறது. பின்னர், அங்கேயே உருமாற்றம் அடைகிறது. உருமாற்றத்தின்போது உருகலாம்; நழுவலாம்; பதங்கமாகலாம். வளிமண்டலௌ ஈரமும் தண்ணிய காற்ரையும் பயன்படுத்திப் பனிபுயல்கள் உருவாகி வளரலாம். பனித்தூவல்கள் வளிமண்டலத் தூசி சுற்றி கருவாகி ஈர்ப்புற்ரு மேலும் மேலும் குளிர்ந்து நீர்த்துளியாகலாம்; இது பின் அறுகோணப் படிகங்களாக உறைகிறது. பனித்தூவல்கள் பல வடிவங்களில் அமையலாம். இவற்றில அடிப்படையானவை, தூவல்கள், ஊசிகள், தூண்கள், [[வன்குறுணைகள்|குறுணைகள் போன்றனவாகும். இவ்வாறு திரளும் பனி பாளங்களாகலாகி, நகரலாம். கால அடைவில், திரண்ட பனி கெட்டியாகிடலாம்; பதங்கமாகலாம்; உறைபாறையாக உருமாற்றம் உறலாம். களக் காலநிலை போதுமான அளவு குளிர்வாக அமைந்தால், ஒவ்வோராண்டும் திரளும் பனி, பனியாறாகவும் உருவெடுக்கலாம். அப்படி நேராதபோது பருவந்தோறும் உருகி, சிற்றோடைகளாகவோ ஆறாகவோ ஓடலாம்; நிலத்தடி நீராகத் தேங்கலாம். உயர்ந்த மலைகளில் உயரம் கூடக் கூட வெப்பநிலை தணிவதால் அங்கெல்லாம் பனித்தூவி விழுவதைப் பார்க்கலாம். நிலநடுக் கோடு இருக்கும் வெப்ப மண்டலங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைகளில் நிலையாக பனித்தூவி விழுந்து பனி மூடியிருக்கும். ஆப்பிரிக்காவில் தான்சானியாவில் இருக்கும் கிளிமஞ்சாரோ தனிமலையில் வெண்பனி மூடியிருப்பதைக் காணலாம். கிளிமஞ்சாரோவின் உயரம் 5,895 மீட்டர் ஆகும். இம்மலையில் 5,300 மீட்டர் உயரத்திலேயே வெண்பனி இருக்கும். இமயமலைத் தொடரில் எப்பொழுதும் வெண்பனி மூடியிருப்பதைப் பார்க்கலாம். அங்கே 8,000 மீட்டருக்கும் கூடுதல் உயரம் உள்ள மலைகள் பலவுண்டு. நிலவுலகின் வடமுனையிலும் (ஆர்ட்டிக்), தென்முனையிலும் (அண்ட்டார்டிக்) பல இடங்களில் குளிராக இருந்தும் பனித்தூவி விழுவதில்லை (குளிர்ந்த காற்று ஈரப்பதத்தை மேகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை). அங்கு உள்ள பனி உருகாததால் அவை எப்பொழுதும் உறைந்த பனிக்கடலாக உள்ளது. பேரளவு பனி சூழ்ந்த வெளிகளாக புவிமுனைப் பகுதிகள் அமைகின்றன; வட அரைக்கோள மேற்பாதியிலும் தென் அரைக்கோள முன்னையிலும் ஈரமும் தண்ணிய வெப்பநிலையும் நிலவும் அண்டார்ட்டிகா தவிர்த்த உலகின் அனைத்து மலைப்பகுதிகளிலும் பனிவெளி பரவியுள்ளது.[2]
பனி போக்குவரத்து போன்ற மக்கள் செயல்பாடுகளைத் தாக்குவதால், சாலைகளையும் சாளரங்களையும் பனிபடராமல் காத்திட வேண்டும்; வேளான்மை க்கான நீர்ப்பாசனம், கால்நடை பேணல், விளையாட்டுகள் பனிச்சறுக்கல், பனி எந்திரப்பயணம் போரிடல் போன்ற செயல்பாடுகள் பனிவழி தாக்குறாவண்ணம் காப்பாற்றவேண்டும். பனி நாம் நினைக்கும் இலக்கை அடையவொண்ணாமல் தடுக்கும்; பொருள்களின் தரத்தைக் குறைக்கும். போட்டியின்போது வீரர்களின் வலைமையைக் குன்றச்செய்யும்; நம் நகர்வுகளைக் குலைக்கும். பனி சூழல் அமைப்புகளைத் தாக்குவதோடு, சிலவேளைகளில் பனியடௌக்கால் நிலைத்திணைகளையும் விலங்குகளையும் குளிரில் இருந்து காப்பதும் உண்டு.[3]
பனிப்பொழிவு
தொகுபெரிய அமைப்பாகிய வானிலையின் ஒரு கூறான முகில்களில் பனி உருவாகிறது. பனிப்படக உருவாக்கத்தின் இயற்பியலில் ஈர உள்ளடக்கம், வெப்பநிலை உள்ளிட்ட பல மாறிகளின் சிக்கல் வாய்ந்த கணம் பங்கு வகிக்கிறது. இதனால் விளையும் பொழியும்/பொழிந்த பனிப்படிகங்களின் உருவடிவங்கள் பல அடிப்படை வடிவங்களாகவும் அவற்றின் சேர்மானங்களாகவும் பிரித்து வகைபடுத்தப்படுகின்றன. சிலவேளைகளில் இவை தட்டுபோன்றும் மரம் போன்றும் உடுவடிவத்திலும் பனித்தூவல்கள் தன் வெப்பநிலைத் தலைகீழாக்கம் உள்ள தெளிந்த வானத்திலும் உருவாகின்றன.
பனித்தூவி பல நேரங்களில் பல வகையாக அமையும். சில சமயம் வெண்நுரை போல் இருப்பதால் நுரைபனி என்றும், குறுமணல் போல் உருண்டோடுவதால், மணல் பனி என்றும், அள்ளி அமுக்கினால் இறுகுவதால் இறுகுபனி அல்லது சொருகுபனி என்றும் பனித்தூவலுக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகிறது.
பனிமுகில் தோற்றம்
தொகுபெரிய வானிலை அமைப்பில் வழக்கமாக உருவாகும் பனிமுகில்களில் முதன்மையானது தாழ் அழுத்தப் பகுதியாகும். இதன் சுற்றோட்டத்தில் வெதுப்பான வளிமுகப்புகளும் தண்ணிய வளிமுகப்புகளும் அமைந்திருக்கின்றன. முனைப்பாக பனியைத் தோற்றுவிக்கும் இரண்டு கூடுதல் கள வாயில்களாக, ஏரி/கடல் விளைவுப் புயல்களும் மலைகளில் அமையும் குத்துயர விளைவும் அமைகின்றன.
தாழ் அழுத்தப் பகுதிகள்
தொகுநடு அகலாங்கு சூறாவளிகள் தாழ்வழுத்தப் பகுதிகளாக அமைகின்றன. இவை முகில் தேக்கத்தில் இருந்து மென்பனிப் புயல்களையோ வன்மை வாய்ந்த பனிச்சூறைகளையோ உருவாக்கலாம்.[4] ஒவ்வொரு அரைக்கோளத்தின் இலையுதிர்காலத்திலும் மழைக்காலத்திலும் இளவேனிற் காலத்திலும் கண்டத்தின் மேலமைந்த வளிமண்டலம் போதுமான அளவுக்குத் தண்ணியநிலையில் இருக்கும்போது, ஆழ்ந்த வெப்ப மண்டல அடுக்குக் கோளத்தூடாக பனிப்பொழிவை தரலாம். வட அரைக்கோளத்தில்,தாழ்வழுத்தப் பகுதியின் வடக்குப் பக்கம் பெருபாலான பனிப்பொழிவை விளைவிக்கிறது.[5] தென் அரைக்கோள நடு அகலாங்குகளில், சூறாவளியின் தெற்குப் பக்கம் பெரும்பாலான பனிப்பொழிவைத் தருகிறது.
பனித்தண் வளிமுகப்புகள்
தொகுதண்ணிய காற்றுத் திரளின் முன்னேறும் விளிம்பைக் கொண்ட பனித் தண்வளி முகப்பு, மழைச் சுழல்வட்டைப் போன்ற செறிந்த முகப்பு வெப்பச் சுழற்சித் தொடரமைந்த பனிச்சூறையை, தரை மேற்பரப்பு வெப்பநிலை உறைபதத்தில் அமையும்போது, உருவாக்கலாம். இதில் உருவாகும் வலிய வெப்பச் சுழற்சி போதுமான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கிறது. எனவே இது தான் கடக்கும் இடங்களில் எல்லாம் செறிவான பனிவீச்சால் தாக்குவதால் பேரளவுப் பனியைப் பொழிந்து நிரப்பும்.[6] இந்தவகை பனிச்சூறை தான் கடந்துபோகும் தடத்தில் ஒரு புள்ளியில் அரைமணி நேரத்துக்கு மேல் நிலைக்காது.ஆனால், பனிச்சூறைத் தொடரின் இயக்கம் நெடுந்தொலவிற்குப் பரவி அமையலாம். இந்தவகை பனிச்சூறை தான் கடந்துபோகும் தடத்தில் ஒரு புள்ளியில் அரைமணி நேரத்துக்கு மேல் நிலைக்காது.ஆனால், பனிச்சூறைத் தொடரின் இயக்கம் நெடுந்தொலவிற்குப் பரவி அமையலாம். முகப்புச் சூறைகள் தண்வளி முகப்புக்கு முன்னோ பின்னோ சிறுதொலைவுக்கு ஆழ்ந்த தாழ்வழுத்தப் பகுதியை உருவாக்கலாம் அல்லது தாழ்வகட்டுத் தொடரை உருவாக்கலாம். இது மரபான தண்வளி முகப்பு கட்த்தலைப் போலவே செயல்படும். பின்னை முகப்பில் சூறைகள் உருவாகும்போது, வழக்கமாக இரண்டு அல்லது மூன்று நேரியல் சூறைப் பட்டைகள் தொடர்ச்சியாகவும் விரைவாகவும் கடந்து செல்லலாம். இவை ஒவ்வொன்றும் 25 கற்கள் அல்லது 45 கிமீ தொலைவில் அரைமணி நேரக் கால இடைவெளியில் கடக்கலாம். பேரளவு குத்துநிலை வளர்ச்சியும் கலத்தலும் அமையும் நேர்வுகளில், சூறை தன்னுள் திரள்கரு முகில்களை உருவாக்கலாம். இது பனியிடிப் புயல் எனப்படுகிறது.
உறைந்த காற்றுக்குக் கீழாக வெதுப்பான ஈரக் காற்று செல்லும்போது சிறிது நேரம், வெதுப்பான முகப்பு கூட, பனிப்பொழிவை உருவாக்கலாம். அடிக்கடி, முகப்பின் பின்னமைந்த வெதுப்பான பகுதியில் பனிப்பொழிவு, மழைப்பொழிவாகவும் மாறுவதுண்டு.[6]
ஏரி, பெருங்கடல் விளைவுகள்
தொகுகுளிர்ச்சியான வளிமண்டலச் சூழல்களில், தண்காற்றுத் திரள் வெதுவெதுப்பான ஏரி நீர்ப்பரப்பைக் கடந்து செல்லும்போது காற்றின் அடிப்பகுதி சூடாகிப் பேரளவு ஏரி நீரை ஈரப்பதமாக உட்கவர்ந்து மேலமைந்த தண்வளி முகப்பைக் கடந்து மேலெழும்போது உறைந்து மறுமழி மறைவுப் பக்க்க் கரையில்/கடற்கரையில் கீழிறங்கும்போது பனியாகப் பொழியும்.[7][8]
உவர்நீர்நிலைகளிலும் இதே விளைவு நிகழும்போது பெருங்கடல் விளைவு எனப்படுகிறது. இந்த விளைவு மலையால் காற்றுத் திரள் மேலே தூக்கப்படும்போது உயர்குத்துயரத்தால் செறிவடைந்து இறங்குமுக கடற்கரைகளில் பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது. இந்த மேலெழுச்சி குறுகலான ஆனால் செரிவானபொழிவுப் பட்டையை உருவாக்கும். இதனால், ஒரு மணியளவில் பல அங்குல பனியை வீழ்படியச் செய்து பேரளவு பனிப்பொழிவை உண்டாக்கும்.[9]
ஏரி விளைவுப் பனிபொழிவுப் பகுதிகள் பனிப்பட்டைகள் என வழங்குகின்றன. இவற்றில், பேரேரியின் கிழக்குப் பகுதியும் வடக்கு யப்பானின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளும் உருசியாவின் கம்சாத்கா தீவகமும் பேருப்பு ஏரி, கருங்கடல், காசுபியக் கடல், பால்டிக் கடல், வட அத்திலாந்திக் பெருங்கடலின் பகுதிகள் ஆகியன அடங்கும்.[10]
மலை விளைவு
தொகுமலைசார் அல்லது மலைவீழ் பனிப்பொழிவு, காற்றுவீச்சால் உந்தித் தள்ளப்படும் காற்றுத் திரள் விசைமிக மலையின் மேல்நிலப் பகுதிகளுக்கு மேலெழும்புவதால் நிகழ்கிறது. இவ்வாறு மலைமேல் அல்லது மலைத்தொடர்களில் எழும்பும் காற்று நிலைவெப்ப இழப்புக் குளிர்வால் செறிந்து பனியாகப் பொழிகிறது. ம்லையில் எழும்போது ஈரம் நீக்கப்படுவதால் பொழிவு மறைப்பக்கத்தில் வீசும் காற்று உலர்வாக அமைகிறது. இது போயென் காற்று எனப்படுகிறது.[11] இதனால் பனிப்பொழிவின் ஆக்கத்திறன் கூடுதலாவதோடு,.[12] குத்துயரம் கூடுகையில் வெப்பநிலை குறைவதாலும்[13] பனிவீழ் பகுதிகளின் குத்துயரம் கூடும்போது, பனி அடுக்கு ஆழமும் பருவமுறைப் பனிப்படர்வும் தொடர்ந்து நீடித்து நிலைக்கும்.[3][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hobbs, Peter V. (2010). Ice Physics. Oxford: Oxford University Press. p. 856. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199587711.
- ↑ Rees, W. Gareth (2005). Remote Sensing of Snow and Ice. CRC Press. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420023749. பார்க்கப்பட்ட நாள் December 9, 2016.
- ↑ 3.0 3.1 Michael P. Bishop, Helgi Björnsson, Wilfried Haeberli, Johannes Oerlemans, John F. Shroder, Martyn Tranter (2011), Singh, Vijay P.; Singh, Pratap; Haritashya, Umesh K. (eds.), Encyclopedia of Snow, Ice and Glaciers, Springer Science & Business Media, p. 1253, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048126415, பார்க்கப்பட்ட நாள் November 25, 2016
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ DeCaria (December 7, 2005). "ESCI 241 – Meteorology; Lesson 16 – Extratropical Cyclones". Department of Earth Sciences, Millersville University. Archived from the original on February 8, 2008. பார்க்கப்பட்ட நாள் June 21, 2009.
- ↑ Tolme, Paul (December 2004). "Weather 101: How to track and bag the big storms". Ski Magazine (Skimag.com) 69 (4): 298. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-6159. https://books.google.com/books?id=t1DaXO7wF20C&pg=PA126&dq=low+pressure+area+snow&hl=en&sa=X&ved=0ahUKEwiX7ajd78nQAhVh4YMKHbl8ALEQ6AEILDAD#v=onepage&q=low%20pressure%20area%20snow&f=false. பார்த்த நாள்: November 27, 2016.
- ↑ 6.0 6.1 Meteorological Service of Canada (September 8, 2010). "Snow". Winter Hazards. Environment Canada. Archived from the original on ஜூன் 11, 2011. பார்க்கப்பட்ட நாள் October 4, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "NOAA - National Oceanic and Atmospheric Administration - Monitoring & Understanding Our Changing Planet". Archived from the original on 2015-01-02. பார்க்கப்பட்ட நாள் 2017-09-13.
- ↑ "Fetch". Archived from the original on May 15, 2008.
- ↑ Mass, Cliff (2008). The Weather of the Pacific Northwest. University of Washington Press. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-98847-4.
- ↑ Thomas W. Schmidlin. Climatic Summary of Snowfall and Snow Depth in the Ohio Snowbelt at Chardon. Retrieved on March 1, 2008.
- ↑ Physical Geography. CHAPTER 8: Introduction to the Hydrosphere (e). Cloud Formation Processes. பரணிடப்பட்டது திசம்பர் 20, 2008 at the வந்தவழி இயந்திரம் Retrieved on January 1, 2009.
- ↑ Stoelinga, Mark T.; Stewart, Ronald E.; Thompson, Gregory; Theriault, Julie M. (2012), "Micrographic processes within winter orographic cloud and precipitation systems", in Chow,, Fotini K.; et al. (eds.), Mountain Weather Research and Forecasting: Recent Progress and Current Challenges, Springer Atmospheric Sciences, Springer Science & Business Media, p. 750, பார்க்கப்பட்ட நாள் November 27, 2016
{{citation}}
: Explicit use of et al. in:|editor2-last=
(help)CS1 maint: extra punctuation (link) - ↑ Mark Zachary Jacobson (2005). Fundamentals of Atmospheric Modeling (2nd ed.). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-83970-X.
- ↑ P., Singh (2001). Snow and Glacier Hydrology. Water Science and Technology Library. Vol. 37. Springer Science & Business Media. p. 756. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780792367673. பார்க்கப்பட்ட நாள் November 27, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- United Nations Environment Programme: Global Outlook for Ice and Snow பரணிடப்பட்டது 2007-06-08 at the வந்தவழி இயந்திரம்
- Institute of Low Temperature Science, Hokkaido University
- Swiss Federal Institute for Forest, Snow and Landscape Research பரணிடப்பட்டது 2008-10-20 at the வந்தவழி இயந்திரம்
- National Snow and Ice Data Center of the United States
- American Society of Civil Engineers ground snow loads interactive map for the continental US