பேச்சு:மின்காந்தவியல்
இது போன்ற அறிவியல் தலைப்புகளுக்கு முறையான அறிவியல் நூல் சான்றுகள் தர வேண்டும். அது ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆங்கில விக்கியில் இருந்து அவற்றைப் பெறுவதும் இலகு. தமிழ் வலைப்பதிவுகளுக்கு வெளியிணைப்புகளைத் தந்து சான்றில்லை வார்ப்புருவை நீக்குவது தமிழ் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை பற்றிய தவறான அளவீட்டையே தரும்--இரவி (பேச்சு) 07:12, 30 மே 2012 (UTC)
முக்கிய கட்டுரைப் பட்டியல் கட்டுரை
தொகுமின்காந்தவியல் (Q11406) என்ற தலைப்பு அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டியதாக பட்டியலிடப்பட்டுள்ள பட்டியலில் electromagnetic interaction (மின்காந்தவியல் விசை) அல்லது மின்காந்த இடைவினை என்ற பெயரில் ஆங்கிலத்தில் வழிமாற்றப்பட்டுள்ளது. எனவே நமது கட்டுரைக்கு ஆங்கில விக்கிக் கட்டுரையுடன் இணைப்பில்லை என்பதைக் காண்க. ஆனால் வேறுபல விக்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கில விக்கியுடன் (ஆங்கிலத்தில் குறிப்பிட்ட கட்டுரையின் விக்கித்தரவு எண் Q849919) இணைப்பில்லாததால் இங்கு எழுதப்படாத கட்டுரையாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை wikidata /மேல்விக்கி பயனர்கள் கவனித்து ஆவன செய்ய வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 12:45, 23 செப்டம்பர் 2014 (UTC)
- இப்போதுள்ள இணைப்புகளை நீக்கி விட்டு en:Electromagnetism ஆங்கிலக் கட்டுரையுடன் இணைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இரண்டு கட்டுரைகள் இருந்திருக்கின்றன போல் தெரிகிறது. அல்லது emf என்ற கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டிருக்கலாம். இப்போது அவற்றை ஒன்றிணைத்திருக்கலாம். இதனாலேயே குழப்பம்.--Kanags \உரையாடுக 20:53, 23 செப்டம்பர் 2014 (UTC)
- நீங்கள் செய்த மாற்றங்கள் இன்னமும் புழக்கத்திற்கு வரவில்லை. en:Electromagnetism ஆங்கிலக் கட்டுரைக்கு தமிழ் கட்டுரை இணைப்பு தரப்படவில்லை. அதேபோல மின்காந்தவியல் (Q11406) கட்டுரைக்கு ஆங்கில இணைப்பு தரப்படவில்லை. முக்கிய கட்டுரைகளில் ஒன்றாக இருப்பதாலும் குழப்பம் தீரவும் மின்காந்த விசை என்ற புதிய கட்டுரையைத் தொடங்க உள்ளேன். நன்றி.--மணியன் (பேச்சு) 00:45, 24 செப்டம்பர் 2014 (UTC)