பேச்சு:மானிடவியல்

What is behavioural science called in Tamil

  • நடத்தை அறிவியல் Mayooranathan 09:18, 4 மார் 2005 (UTC)


மதிப்புடன் தங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழத்துக்களும். தமிழில் பண்பாட்டியல் என்ற சொல்லும் பண்பாட்டு மானிடவியல் என்ற சொல்லும் புழக்கத்தில் வந்து வெகு நாட்களாகிறது. இப்படியாக புதிய பதிய சொற்களை தேவையற்றுக் கொண்டுவருவது தமிழின் ஊடான வளரச்சிக்கு உதவாது. தயையுடன் கருத்தில் கொள்க.

உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். நன்றி. மற்ற புகுபதிவாளர்களின் கருத்தையும் கேட்டு தலைப்பை மாற்றிக் கொள்ளலாம். -- Sundar 09:13, 28 ஜூன் 2005 (UTC)
அநாமதேய நண்பருடைய கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். தமிழ் விக்கிபீடியாவின் ஆரம்ப காலத்தில் ஒரு நண்பர் Anthropology என்பதை மனிதவியல் என்று மொழி பெயர்த்திருந்தார். அதை அடியொற்றியே நானும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி வந்தேன். அண்மையில் சென்னையில் "பண்பாட்டு மானிடவியல்" என்ற புத்தகத்தைப் பார்த்தபோதுதான் "மானிடவியல்" என்ற சொல் சரியானது என்று அறிந்து கொண்டேன். தலைப்பையும், வேறு இடங்களில் வரும் மனிதவியல் என்ற சொல்லையும் மானிடவியல் என மாற்றிவிடலாம். பண்பாட்டியல் என்பதை எதற்கு மாற்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்? Mayooranathan 18:57, 28 ஜூன் 2005 (UTC)

தமிழாக்கம்

தொகு

en:Paleoethnobotany - தொல்பொருள் ஆய்வுக்கள எச்ச தாவரவியல்? en:Ethnolinguistics - இனமொழியியல்?

மேலும் public என்ற சொல்லுக்கு புறப்பொருள் என்று பயன்படுத்தியிருக்கிறேன். சரிபார்க்கவும். -- Sundar \பேச்சு 08:06, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மானிடவியல்&oldid=95454" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மானிடவியல்" page.