பேச்சு:மதிவாணர் நாடகத் தமிழர்

நாடக நன்னூல், செயிற்றியம், சயந்தம், பொய்கையார் நூல் என்பன முன்பு இருந்த நாடக நூல்கள். இவை பற்றி யாப்பருங்கல உரையாரியர்களும், சிலப்பதிகார உரையாசிரியர்களும் எழுதியுள்ளனர். வள்ளிக்கூத்து என்னும் ஒரு வகை கூத்தும் நாடு வளம்பெற ஆடுவார்கள், இது பற்றி தொல்காப்பியத்தில் "வாடாவள்ளி" என்னும் தொடரால் குறிப்பிடுகின்றார். பெரும்பாணாற்றுப்படையிலும் கீழ்க்காணும் குறிப்பு வருகின்றது


வாடாவள்ளியின் வளம்பல தரூஉம்
நாடுபல கழிந்த பின்றை (பெரும்பாண். 370-371)

தமிழர்கள் தங்கள் செல்வங்களைப் அறியாமலும் போற்றாமலும் இருந்ததும் (இப்பொழுது இருப்பதும்) வருந்தத்தக்கதே.--செல்வா 22:50, 8 மார்ச் 2007 (UTC)

என்ன செய்வது ? தமிழின் பெருமையினை தமிழனே அறியாதல்லவா உள்ளான். ஆனாலும் தமிழ் விக்கிபீடியா மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க முடியுமென நம்புகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 22:53, 8 மார்ச் 2007 (UTC)

ஆமாம், நிரோ நீங்கள் சொல்வது உண்மைதான். வாழ்க உங்கள் நன்னம்பிக்கை! உங்களைப் போலவும் நல்ல இளைஞர்களால் தான் வருங்காலத்திலும் வழிவழியாகவும் வளர்த்தெடுக்க இயலும். சுமார் 200 ஆண்டுகளுக்கும் முன்னர் கிரேக்க, உரோமானியரைப் பற்றியும் அவ்வளவாகத் தெரியாதுதான். இப்பொழுது ஆய்வுகள் பெருகி வருகின்றது. தமிழர்கள் விழிப்புணர்வோடு இருந்து காக்கவேண்டியதைக் காக்கவும், வளர்க்க வேண்டியதை வளர்க்கவும் செய்தால் நாமும் முன்னணியில் உள்ள ஒரு மொழி இனத்தவர்களாக இருக்க முடியும். த. வி ஒரு காலத்தில் பயனுடைய பொது அறிவுக் கருவூலமாகத் திகழும் என நம்புகிறேன். --செல்வா 23:05, 8 மார்ச் 2007 (UTC)
Return to "மதிவாணர் நாடகத் தமிழர்" page.