மன அழுத்தம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நாடு பற்றிய தகவல் தரப்படவில்லை

தொகு

மன அழுத்தம் பற்றிய இந்தக் கட்டுரை மிகவும் நேர்த்தியாவும் பல தகவல்களையும் தருவதுமாய் காணப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனாலும், கட்டுரையில் இடம்பெற்றுள்ள பின்வரும் வசனத்தை கவனிக்கையில்:

"நம் நாட்டில் மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் மன அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மனஅழுத்த நோயினால் அவதியுற்று வருகிறோம்."

இங்கு "நம் நாட்டில் மக்கள் தொகையில்" என தன்மை நிலையில் தகவல் சொல்லப்பட்டுள்ளதோடு, என்ன நாடு என்பதற்கான தகவல்கள் தரப்படாமல் காணப்படுகிறது. குறித்த தகவல்கள் தொடர்பான உசாத்துணைகள் பற்றிய தெளிவையும் தகவலில் சொல்லப்படுகின்ற நாடு பற்றிய விடயத்தையும் அறிந்ததன் பின்னர் குறித்த தகவலை, மன அழுத்தம் பற்றிய இந்த ஆக்கபூர்வமான கட்டுரையில் சேர்ப்பது உசிதமானது என பரிந்துரை செய்கின்றேன். நன்றி. --Tharique 00:29, 29 சூன் 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா கட்டுரைகளில் சிலவற்றில் உள்ள மிக முக்கியமான குறைபாடு ஒன்றைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள் தாரிக். கட்டுரை எழுதும் சில இந்தியர்கள் அல்லது இலங்கையர் தங்கள் நாட்டை மையமாக வைத்து எழுதுகின்றனர். வலைப்பதிவுகளுக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால், விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியங்களில் இவ்வாறு எழுதுவது தவறு. தமது நாட்டை முன்னிலைப் படுத்துபவர்கள் அவற்றைத் தகுந்த உப பகுப்பினுள் அதனைச் சேர்க்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 00:39, 29 சூன் 2011 (UTC)Reply

?பதிப்புரிமை மீறல்

தொகு

இங்கு பார்க்கவும்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:48, 10 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மன_அழுத்தம்&oldid=1060388" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மன அழுத்தம்" page.