பேச்சு:மேஜர் சந்திரகாந்த்

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மேஜர் சந்திரகாந்த் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

படிமங்கள் தொகு

என்னிடம் சில படிமங்கள் இருக்கின்றது. ஆனால் அவற்றை பதிவேற்ற எனக்கு தேவையான அதிகாரமில்லை. Penawiki 00:37, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

அப்படியானால், அதை தவிர்ப்பதே நன்று. முயன்றால் அனுமதியை கேட்டுப் பாக்கலாம். --Natkeeran 00:38, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

ரஜினிகாந்த் தொகு

இக்கதையில் வரும் ரஜினி காந் உம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வேறென்றே நினைக்கின்றேன். எதற்காக கதையில் குழப்பத்தை உண்டுபண்ணும் வித்தில் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன?--உமாபதி \பேச்சு 08:22, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

இந்தப் படம் வெளிவரும்போது (1966 இல்) ரஜனிகாந்த் என்ற ஒருவர் திரையுலகில் அறிமுகமாயிருக்கவில்லை:).--Kanags \பேச்சு 11:19, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
உமாபதி ரஜினிகாந்த் என்பது ஏ.வி.எம் ராஜாவின் கதாபாத்திரத்தின் பெயர். கதாபாத்திரம் என்ற பகுதியில் இது தெளிவாகவுள்ளது. மோகன் மற்றும் ஸ்ரீகாந்த் எனவும் தமிழில் நடிகர்கள் உண்டு. முதலில் அடைப்புக்குறிக்குள் எழுதினேன். ஆனால் அப்படி படிக்க சற்று கடினமாக இருந்தது. Penawiki 12:49, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

கதையை எழுதும் போது, முதல் முறை கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போது அடைப்புக்குறிக்குள் நடிகர்களின் பெயரைத் தருவது நன்று அடுத்தடுத்து வெறும் பாத்திரங்களின் பெயராலேயே கதையைச் சொல்லலாம். இது பல இடங்களிலும் உள்ள வழமை தான்--ரவி 13:17, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

Return to "மேஜர் சந்திரகாந்த்" page.