பேச்சு:முக்குலத்தோர்

இக்கட்டுரையில் சான்றாக தொடர்பற்ற இணைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. முறையாக உசாத்துணைகளை இணைக்கவும். நன்றி. --AntanO 03:47, 31 அக்டோபர் 2015 (UTC) மாராத்திய மொழியில் ஆதரங்களுடன் முக்குலதினர் பற்றிய செய்திகள் ஆங்கில எழுத்து வடிவத்தில் உள்ளது, அதை ஆதாரமாக கொண்டு தமிழ் கட்டுரையை தொகுக்கலாம்Reply

முக்குலதில் உள்ள கள்ளர் மறவர் 1891 சென்சஸ் ஆப் இந்தியா சொல்லிய கணக்கெடுப்பில் போற்குடியில் (சத்திரியாஸ்) என்று வகைபடுத்தபட்டு உள்ளனர், ஆதாரம் https://web.archive.org/web/20060907163041/http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&action=previous&record=1037

தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம்செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர்.

அப்படியா.. ஆதாரங்கள் இருக்கின்றதா.. எனக்கு தெரிந்து பள்ளரும் பறையரும் கூட வீரத்தோடு இருந்துள்ளார்கள். விக்கயில் இந்த வரி தேவையானதா... - சகோதரன்.

தேவர் என்பது பட்டம் தான்! இதை பல்வேறு சமூகங்களும் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தியுள்ளன! ஆனால் யார் தொன்மையாகவும் தொடர்ந்தும் இப்பட்டத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கொண்டே இப்பட்டத்திற்கு முழு உரிமையானவர்கள் என்று ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தினரை அடையாளபடுத்தலாம். அகமுடையார்கள் 1000 வருடங்களுக்கும் மேலாக தேவர்,தேவன் பட்டம் கொண்டு அழைக்கப்படுவதை பல்வேறு கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் எடுத்துக்காட்டுகின்றன .ஆதாரம் http://www.agamudayarotrumai.com/4218

அதே வேளையில் தேவர் என்ற ஒற்றைச் சொல் தமிழ்நாட்டில் எவரைச் சுட்டும் என்று கேட்டால் அது அகமுடையார்களைத் தான்! அதற்குப் பின் மறவர் சாதியினரை.இது தான் இக்கேள்விக்கு ஆதாரப்பூர்வமான விடை!


வன்னியக்குலத் தேவர் தொகு

கவுண்டர், முதலியார், உடையார், நாயக்கர் என்பது போல் தேவர் என்பதும் பட்டப்பெயர் தானே தவிர சாதி பெயர் கிடையாது. பட்டப்பெயர் என்பது பல சாதி மக்களால் பயன்படுத்தப்படும். நாளடைவில் ஒரு சில இனத்தார் பெரும்பாலும் ஒரு பட்டப்பெயரினை அதிகம் பயன்படுத்துவதால், அந்த பட்டம் கொண்டவர் என்றாலே அந்த இனத்தவர் தான் என்று புரிந்து கொள்கிறார்கள். பட்டங்களுக்கும் குல பெயர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வன்னியர்களுக்கும் இந்த பட்டம் உண்டு. அவ்வாறு தேவர் பட்டம் கொண்ட வன்னியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காட்டகரம் பகுதியினை ஆட்சி செய்த வன்னியக்குலத் தேவர்கள். காட்டகரம் - கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடகிழக்கில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர்.இம்மரபினர் இன்றும் உள்ளனர்.இம்மரபில் திரு.கண்ணுச்சாமித் தேவர் அவர்கள் பெயரனும், திரு,தங்கச்சாமித் தேவர் அவர்களின் மகனுமாகிய திரு.நடராஜத் தேவர் அவர்கள்தான் இப்போது இம்மரபு பெரியவராக உள்ளார்.திரு.நடராஜ தேவருக்கு 1.பெரியசாமித் தேவர்2. தமிழ் செல்வன் தேவர் 3.தனராஜ தேவர் என மூன்று மகன்கள் உள்ளனர்.

எனவே தேவர் எனும் பட்டத்தை சில சாதிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. சான்றுகள் இல்லாமல் இங்கு எந்தத் தகவலையும் அழிப்பது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்.

/// தேவர் எனும் பட்டத்தை சில சாதிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற உங்கள் வாதம் சரி என்றால், நீங்கள் கூறும் வன்னியர் என்ற இன்றைய சாதியாக குறிப்பிடுபவர்கள் சாதி பெயர் பள்ளி, அதை எப்படி வன்னியர் என்று குறிப்பிடுகிறீர்களோ அதை போல தான் தேவர் பட்டத்தை கள்ளர் மறவர் பயன்படுத்திகிறார்கள் , வன்னியர் என்பது பல சாதிகளின் பட்டம் குறிப்பாக வன்னியன் பட்டம் உள்ள சாதிகள் • குறவர் பட்டம் - கூடைகட்டி வன்னியன், • இருளர்கள் பட்டம் - தேன் வன்னியன் • பள்ளி – வன்னியன், • மறவர் பட்டம் – வன்னியன், வன்னி குட்டி, வன்னியடி (வன்னிக்கொத்து), • கள்ளர் பட்டம் - வன்னியர், வன்னிகொண்டார், வன்னியமுண்டார், வன்னியனார், நல்லவன்னியர், • வலையர் பட்டம் – வன்னியர், • அகமுடையர் பட்டம் - வன்னிய முதலியார், வன்னிய பிள்ளை, • துளுவ, கொங்கு வெள்ளாளர் - வன்னியர் கவுண்டர், • பார்க்கவ குலத்தார் - வன்னிய மூப்பனார், • பரவர், கரையர் - வன்னியர்


தேவர் எனும் பெயர் தேவை இல்லை - மறத்தமிழர் சேனை தொகு

தேவர் என கூறி மறவர் வரலாற்றை பாண்டியர் வரலாற்றை திரிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. மறவர்களை மறவர் என்போம்.கள்ளர்களை கள்ளர் என்போம். அகமுடையாரை அகமுடையார் என்போம் . முக்குலத்தோர் என்றும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். தேவரினம் என்பதெல்லாம் பொய் என்பதை அனைத்து மறவர்களும் உணர வேண்டும்என்று மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேவர் என்பது சாதி அல்ல... ஒருவகையான எல்லோருக்குமான பட்டம் தொகு

தேவர் என்பது சாதி அல்ல. ஒருவகையான ஒரு பட்டம்.மன்னர்களை மகிழ்விக்க வந்தேறிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தேவர் என்பது சமஸ்கிருத சொல்லாடல் ஆகும். மேலும் தேவர் எனும் பெயரில் அரசின் சாதிகளின் பட்டியலில் எந்த ஒரு சாதியும் இல்லை. தேவர் எனும் பட்டத்தை எந்த ஒரு இலக்கியமோ அல்லது கல்வெட்டோ சாதியாகக்கூறும் சான்று இல்லை.இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் தேவர் எனும் பட்டத்தை கொண்டுள்ளனர். அதற்க்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டிற்குச் சில:


  1. கி.பி 1260 - 1271 இல் தேவகிரியை ஆண்ட மகாதேவர் வடநாட்டு யாதவர் ஆவார்.
  2. கி.பி 1299 - 1301 இல் வடநாடு ராந்தப்பூர் பகுதியை ஆட்சி புரிந்த கமீர் தேவர் சௌக வம்சத்தவர் ஆவார்.
  3. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர் சீக்கிய இனத்தவர் ஆவார்.
  4. கி.பி 883 - 902 இல் காஷ்மீர் பகுதியை ஆண்ட சங்கிரமத் தேவர் உத்பால வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  5. சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கத் தேவர் சமண முனிவர் ஆவார்.
  6. அருண்மொழித்தேவர் என பல்லவ மன்னரால் வழங்கப்பெற்ற பெரிய புராணம் பாடிய சேக்கிழார் வேளாண் மரபைச் சார்ந்தவர்.
  7. வன்னியர் எனும் சாதியினரும் தங்களைக் கண்டியத் தேவர் என அழைத்துக்கொள்கின்றனர்.
  8. சென்னை திரிசூலம் கல்வெட்டு ஒன்று காளையை ரிசபத்தேவர் என்கிறது.
  9. சோழர் கால மதுராந்தகம் கல்வெட்டு தேவரடியார் ஒருவரை "இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்" என்கிறது.



புகுபதிகை செய்யப்படாத பயனர் கேள்வி தொகு

‎202.3.120.4  என்பவருடையது.

கேள்வி: தேவர் என்ற சொல் 'சாதியை' குறிக்கிறதா? அல்லது பட்டத்தை குறிக்கிறதா? எந்த அரசாங்க பதிவேட்டில் 'தேவர்' என்பது சாதியாக பதியப் பட்டுள்ளது? கள்ளர்,மறவர்,அகமுடையார் போன்றோர் தனது சாதி சான்றிதழில் தமது சாதியான கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று குறிப்பிட்டு வாங்கும்போது 'தேவர்' சாதி எங்கிருந்து வந்தது?

சத்திரியர் தொகு

@Nan:,@Kanags:,@AntanO: தமிழகம் மற்றும் கேரளாவில் ஆதிகாலம் முதலே வருணனை முறை கடைபிடிக்கவில்லை.அவ்வாறிருக்கும்போது இவர்களை சத்திரையர் வர்ணா என எழுத அனுமதித்தது ஏன்.ஜெ.கலையரசன் (பேச்சு) 07:18, 12 சனவரி 2019 (UTC)Reply

சேர,சோழ,பாண்டிய தொகு

மூவேந்தர்களும் ஜாதி பிரிவினைக்கு காரணமாகியிருந்தாலும் எவ்விடத்திலும் நான் முக்குலத்தோர் என்றோ கள்ளர் என்றோ சொல்லவில்லை.ஆனால் இவ்வாறு இந்த கட்டுரையில் உள்ளது மற்ற சமூகத்தினரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.அது மட்டுமின்றி blogspot ஐ எல்லாம் ஒரு ஆதாரமாக எடுத்து கொள்ளாதீர்.அது இலவசமாக யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.அதற்கு எந்த மேற்கோளும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.ஜெ.கலையரசன் (பேச்சு) 07:18, 12 சனவரி 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முக்குலத்தோர்&oldid=3781882" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முக்குலத்தோர்" page.