பேச்சு:முக்குவர்

அன்ரன் வணக்கம். முக்குகர், முக்குலத்தவர் இரண்டும் ஒன்றில்லையா? மற்றது கரையார் தானே மீன்பிடித் தொழில் செய்வோர். மட்டக்களப்பில் போடியார் எனும் அடை மொழி முக்குலத்தாருக்குரியதா? --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:20, 18 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம். மூன்றும் வெவ்வேறானவை என நினைக்கிறேன். முக்குவருக்கான ஆங்கில விக்கியிணைப்பு en:Mukkuvar. இதனையும் பாருங்கள்: முக்குவர் சட்டம். மட்டக்களப்பில் போடியார் விவசாயம் (பிரதானமாக நெல்) செய்வோர் ஆவர். ஆயினும் நீங்கள் குறிப்பிட்டதுபோன்று இச்சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள் ஆராயப்பட வேண்டும். --Anton (பேச்சு) 10:14, 18 ஏப்ரல் 2013 (UTC)
முத்துக்குளிப்போரே முக்குவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் முக்குவர் சட்டத்திற்கும் (முற்குகர் சட்டம்), முக்குவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.--Kanags \உரையாடுக 12:19, 18 ஏப்ரல் 2013 (UTC).

முக்குலத்தோரில் உள்ள அகமுடையார் இனம் முற்காலத்தில் "அகம்படியர்" என்று வழங்கப்பட்டதால்,அகம்படியர் மருவி அகம்பொடியர் ஆகி, அதுவே பின்னாளில் "போடியார்" ஆயிருக்கலாம் என்று வட-கிழக்கிலங்கையில் ஒரு கருத்து நிலவுகிறது.முக்குலத்தோரில் அகமுடையார் நிலகிழார்களாக இருப்பதும்,இலங்கையில் போடியார் எனப்படும் பரம்பரையினர் நிலச்சுவான்தார்கள் என குறிப்புகள் சுட்டுவதும் இரண்டும் ஒரே இனக்குழுவினர் என கருத வாய்ப்புள்ளது.

நன்றி கனக்ஸ், மற்றும் அன்ரன். மேலும் சில குழப்பங்கள். முக்குவர் பிரதானமாக விவசாயம் செய்வோர் எனும் குறிப்பு ஆங்கில விக்கியில் உள்ளது.//Mukkuver's occupations are cultivation of paddy, cattle especially cow and Chenai. Chenai means cutting the frost and cultivating grains and pulse.//. உள்ளூர் உரையாடலிலும் அவர்கள் மட்டக்களப்பில் ஆட்சிப் பொறுப்புகளில் வரலாற்றுக் காலத்தில் இருந்து முக்கியப்பட்டிருந்தமை தெரிகின்றது. முக்குவர் சட்டம் இவர்களால் ஆக்கப்படடமை குறித்தும் சில தகவல்கள் கூறப்பட்டன. ஆதாரபூர்வமாக இவற்றைப் பதிவுசெய்வது முக்கியம் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:35, 18 ஏப்ரல் 2013 (UTC)

முக்குலத்தோர் தேவர் சமுதாயத்தை இணைத்துக் குறிக்கும் சொல். அவர்கள் தான் விவசாயம் செய்தவர்கள்/பவர்கள். முக்குவர் எனபவர் நெய்தல் சார் மக்களே. மேலும் முக்குவர் திமிலர் சண்டை தற்போதும் இலங்கையில் உண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 19 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி! மொழிபெயர்ப்பில் சில தவறுகள் நடந்துவிட்டது, திருத்தியுள்ளேன். மட்டக்களப்புத் தமிழகம் முக்குவர் பற்றி சில தகவல்களைத் தெரிவிக்கின்றது. --Anton (பேச்சு) 01:36, 20 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி அன்ரன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:05, 20 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முக்குவர்&oldid=2469924" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முக்குவர்" page.