வணக்கம் கார்த்தி! இந்தக் கட்டுரை மருந்துப்போலி என்ற பெயரில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. இரு கட்டுரைகளையும் ஒன்றாக இணைத்து விடட்டுமா?--கலை 23:32, 18 நவம்பர் 2010 (UTC)Reply

கட்டுரைகளை இணைக்கும்போது எந்த தலைப்பை தொடர்ந்து வைத்திருக்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். மருந்துப்போலி, என்பது பொருத்தமாக இருக்கின்றதா, அல்லது வெற்று மருந்து என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கின்றதா என்பதையும் கூறுங்கள்.--கலை 23:31, 19 நவம்பர் 2010 (UTC)Reply

கார்த்திகேயன்! கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து எவ்வாறு இணைப்பது என்பதை அறியாமல் இருந்தேன். இன்று அதனை செய்து பார்ப்பதற்காய் 'விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்' பக்கத்தைப் பார்த்து, முதலில் எனது பயனர் வெளியில் ஒரு சோதனை முயற்சி செய்து பார்த்துவிட்டு, பின்னர் தாங்கள் எழுதிய வெற்று மருந்து கட்டுரையை இந்தக் கட்டுரையுடன் இணைத்துள்ளேன். இங்குள்ள வரலாற்றில் தற்போது, உங்கள் பங்களிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைப்பில் தங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லையெனில், இங்கேயே கட்டுரை இருக்கலாம். அதுபற்றி மேலதிகமாக உரையாட வேண்டுமென்றாலும், முடிவெடுத்து, இந்த கட்டுரையை மற்றைய தலைப்புக்கு நகர்த்தலாம். உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி.--கலை 00:32, 20 நவம்பர் 2010 (UTC)Reply

மருந்துப் போலி எனும் பெயரே சாலப்பொருந்தும் !

தொகு

கட்டுரைகளை இணைத்தமைக்கு நன்றி கலை ! dummy medication எனும் பொருள்பட வெற்று மருந்து எனும் பெயரிட்டேன். எனினும் விக்சனரியில் உள்ளதைக் கவனிக்காமல் விட்டு விட்டேன். மருந்துப் போலி எனும் பெயர் மிகவும் பொருந்தும் ! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 02:52, 20 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருந்துப்போலி&oldid=634071" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மருந்துப்போலி" page.