வாருங்கள்!

வாருங்கள், பொன்னிலவன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 12:14, 20 சூலை 2012 (UTC) வணக்கம் பொன்னிலவன். வேறொரு பயனரின் பயனர் பக்கத்தில் நீங்கள் மாற்றங்கள் செய்து வருவதைக் கண்டேன். வேறொருவரின் பயனர் பக்கத்தில் எழுதுவது பொதுவான விக்கி நடைமுறை அல்ல. அந்தப் பயனர் உங்களுக்கு அனுமதி தந்தாரா? அல்லாவிடில் அவை நீக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 21:22, 24 சூலை 2012 (UTC)Reply

அவர் நண்பர் என்பதால் எழுதினேன். அவ்வாறு செய்வது நடைமுறை இல்லை என்பதனை அறிந்துகொண்டேன். எழுதியவைகளை அவரிடம் தெரித்துவிட்டு நீக்கிவிடுகிறேன். --பொன்னிலவன் (பேச்சு) 10:40, 28 சூலை 2012 (UTC)Reply
பரவாயில்லை பொன்னிலவன். நீங்கள் செய்த தொகுப்பின் பின்னர் அவரும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். அதனால் அவரது ஒப்புதல் இருக்கும் என்றே கருதப்படும். அதனால் நீங்கள் எதனையும் நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றி பொன்னிலவன்.--Kanags \உரையாடுக 10:59, 28 சூலை 2012 (UTC)Reply

படிமங்கள்

தொகு

பொன்னிலவன், அண்மையில் நீங்கள் தரவேற்றிய VNJ, EVKS படிமங்களை எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 07:37, 13 ஆகத்து 2012 (UTC)Reply



தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், பொன்னிலவன்!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 13:11, 7 மார்ச் 2013 (UTC)

Radhika-Sarathkumar.jpg, Prathap Pothen-Radhika.jpg ஆகிய இரு படிமங்களும் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். இவை காப்புரிமை கொண்ட படிமங்களாயின் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 09:06, 16 சூன் 2013 (UTC)Reply

இராதிகா சரத்குமார் படம் http://tamil.boldsky.com/insync/2012/celebrities-who-fell-married-men-002356.html என்னும் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது. --பொன்னிலவன் (பேச்சு) 17:33, 19 சூன் 2013 (UTC) இராதிகா பிரதாப்போத்தன் படம்ம் http://snapjudge.wordpress.com/2009/09/11/balaji-santhanam-album-80s-tamil-cinema-snippets/pc-sreeram-balaji-sandhanam-prathap-pothen-radhika-k-subaash/ என்னும் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது.--பொன்னிலவன் (பேச்சு) 17:41, 19 சூன் 2013 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா...? திட்டம்

தொகு


நன்றி

தொகு

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் பக்கத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்தமைக்கு நன்றி. தற்போது பரிந்துரைகளை இட இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:30, 4 ஏப்ரல் 2014 (UTC)

சிக்கலான அமைப்பு தேவையில்லை. எளிமையாக இருக்கட்டும். அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டுச் செய்யுங்கள். --AntonTalk 18:52, 4 ஏப்ரல் 2014 (UTC)
ஆன்டன், நான் பரிந்துரைத்திருந்த வடிவம் எப்படி சிக்கலானது எனப் புரியவில்லை. மேலே ஶ்ரீகர்சன் அப்பரிந்துரைதான் இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கிறது என்கிறார். முதற்பக்கத்திற்கான கட்டுரையை ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்; அதனை ஆதரித்தோ, மறுத்தோ மற்றவர்கள் கருத்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் அக்கட்டுரையை முதற்பக்கத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் விதியென நான் புரிந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் தற்பொழுதைய வடிவத்தில் பரிந்துரைப்பவர் தன் கையொப்பத்தை இடுகிறார். அதை ஆதரித்தோ, மறுத்தோ எங்கு கூறுவது என்பது தெளிவாக இல்லை; இதனாலேயே மற்றவர்கள் அப்பணியைச் செய்வதில்லை. எனவேதான் புதியவடிவத்தைப் பரிந்துரைத்தேன். மற்றவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டுமென்றால் எங்கு கேட்க வேண்டும்? பரிந்துரைத்த வடிவத்தை நீக்குவதற்கு முன்னர் நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கேட்டீர்கள்? --பொன்னிலவன் (பேச்சு) 07:16, 7 ஏப்ரல் 2014 (UTC)
நீங்கள் வடிவமைக்க முன் யாரிடம் கேட்டீர்கள்? --AntonTalk 07:34, 7 ஏப்ரல் 2014 (UTC)
நான் யாரிடமும் கேட்கவில்லை. கேட்க வேண்டும் எனத் தெரியாது. எனவேதான் எங்கு கேட்க வேண்டும் எனக் கேட்க வேண்டும் என வினவி இருக்கிறேன். யார் யாரிடம் கேட்க வேண்டும் என அறிவதற்காகத்தான் "பரிந்துரைத்த வடிவத்தை நீக்குவதற்கு முன்னர் நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கேட்டீர்கள்?" என வினவி இருக்கிறேன்.:-)--பொன்னிலவன் (பேச்சு) 08:59, 15 ஏப்ரல் 2014 (UTC)
விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. அப் பட்டியலில் பரிந்துரைகளை மட்டும் சேர்க்கவும். இலகுவாக வடித்தெடுக்க இது அவசியம். ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகள் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன. நன்றி. --Natkeeran (பேச்சு) 22:35, 27 ஏப்ரல் 2014 (UTC)
விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தில் பெப்ரவரி 23, 2014 ஆம் நாளுக்குப் பின்னர் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகள் எவையும் இடம்பெறவில்லை. அவற்றைப் பதிதல் வேண்டும். --பொன்னிலவன் (பேச்சு) 06:36, 29 ஏப்ரல் 2014 (UTC)

பதிப்புரிமை மீறல் - படிமங்கள்

தொகு
 

வணக்கம், பொன்னிலவன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


அனுமதி

தொகு
  1. Balumahendra, Sukisivam - இவற்றின் பதிப்புரிமை என்ன? இவை உங்களுடைய சொந்த முயற்சியால் ஒளிப்படமாக்கப் பட்டவையா?
  1. Ramnad_palace, Ramanathapuram - இவற்றின் அனுமதி மற்றப்பட வேண்டும். தகுந்த வார்ப்புருவை இடவும். அல்லது நீக்கப்படலாம்.

--AntonTalk 18:37, 30 ஏப்ரல் 2014 (UTC)

  1. பாலுமகேந்திரா, சுகி.சிவம் ஆகிய இருவரின் படங்களும் கூகுள் படங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றின் பதிப்புரிமை யாருடையவை என எனக்கு தெரியவில்லை.
  2. இராமநாதபுரம் அரண்மனைப் படங்களும் கூகுள் படங்களில் இருந்து எடுக்கப்பட்டவைதான். ஒரு படைப்புரிமை என்பது அப்படைப்பாளி மறைந்து 60 ஆண்டுகளுக்கு மட்டுமே அவரது வாரிசுகளுக்கு உரியது. அதன் பின்னர் பொதுச்சொத்தாக மாறிவிடுகிறது. எனவே இவையிரண்டும் பதிப்புரிமை அற்றவை. --பொன்னிலவன் (பேச்சு) 11:50, 2 மே 2014 (UTC)Reply
பதிப்புரிமையுள்ள படிமங்களை பதிவேற்ற வேண்டாம். --AntonTalk 18:30, 5 மே 2014 (UTC)Reply

முடிவெடுங்கள்...

தொகு

வணக்கம்! பகுப்பு:பாலகுமாரனின் புதினங்கள் எனும் பகுப்பும் இருக்கிறது. எப்படி பயன்படுத்துவது என்பதனை முடிவு செய்யுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:04, 14 மே 2014 (UTC)Reply

வணக்கம்! தங்களின் சுட்டிக்காட்டலுக்கு நன்றி! அப்பகுப்பைக் கண்டேன். அதில் பாலகுமாரனின் புதினங்கள் மட்டுமே தொகுக்கப்படுகின்றன. பகுப்பு: பாலகுமாரனின் நூல்கள் என்பதில் பாலகுமாரன் உருவாக்கிய புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லா நூல்களும் தொகுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் பகுப்பு:பாலகுமாரனின் புதினங்கள் என்னும் பகுப்பை பகுப்பு:பாலகுமாரனின் நூல்கள் என்பதன் துணைப் பகுப்பாக்கலாம்.--பொன்னிலவன் (பேச்சு) 18:18, 14 மே 2014 (UTC)Reply

 Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:26, 14 மே 2014 (UTC)Reply

விடயத்திற்கு வெளியே கருத்துரைத்தல்

தொகு

ஏற்கெனவே உங்கள் பேச்சுப்பக்கத்திலும், இங்கும் விடயத்திற்கு வெளியில் கருத்துரைத்தல், அதனோடு பயனரை கேலி செய்தல் போன்ற விக்கிப்பண்பற்ற நடத்தையில் இனிமேலும் ஈடுபட வேண்டாம். இனியும் வெறுப்புடன்கூடிய கருத்துக்கள் இட்டால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என தெரிவிக்கின்றேன். --AntonTalk 15:58, 20 மே 2014 (UTC)Reply

மிரட்டல்? --பொன்னிலவன் (பேச்சு) 07:13, 21 மே 2014 (UTC)Reply
பயனருக்கான அறிவிப்பு. --AntonTalk 16:02, 21 மே 2014 (UTC)Reply
மிரட்டல் பாணியில் அமைந்த அறிவிப்பு. இப்படியான அறிவிப்புகள் எமது விக்கியை வளர்க்காது.--Kanags \உரையாடுக 11:43, 3 சூன் 2014 (UTC)Reply
இதில் எந்த மிரட்டலும் இருப்பதாக தெரியவில்லை. விக்கிப்பீடியா நடைமுறைகளுக்குப் புறம்பாக மிரட்டி எதைச் சாதிக்க முடியும் என்றும் புரியவில்லை. தகுந்த இடங்களில் இது போன்ற எத்தனையோ அறிவுறுத்தல்கள் அல்லது எச்சரிக்கைகளை விடுவது விக்கிப்பீடியா வழக்கமே. புதுப் பயனர்களை அரவணைக்க வேண்டும் தான். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைக்கு அதிகமாகவே பல இடங்களில் நெடுநாள் பயனர்களிடம் கூட இளக்க அணுகுமுறையே கடைபிடித்து வருகிறோம். எனவே, அன்டனைப் போன்ற ஓரிருவர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு சமநிலையைத் தரும். --இரவி (பேச்சு) 14:26, 3 சூன் 2014 (UTC)Reply
இவ்வாறானவற்றுக்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் அன்ரன் குறித்திருக்க வேண்டும். எனக்கே எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியாமல் இருக்கிறது. அறியத் தாருங்கள், அனைவரும் இவ்வாறே பயனர் அறிவித்தல்கள் தருவார்கள் என நம்புகிறேன். அன்ரனின் முன்மாதிரிக்கு வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:56, 3 சூன் 2014 (UTC)Reply
ஆம், குறிப்பாக என்ன நடவடிக்கை என்பதைத் தெளிவுபடுத்துவது வரவேற்கத்தக்கது. கவனிக்க: Anton--இரவி (பேச்சு) 05:08, 4 சூன் 2014 (UTC)Reply
சிறிதரனுக்கு இது எப்படி மிரட்டலாகத் தெரிந்தது? ஒருவர் தொடர்ந்து கேலி செய்தும், விடயத்திற்கு வெளியிலும் உரையாடினால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? //அன்ரனின் முன்மாதிரிக்கு வாழ்த்துகள்.// சிறிதரனின் முன்மாதிரிக்கும் வாழ்த்துகள். --AntonTalk 17:58, 9 சூன் 2014 (UTC)Reply
எனக்குத் தெரியும், ஆனால் இவர் புதியவர், நீங்கள் ஏதேனும் (பாரதூரமான) சட்ட நடவடிக்கை எடுத்து விடுவீர்களோ எனப் பயந்திருப்பார்.--Kanags \உரையாடுக 21:02, 9 சூன் 2014 (UTC)Reply
இது மிரட்டல்தான். அன்ரனின் பேச்சுப்பக்கத்தையும் அவர் மற்றவர்கள் பேச்சுப்பக்கங்களில் எழுதியிருப்பவைகளையும் படித்தால் அவர் எவ்வளவு முரட்டுத்தனமாக மற்றவர்களோடு உரையாடுகிறார் என்பது புரியும். மற்றவர்களோடு பழகும்தன்மையில் (Inter Personal Relationship) அவருக்குச் சிக்கல் இருக்கிறது. முரட்டுத்தனமான உரையாடல் உறுதியான நடவடிக்கை ஆகாது. விதிமுறைகளை அவர் கடுமையாகப் பின்பற்றவராக இருந்தால், பயனரால் தேர்ந்தெடுக்கப்படாத ஶ்ரீகர்சனை முதற்பக்கத்தை இற்றைப்படுத்துவராக நியமித்ததை மறுத்து ஏன் கருத்துக்கூறவில்லை. இது ஆளுக்கு ஏற்ப விதிகளைக் கையாளும் நிலையைத்தானே காட்டுகிறது. பயனர் ஒருவர் பதிவில் மாற்றுக்கருத்து இருந்தால் அதனை உரிய மரியாதையோடு தெரிவிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ராதிகாசரத்குமார் பக்கத்தில் நான் சில தகவலகளை பதிந்திருந்தேன். சில நாள்கழித்து அவை நீக்கப்பட்டு இருந்தன. நீக்கப்பட்டது ஏன் என வினவியிருந்தேன். உரிய ஆதாரங்களைச் சுட்டாமல் தனிநபர்களின் தனிவாழ்வுச் செய்திகளைப் பதிவுசெய்வது 'கிசுகிசு'வாக கருதப்படும் என கடுமையற்ற சொற்களைப் பயன்படுத்தி இரவி விளக்கியிருந்தார். அவ்வாறு செய்தால் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கலாம். ஆனால் அன்ரன் எழுத்துகள் எல்லாம் முரட்டுத்தனமாக இருப்பதால்தான் பயனர் பலருடனும் அவருக்கு மோதல் ஏற்படுகிறது. விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் பக்கத்திலும் எனது பேச்சுப்பக்கத்திலும் எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள். அதில் கேலி எங்கே இருக்கிறது. புலியூர் கேசிகன் பற்றிய கட்டுரையின் மீதான உரையாடலில் "அரிஅரவேலன் அரிதின் முயன்று தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும்" என்னும் வரியைச் சுட்டி என்னை வம்புக்கு இழுத்தவர் அவர்தான். அவர் செய்த கேலி அவருக்கு கேலியாகத் தெரியவில்லை. மாறாக நான் எழுதிய விடை அவருக்கு கேலியாகத் தெரிகிறது. இவ்வாறு "நான் செய்வதெல்லாம் சரி: நீ செய்வதெல்லாம் தவறு" என்னும் அன்ரனின் அணுகுமுறை விக்கிப்பீடியாவிற்கு நல்லது அன்று. ஒன்று அன்ரன் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்; அல்லது விக்கிப்பீடியா அன்ரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். --பொன்னிலவன் (பேச்சு) 09:18, 10 சூன் 2014 (UTC)Reply
கனகரத்தினம் சிறீதரன், நான் புதியவன்தான், ஆனால் பயந்தவன் இல்லை.--பொன்னிலவன் (பேச்சு) 09:18, 10 சூன் 2014 (UTC)Reply

பொன்னிலவன் என் நடத்தைபற்றி குறிப்பிட்டு தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டதாலும், நான் விலகிச் சென்றாலும் தொடர்ந்தும் பிணக்கு உருவாக்குவதில் குறியாக இருப்பதாலும் இவருக்கு தற்காலிகத் தடை ஏற்படுத்துமறு நிருவாகிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அல்லது தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டதால் அவர் மீது தற்காலிகத் தடையை நானே ஏற்படுத்தலாம். --AntonTalk 09:50, 10 சூன் 2014 (UTC)Reply

தமிழ் விக்கியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. நடத்துங்கள்.--Kanags \உரையாடுக 10:22, 10 சூன் 2014 (UTC)Reply
சிறீதரன், எது சர்வாதிகாரம்? யார் சர்வாதிகாரம் செய்கிறார்கள்? விக்கிப்பீடியா சர்வாதிகளின் இருப்பிடமா? விக்கிப்பீடியாவில் சர்வாதிகாரம் செய்யலாமா? விக்கியில் நிருவாகியாகிய உள்ள உங்ககளுக்கு அதில் என்ன பங்கு? --AntonTalk 10:45, 10 சூன் 2014 (UTC)Reply

அன்டன், பொன்னிலவன் - நமக்கு நேரடியாகத் தொடர்புடைய விசயங்களில் விக்கி முறையற்ற உரையாடல்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு நான் பங்கு கொண்ட பேச்சு:ஜே. இசட். ஏ. நமாஸ் உரையாடலை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள இயலுமா? குறிப்பாக, எந்தக் கூற்று தவறானது என்பதைச் சுட்டிக் காட்டி அதனை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மூன்று முறை கோரலாம். அதுவும் பயனளிக்காவிட்டால் சமுதாய முறையீட்டுக் கூடத்தில் முறையிடலாம். இதற்கு இடைப்பட்ட வேளையில் எந்த ஒரு பயனராவது மிகவும் முறையற்று நடப்பதாக மற்ற பயனர்கள் கருதினால் மூன்று முறை அறிவுறுத்திப் பார்க்கலாம். நிலைமை அத்துமீறிச் சென்றால், உரையாடலைக் கவனித்து வரும் நிருவாகப் பயனர்களில் ஒருவர் தேவைக்கேற்ற நடவடிக்கையை மேற்கொள்வார். இது பக்கத்தைப் பூட்டுவதாகவோ குறித்த காலத்துக்குப் பயனரைத் தடுத்து வைப்பதாகவோ இருக்கலாம்.

அன்டன் - எவ்வளவு தீவிரமான சிக்கலாக இருந்தாலும் சரி, நாம் தொடர்புடைய உரையாடல்களில் நாமே நேரடியாக பயனர் தடை போன்ற நிருவாக அணுக்கத்தைப் பயன்படுத்த முனையாமல் இருப்பது நன்று. இல்லையேல், சர்வாதிகாரமாகவே பார்க்கப்படும். பயனருடனான உரையாடலின் அதிகாரச் சமநிலையையும் பாதிக்கும். நம்மிடம் 39 நிருவாகப் பயனர்கள் இருக்கிறார்கள். யாராவது ஒருவராவது தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் :) கைப்பாவையாக வந்த ஒரு பயனர் என் மீது தனிப்பட்ட விமரிசனங்களை முன்வைத்த போதும், மற்ற ஒரு நிருவாகிப் பயனர் இவ்வாறு நடவடிக்கை எடுக்கும் வரை அமைதி காக்கவே செய்தேன். இன்னொன்று, கடந்த பல ஆண்டுகளில் நானும் சில இடங்களில் உறுதியான நடவடிக்கைகள் எடுத்த போது, அது தனிப்பட்ட பயனருக்கு எதிரான என்னுடைய பிரச்சினையின் காரணமாக எடுத்த நடவடிக்கையாக தவறுதலாகவே புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், அதே வேளை இப்படி உறுதியாக எடுக்கும் நடவடிக்கைகளால் வருங்காலத்தில் நல்ல விதமாகப் பங்களிக்கக்கூடிய பயனர்கள் யாராவது தேவையின்றி உளைச்சலுற்று விக்கிப்பீடியாவை விட்டு விலகி விடக்கூடாதே என்ற கவலையும் எனக்குண்டு. எனவே, இயன்ற இடங்களில் தேவைக்குச் சற்று அதிகமாகவும் கனிவுடன் அணுகுவது உண்டு. அணுகுமுறையில் கனிவு என்பதில் நிலைப்பாட்டில் மாற்றம் என்பது ஆகாது. நம்முடைய நோக்கம் தொலைநோக்கில் விக்கிப்பீடியாவையும் மெய்யான விக்கிப்பீடியர்களையும் அரவணைத்து வளர்த்தெடுப்பதே. அதற்கு உதவக்கூடிய வெவ்வேறு அணுகுமுறைகளை ஒவ்வொரு பயனரும் முயன்று பார்க்கலாம் என்பதே என் வேண்டுகோள்.

பொன்னிலவன் - விக்கிப்பீடியாவின் அனைத்து செயற்பாடுகளிலும் தனியொரு பயனரின் முடிவு மட்டுமே இறுதியானதாகாது. எனவே, முதற்பக்கக் கட்டுரைப் பரிந்துரை என்றாலும் சரி, மற்ற விசயங்கள் ஆனாலும் சரி, தனிப்பட்ட பயனர்கள் கூறும் கருத்துகளை மட்டும் முன்வைத்து சிக்கலை அணுக வேண்டாம். இருபக்க உரையாடலின் தன்மையைப் பார்த்து மற்ற பயனர்களும் தேவைப்படும் இடங்களில் கருத்துரைப்பர்.

புலியூர்க் கேசிகன் கட்டுரையை எழுதிய அரிஅரவேலன் உங்களுடைய நண்பர் என்று இங்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள். அண்மையில், இவ்வாறு ஒருவரை ஒருவர் விக்கிப்பீடியாவுக்கு வெளியே அறிந்த வேறு இருவரின் தமிழ் விக்கிப்பீடியா செயற்பாடுகள் நலமுரணாக பார்க்கப்படலாமா என்று ஒரு தீவிரமான சிக்கல் எழுந்தது. எனவே, தங்களுடைய பரிந்துரையில் நலமுரண் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, "//அரிஅரவேலன் அரிதின் முயன்று தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும் இக்கட்டுரையை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்// இதுதானா முக்கிய காரணம்?" என்று அன்டன் கேள்வி எழுப்பியுள்ளதற்கு தகுந்த ஏரணம் உண்டு. எனவே, இதனைக் கிண்டலாக பார்க்கத் தேவையில்லை. இதனைத் தொடர்ந்த உரையாடல்கள் தான் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விட்டுள்ளன.

முன்பு பல உரையாடல்களில் நீங்கள் இருவரும் ஈடுபட்டிருந்தாலும், அண்மைய இச்சிக்கலின் மூலம் புலியூர்க் கேசிகன் கட்டுரையை முதற்பக்கத்தில் காட்டுவது தொடர்பான பரிந்துரை தான் என்று எண்ணுகிறேன். அக்கட்டுரையை முதற்பக்கத்தில் காட்டுவதற்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்து உள்ளேன். முதற்பக்கக் கட்டுரைகளுக்கான தகுதியை மீள வரையறுப்பது குறித்த உரையாடலையும் துவக்கியுள்ளேன். சிக்கலின் மூலத்தைத் தீர்ப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் என்று எதிர்பார்க்கிறேன். இதே போல் மூலச் சிக்கல் என்ன என்பதை மட்டும் கருத்தில் கொண்டு உரையாடினால் பல சிக்கல்களைத் தீர்க்கலாம். அப்படி அல்லாமல், சிக்கலைத் தனியாட்கள் தொடர்புடைய ஒன்றாக நகர்த்தும் போதே அது இன்னும் தீவிரமான ஒன்றாக மாறி விடுகிறது. இப்பக்கத்தில் அன்டன் தொடர்பாக நீங்கள் கூறியுள்ள பல கருத்துகள் தேவையற்றவை. தனிநபர் விமரிசனம் என்று கருதக்கூடியவை. வருங்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற கருத்துகளை நீங்கள் மீளப் பெற்றுக் கொள்வதன் உரையாடலைச் சுமுக நிலைக்குக் கொண்டு வர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 12:50, 16 சூன் 2014 (UTC)Reply

Kanags, விக்கிப்பீடியாவில் கொள்கைகள் கூட்டு / இணக்க முடிவாகவே எடுக்கப்படுகின்றன. தனியொரு நிருவாகி தன்னிச்சையாகவும் தவறுதலாகவும் ஒரு பக்கத்தைப் பூட்டினாலோ நீக்கினாலோ இன்னொரு நிருவாகி மீள்விக்க முடியும். பயனர் தடையும் அவ்வாறே. விக்கிப்பீடியா என்னும் சிந்தனையின் வடிவமைப்பே சர்வாதிகாரத்துக்கு எங்கும் இடம் தராத ஒன்று. இப்படியிருக்க, தமிழ் விக்கிப்பீடியாவில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது என்று நீண்ட நாள் பயனரும் நிருவாகியுமான நீங்கள் கூறுவது புதிய பயனர்களைத் தவறாக வழிநடத்தவல்லது. தமிழ் விக்கிப்பீடியாவைக் கவனித்து வரும் ஊடகங்கள், விமரிசகர்களுக்கும் தவறான தோற்றத்தைத் தரவல்லது. எனவே, உண்மையிலேயே நீங்கள் கூறும் பிரச்சினைகள் இருக்கும் எனில் தகுந்த இடங்களில் சுட்டிக் காட்டுங்கள். குறைந்தது, எடுத்துக்காட்டுகளையாவது தாருங்கள். இல்லையெனில், உண்மையற்ற இக்கூற்றை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:54, 16 சூன் 2014 (UTC)Reply

முதற்பக்க இற்றைப்பணியை மேற்கொள்ள தன்னார்வமாக முன்வருதலும் ஓரளவு தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளில் அறிமுகம் உள்ளதும் போதுமான தகுதியே. இதற்கு நியமனமோ பயனர் வாக்கெடுப்போ தேவையற்றது. இப்படித் தான் கடந்த பத்தாண்டுகளாகச் செய்து வருகிறோம். எனவே, சிறீகர்சன் இப்பொறுப்பினை ஏற்றுச் செய்ய அன்டன் ஆதரவு தந்ததில் தனிப்பட்ட சாய்வு ஏதும் இல்லை. அதே அன்டன் தான் அவருக்கு எதிராக நிருவாக வாக்கெடுப்பில் வாக்கிட்டுள்ளார் என்பதையும் கவனியுங்கள். முதற்பக்க இற்றை குறித்த உங்கள் புரிதலுக்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:01, 16 சூன் 2014 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம்.

 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:21, 3 நவம்பர் 2018 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,412 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பொன்னிலவன்&oldid=3957662" இலிருந்து மீள்விக்கப்பட்டது