பேச்சு:மைசீக்குவெல்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

MySQL (Learn-MySQL-in-Tamil-V1.pdf) என்ற மின்னூல் எளிமையாகவும், சிறப்பாகவும் உள்ளது. படித்துப்பயன்பெறுவீர். ≈ உழவன் ( கூறுக ) 19:22, 30 ஏப்ரல் 2013 (UTC)

மேற்கண்ட நூலில் இருந்து, செய்திகளை இதற்குள் உருவாக்க, கூகுளின் மொழிபெயர்பை இங்கு மாற்றலாமா?--≈ உழவன் ( கூறுக ) 02:21, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

இந்த பக்கத்தின் தலைப்பை மாற்ற முடியுமா? இந்த மென்பொருளின் சரியான பெயர் மையெசுக்யூயெல் ஆகும். மைசீக்குவெல் என்பது தவறான உச்சரிப்பாகும். அண்ணாமலை 15:38, 30 நவம்பர் 2013 (UTC)

நிச்சயமாக மாற்ற முடியும்! நீங்களும் கூட செய்யலாம். கட்டுரையின் வலது புற மேற்பகுதியில், நகர்த்தவும் என்ற வசதி உள்ளது. பின்னர், புதிய தலைப்பை இட்டு நகர்த்தலாம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:42, 30 நவம்பர் 2013 (UTC)Reply
Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 18:30, 30 நவம்பர் 2013 (UTC)Reply
மைசீக்குவெல் என்பதே தமிழில் எளிமையாக இருக்கும். மையெசுக்யூயெல் என்ற உச்சரிப்பே சரியானதாகக் கருதினாலும், அது மையெசுக்கியூவெல் என்றே தமிழில் எழுதப்பட வேண்டும். தற்போது மாற்றப்பட்டுள்ள தலைப்பு முற்றிலும் தவறு. மேலும் சிக்கலாமக்காமல் மைசீக்குவெல் என்ற சொல்லுக்கு தற்காலிகமாக மீள்வித்துள்ளேன்.--Kanags \உரையாடுக 19:51, 30 நவம்பர் 2013 (UTC)Reply

👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:16, 3 திசம்பர் 2013 (UTC)Reply

MySQL என்ற பெயரில் உள்ள Q என்ற எழுத்தை 'க்யூ' என்று மொழிபெயர்த்துள்ளோம். நீங்கள் அதை 'கியூ' என்றுதான் எழுதவேண்டும் என்று கூறியுள்ளீர்கள். இரண்டும் சரி என்றே தோன்றுகிறது. மேலும் MySQL என்ற பெயரில் L என்ற எழுத்தை, 'யெல்' என்று மொழிபெயர்த்துள்ளேன். அதை நீங்கள் 'வெல்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த உச்சரிப்பு சரியில்லை என்பது என் கருத்து. 'மையெசுக்யூயெல்' அல்லது 'மையெசுக்கியூயெல்' என்பதே சரியாக உள்ளது. ஆனால் மைசீக்குவெல் என்ற உச்சரிப்பு தவறானது. உங்களது கருத்தை பரிமாற்றிக்கொள்ளவும். அண்ணாமலை 03:59, 4 திசம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைசீக்குவெல்&oldid=1564789" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மைசீக்குவெல்" page.