பேச்சு:மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இவர் ஈழ தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்கவரே.--Kanags \உரையாடுக 03:38, 10 செப்டம்பர் 2022 (UTC)

அறிமுகப்பகுதி, வாழ்க்கைக் குறிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து கல்வி, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றைப் பார்த்தாலும் அங்கும் குறிப்பிடத்தக்கமை இல்லை. (en:WP:POLITICIAN) --~AntanO4task (பேச்சு) 08:39, 10 செப்டம்பர் 2022 (UTC)
இலங்கையின் பின்காலனிய அரசியல் வரலாற்றில், குறிப்பாக மொழியுரிமை தொடர்பான போராட்டங்களில் (சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டம், எல்லாம் தமிழ் இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டம்) தீவிரமாகச் செயற்பட்ட, பங்களித்த முக்கிய தமிழ்ப் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் விளங்குகிறார். பெண்கள் அரசியலிலும் பொதுவெளிகளிலும் பங்குபெறுவதற்குப் பல சமூகத் தடைகள் புரையேறிக் காணப்படும் ஒரு சமூகத்தில், காலப்பகுதியில் அவரின் தலைமைத்துவமும் செயற்பாடுகளும் தனித்துவமான முக்கிய வரலாற்றுப் பதிவுருவாக அமைகின்றன. அவரின் வாழ்க்கை வரலாறு விக்கிப்பீடியா குறிப்பிடத்தக்கமையின் பின்வரும் விதிகளுக்குக் கீழ் உள்ளடங்கும்: “The person has made a widely recognized contribution that is part of the enduring historical record in a specific field” மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு A Dictionary of Biography of Ceylon Tamils இல் தொகுக்கப்பட்டிருப்பது. மேலும், மங்கையர்க்கரசியின் அரசியற் செயற்பாடுகள் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதப் பொருளாக இருந்தமை ஹன்சாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் பிபிசி உட்பட்ட ஆங்கில, தமிழ் ஊடகங்களில் அவர் தொடர்பான செய்திகளும் அறிக்கைகள் தொகுப்பும் significant coverage விதியின் கீழ் அமைந்து அவரை இலங்கைத் தமிழ் அரசியலில் செயற்பட்ட முன்னோடிப் பெண்களின் வரிசையில் முதன்மையானவராக்குகிறது. இக்கட்டுரையை விரிவாக்குவதற்கான உசாத்துணைகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். நன்றி. தமிழினி (பேச்சு) 21:23, 13 செப்டம்பர் 2022 (UTC)
Return to "மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்" page.