பேச்சு:யூரோ 2012

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
யூரோ 2012 எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கனகு, தலைப்பை எளிமை கருதி மாற்றி உள்ளீர்கள்..இருப்பினும் இதன் அலுவல்முறையான பெயர் யூஈஎஃப்ஏ யூரோ 2012 என்பதே ஆகும். மலையாளத்திலும் மராட்டியிலும் கூட யூவேஃபா யூரோ 2012 என்ற தலைப்பையே முதன்மை படுத்தி உள்ளனர். யூஈஎஃப்ஏயை வேண்டுமானால் ஆங்கிலச் சுருக்கத்தின் ஒலிப்பை ஒட்டி, அவர்களைப் போலவே யூவேஃபா என மாற்றிக் கொள்ளலாம். --மணியன் (பேச்சு) 02:54, 12 சூன் 2012 (UTC)Reply

யூரோ 2012 என்று வேறு ஏதாவது போட்டிகள் இடம்பெறாதவரை இத்தலைப்பே இருக்கலாமே. கட்டுரையில் அதன் அதிகாரபூர்வப் பெயர் தரப்பட்டிருக்கிறது. அதைவிட ஊடகங்களில் இப்போட்டியைப் பற்றிக் குறிப்பிடும் போது யூரோ 2012 என்று தான் கூறுகிறார்கள். உருசிய மொழி விக்கியில் அதன் அதிகாரபூர்வப் பெயரில் தலைப்பிடவில்லை. 2012 ஐரோப்பியக் கால்பந்தாட்ட வெற்றியாளர் போட்டிகள் எனவே எழுதியுள்ளது. ஏனைய மொழி விக்கித் தலைப்புகளைப் பாருங்கள். ஒரு சிலவே அதிகாரபூர்வப் பெயரில் தலைப்பிட்டுள்ளன. ஆனாலும் அதிகாரபூர்வப் பெயரில் தலைப்பிட வேண்டுமானால் மீண்டும் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 05:44, 12 சூன் 2012 (UTC)Reply
ஐரோப்பியக் கால்பந்தாட்டப் போட்டி, 2012 எனவும் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 05:53, 12 சூன் 2012 (UTC)Reply
தலைப்பை மாற்ற வேண்டியத் தேவையில்லை. எனது பார்வைக்கோணத்தை மட்டுமே பதிய விரும்பினேன்.--மணியன் (பேச்சு) 15:51, 12 சூன் 2012 (UTC)Reply
அருமையான கட்டுரையாக வளர்ந்துள்ளது. :) இதில் பங்களித்துவரும் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். முன்னர் இதுபோன்ற விளையாட்டு, வளரும் கதை (developing story) போன்ற கட்டுரைகளைப் படிக்க ஆங்கில விக்கியை நாடிச் செல்வேன். தற்போது இங்கே கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:17, 1 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யூரோ_2012&oldid=1318842" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யூரோ 2012" page.