பேச்சு:மனித மேம்பாட்டுச் சுட்டெண்

index என்பதை சுட்டெண் என பாவிக்கலாமே --டெரன்ஸ் 03:25, 19 ஜூன் 2006 (UTC)

ஆமாம், சுட்டெண் நன்றாகவே உள்ளது. --Natkeeran 01:04, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

மாந்தர் எதிர் மனிதர்

தொகு

செல்வா, பல கட்டுரைகளிலும் மனிதர் என்பதற்குப் பதில் மாந்தர் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள். இது எந்த விதத்தில் சிறந்தது என்று எடுத்துச்சொன்னீர்களானால் உதவியாக இருக்கும். நன்றி. --ரவி 22:30, 21 மார்ச் 2007 (UTC)

மனிதன் என்னும் சொல்லை தாராளமாகப் பயன்படுத்தலாம். மாந்தன் என்பது மனிதன் என்பதும் ஒன்றுதான். மனிதன் என்பது தமிழ் வடிவம் இல்லை. முன்னுதல் என்றால் எண்ணுதல், கருதுதல் என்று பொருள். முன் - மன் என்று மனிதன் ஆகும். மன்னன், மன்பதை (= mankind) ஆகிய சொற்களும் எண்ணத்தக்கது. ஆனால் மனிதன் என்பது தூய தமிழ் வடிவம் இல்லை. மாந்தன் என்பதும் மனிதன் என்பதும் ஒன்றே. மாந்தன் தூய தமிழ் வடிவம். மனிதன் என்று எழுதுவதில் தயக்கம் ஏதும் தேவை இல்லை. நான் இரண்டும் பயன்படுத்துவேன். ஏனெனில் இரண்டு சொற்களும் வழக்கில் இருக்கவேண்டும் என்னும் கருத்தில். சற்று வேறாக அவ்வப்பொழுது எழுதுவது நல்லதுதானே.--செல்வா 00:22, 22 மார்ச் 2007 (UTC)

விளக்கத்துக்கு நன்றி, செல்வா--ரவி 07:01, 22 மார்ச் 2007 (UTC)

வளர்ச்சி எதிர் மேம்பாடு

தொகு

வளர்ச்சி என்னும் சொல் Growth என்னும் சொல்லுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் Development என்னும் சொல்லுக்குப் பொருத்தமாகப்படவில்லை. எனவே, மேம்பாடு என்னும் சொல்லைப் பயன்படுத்தலாமா? Human Development Index = மனித மேம்பாட்டுச் சுட்டெண்?--பொன்னிலவன் (பேச்சு) 09:35, 30 சூலை 2012 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரியென்று தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 14:18, 30 சூலை 2012 (UTC)Reply
Return to "மனித மேம்பாட்டுச் சுட்டெண்" page.