மனம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அய்யா, விக்கிப்பிடியாவிற்கு னான் புதியவன், எனக்கு உதவுங்கள் -hr.பாலசுன்தரம்

@TNSE sankarkuppan vlr, TNSE BASHEER VLR, and Kalaiarasy: சங்கர், தாங்கள் கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியை நாடுவது போல் உள்ளது. என்ன தான் கூகுள் மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்தினாலும் அதன் இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு வாடை நீங்குவதில்லை. வரிக்கு வரி ஆங்கிலச் சொற்றொடர் அமைப்புக்கு ஏற்ப மொழிபெயர்கப்பட்டிருப்பதால் படித்தால் புரியவில்லை. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை ஒப்பிட்டடுப் பார்த்தால் தான் புரிகிறது. தமிழ்நடை போல் இயல்பாகவும் இல்லை. எனவே, கூகுள் மொழிபெயர்ப்பை நாடாமல் கட்டுரையை முழுமையாகப் படித்து உள்வாங்கி நீங்களே முற்று முழுதாக தமிழாக்க முனையுங்கள். இது சிரமமாக இருந்தால் தங்களுக்கு நன்கு அறிமுகமான, இலகுவான தலைப்புகளில் மட்டும் எழுதலாம். கலை, கட்டுரையை முன்பிருந்த நிலைக்கு மீள்விக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 19:28, 12 சூலை 2017 (UTC)Reply

@TNSE sankarkuppan vlr and TNSE BASHEER VLR: எனக்கு ஒன்று புரியவில்லை. கட்டுரை பயனர்:TNSE sankarkuppan vlr என்பவரால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையைச் சமர்ப்பித்திருப்பது பயனர் பேச்சு:TNSE BASHEER VLR என்று உள்ளது. இருவரும் ஒருவர்தானா?--கலை (பேச்சு) 20:59, 12 சூலை 2017 (UTC)Reply
கலை, இருவரும் வெவ்வேறு பயனர்கள். பசீர் தன் மாவட்டப் பங்களிப்பாளர்களை இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவித்து வழிகாட்டும் நோக்கில் இக்கட்டுரையைச் சமர்ப்பித்து இருக்கலாம். விரிவாக்கியவர் கணக்கிலேயே கட்டுரையைச் சேர்க்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பு கட்டுரையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். --இரவி (பேச்சு) 21:03, 12 சூலை 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மனம்&oldid=2422092" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மனம்" page.