பேச்சு:மந்த வளிமம்

இதனை (inert gas) மந்தவளிமம் அல்லது இயைபரிய வளிமம் (வேதி வினைகளில் எளிதில் பங்குகொள்ளாத இயையாத வளிமம்) அல்லது இயைபுறா வளிமம் எனலாம். வளிமம் என்பதற்கு மாறாக வளி என்றும் சொல்லலாம். --செல்வா 22:22, 17 சனவரி 2012 (UTC)Reply

நான் பள்ளியில் (தமிழ் வழியில்) படிக்கும்போது மந்த வாயுக்கள் என்றுதான் படித்ததாக ஞாபகம் ஐயா!....ஏன் இதை சொல்கிறேன் என்றால் மந்த வாயு என்றால்தான் நிறைய பேருக்கு தெரியும் என நான் நினைக்கிறேன்.....--shanmugam 03:23, 18 சனவரி 2012 (UTC)Reply

நன்றி சண்முகம். ஆனால் வாயு என்பதும் வளி அல்லது வளிமம் என்பதும் ஒன்றே. வளி, வளிமம் நல்ல தமிழ்ச்சொற்கள். வாயு கடன் சொல். வளி என்பது, சூறாவளி போன்ற சொற்களில் பயன்படுவதும் அல்லாமல், சித்த மருத்துவத்திலும், திருக்குறளிலும் ஆளப்பெறும் சொல். அ.கி.மூர்தியின் அறிவியல் அகராதியிலும் வளிமம் என்று கொடுத்துள்ளனர். திருக்குறள்:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


என்று கூறுகின்றார். மேலும் திண்மம், நீர்மம், வளிமம் என்பன சீரான சொல்லாட்சி. எனவே மந்த வளி அல்லது மந்த வளிமம் என்று இருப்பது நல்லது என்று தோன்றுகின்றது. பிறைக்குறிகளுக்குள் மந்த வாயு என்றும் முதலில் குறித்துத் தொடர்பு ஏற்படுத்தலாம். மந்தம், மக்கு, மங்கு, மட்டு, மண்டு முதலான பல சொற்கள் தணிந்து இருப்பதைக் குறிப்பதால் மந்தம் என்பது நல்ல தமிழாகவே இருக்கும். --செல்வா 01:18, 20 சனவரி 2012 (UTC)Reply

அப்படியானால் அவ்வாறே செய்து விடலாம் ஐயா... வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள்ளோ அல்லது வழிமாற்றாகவோ மந்தவாயு என கொடுத்துவிடலாம் என நினைக்கிறன்...--shanmugam 01:53, 20 சனவரி 2012 (UTC)Reply
நன்றி சண்முகம். மாற்றிவிடுகிறேன்.--செல்வா 02:02, 20 சனவரி 2012 (UTC)Reply

வளிமம் என்பது பன்மைக்கும் பயன்படும் சொல்லா? அல்லது பன்மைக்கு வளிமங்கள் என்று எழுத வேண்டுமா (முதல் வரியில் வளிமம் என்று சொல்லப்பட்டு அடைப்பில் வாயுக்கள் தரப்பட்டுள்ளது)--சோடாபாட்டில்உரையாடுக 03:46, 20 சனவரி 2012 (UTC)Reply

பன்மைக்கு வளிமங்கள் என்றுதான் எழுத வேண்டும் என கருதுகிறேன்...[1] பார்க்கவும்.--shanmugam 09:34, 20 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மந்த_வளிமம்&oldid=1537442" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மந்த வளிமம்" page.