பேச்சு:முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை

Launch Vehicle என்பதற்கு ஏவுகணை எனக் கூறலாமா?--Kanags \பேச்சு 23:11, 28 ஏப்ரல் 2008 (UTC)

Launch vehicle என்பதை ஏவுகலம் எனலாம். அதாவது கலத்தை ஏவும் அமைப்பு என்பதாகும். ஆனால் ஏவுகலம் என்பது பொருள் குழப்பம் தரவல்லது. கலமேவி (=கலம் ஏவும் ஒன்று, கலம் ஏவி, ஏவுவது) . கலம் ஏவியம் = pay load launching system = கலம் ஏவும் சமைதியம், ஒருங்கியம். மேலும், துருவ என்பதற்கு மாறாக நிலமுனை என்றும், செயற்கைத் துணைக்கோள் என்றும் இருத்தல் நல்லது. எனவே துருவ செயற்கைக்கோள் ஏவுகணை என்பது முனைய துணைக்கோள் ஏவியம் என்றால் சரியான தலைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்?

--செல்வா 23:28, 28 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி செல்வா. ஏவுகலம் என்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இலகுவாக அடக்கமாக உள்ளது. துணைக்கோள் என்பது இயற்கையாக அமைந்த கோள் என துணைக்கோள் கட்டுரை சொல்கிறது. இங்கு செயற்கைக்கோள் பொருந்துமல்லவா?--Kanags \பேச்சு 23:41, 28 ஏப்ரல் 2008 (UTC)
துணைக்கோள் என்பது இயற்கைத் துணைக்கோளாகவோ, செயற்கைத் துணைக்கோளாகவோ இருக்கலாம்.ஆங்கிலத்திலும் ˘சாட்டிலைட் என்பது பொதுச்சொல் (இயற்கையா, செயற்கையா என்பது தெளிவு படுத்தப்படாதது.). உமாபதி கூறியதுபோல செய்மதி எனலாம், ஆனால் செய்மதி என்றால் செயற்கையான அறிவுத்திறன் என்னும் பொருள் குழப்பம் வரும் என்று முன்னர் இங்கு பேசினோம். செயற்கை என்பது இங்கு தேவை இல்லை. தானே விளங்கும் பொருள் என நம்புகிறேன். ஏவுகலம் என்னும் சொல் எளிமையாக இருந்தாலும், ஏவுகின்றன கலம் என்றும் பொருள் வரும். பொதுவாக விண்கலம் என்பது விண்வெளியில் உலா வரும் கருவிகள் அடங்கிய ஸ்பேஸ் கிரா'வ்ட். இந்த கலத்தைத்தான் ஏவ வேண்டும் அல்லவா? ஆகவே கலத்தை, துணைக்கோளை ஏவுகின்ற உந்து என்னும் பொருள் வரவேண்டும் அல்லவா? எனவே முனைய துணைக்கோள் ஏவியம் என்பது எனக்கு சரியானதாகத் தோன்றுகின்றது. பொருள் பொருத்தம் இருந்தால் ஏவுகலம் சுருக்கமான நல்ல சொல்லாக இருக்கும். --செல்வா 00:48, 29 ஏப்ரல் 2008 (UTC)
துணைக்கோள் என்ற பொதுவானப் பெயர் வைப்பதைவிட செயற்கைக்கோள் என்ற பொருட்பெயருடன் வழங்குவதே பொருள் நிறைந்ததாகும் என நினைக்கிறேன். மேலும் வழக்கிலுள்ள செயற்கைக்கோளை தவிர்ப்பது தேவையற்றது என்பது எனகருத்து--நீச்சல்காரன் (பேச்சு) 00:55, 15 மே 2012 (UTC)Reply
ஏவுகின்ற கலம் என தவறாக பொருள் கொள்ளலாம் என்றால் ஏவுகணையிலும் இந்த குழப்பம் வரும் என்றே சொல்லலாம். ஏவுகலம் என்ற சொல் ஏற்கனவே உள்ள ஏவுகணை என்ற சொல்லை ஒப்ப இருப்பதால் பயன்படுத்தவும் புரிந்து கொள்ளவும் இலகுவாக இருக்கும். செயற்கைக்கோள் என்பதைத் தவிர்க்கத் தேவை இல்லை. அதே வேளை, சொல்வா சொல்வது போல் துணைக்கோளை ஏவுகிறோம் என்கிற போதே அது செயற்கை என்பது புலனாகிவிடுகிறது. ஏன் என்றால், இயற்கையானதை நாம் ஏவப் போவது இல்லை. இவ்வாறு உள்ளார்ந்து பொருள் கொள்வதும் ஒரு வகை மொழி அழகாகத் தோன்றுகிறது. செய்மதி என்பது இலங்கையில் புழக்கத்தில் உள்ள சொல். ஆனால், தமிழ்நாட்டில் புரிந்து கொள்வார்களா எனத் தெரியவில்லை--இரவி (பேச்சு) 06:31, 15 மே 2012 (UTC)Reply
முனைய துணைக்கோள் ஏவுகலம் என்பதற்கு பதிலாக துருவ துணைக்கோள் (அல்லது செயற்கைகோள்) ஏவுகலம் என்று குறிப்பிட்டால் இன்னும் எளிமையாக இருக்கும்.

துணைக்கோள் என்பது நிலா போன்ற இயற்கை வான்பொருட்களைத் தான் குறிக்கும். எனவே தலைப்பை முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:30, 6 சூலை 2023 (UTC) ஏவூர்தி எனும் சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளதால் வேறுசொல் வேண்டாம்.Reply

Return to "முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி" page.