பேச்சு:யோசே என்ரிக்கே ரொடொ
தலைப்பு மாற்றம்
தொகுJosé என்ற சொல்லை தமிழில் எப்படி பயன்படுத்துவது? மூல ஒலிப்பு ஹோசே என்பதாகவே இருக்கின்றது. ஆனால் José/Jose என்ற சொல்லிற்கு தமிழ் விவிலியத்தில் யோசே என்று வருகின்றது. ஆனால் அதன் ஈப்ரு மூலச் சொல் யாசாப் என்று வருகின்றது. அதனால் José என்பதை ஹோசே, யோசே, யாசாப், ஓசே என நான்கு முறையில் தமிழில் எழுதும் நிலை ஏற்படுகின்றது. இதில் எதைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது. மாற்றுக் கருத்திருந்தால் பதியுங்கள். இதில் ஏதேனும் ஒன்றை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம். ஒருமித்த கருத்தில்லை என்றால் ஹோசே என்றே விட்டுவிடுகின்றேன். --விண்ணன் (பேச்சு) 07:24, 26 ஆகத்து 2015 (UTC)
José என்று ஸ்பானிய மொழியில் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்லிற்கு இணையாக ஹோசே அல்லது யோசே என்பதை பயன்படுத்தலாம் என நான் நினைக்கின்றேன். விவிலியத்தில் பயின்று வரும் Jose என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் விவிலியம் பயன்படுத்தும் யோசே என்பதையே பயன்படுத்தலாம் என நான் கருதுகின்றேன். இரண்டையும் தனித் தனியாக ஒலிபெயர்ப்பதே சிறப்பானதாக இருக்கும். நன்றிகள் ! --விண்ணன் (பேச்சு) 07:28, 26 ஆகத்து 2015 (UTC)
Jose - ஒசே, Rodo - ரொடோ. ஒசே என்ரிக்கே ரொடோ என்றவாறு தலைப்பிடல் சிறந்தது.--Kanags \உரையாடுக 08:55, 26 ஆகத்து 2015 (UTC)
- ஒசே என்பதை விட யோசே என்பதே சரியாக இருக்கும் என்பது எனது எண்ணம். ஸ்பானிய José என்ற பெயர் விவிலியத்தில் வருகின்ற Jose, Joseph ஆகிய பெயர்களின் ஸ்பானிய வடிவம் ஆகும். இதன் மூல ஈப்ரு ஒலிப்பு யாசாப் என்றாலும், தமிழ் விவிலியத்தில் யோசே, யோசேப்பு என்றே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால், நாமும் அதனையே பின்பற்றலாம், தேவையில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிபெயர்ப்பு வடிவங்களை உருவாக்கி மற்றுமொரு குழப்பத்திற்கு வித்திட வேண்டியதில்லை. ஐரோப்பிய பெயர்களை தமிழாக்கம் செய்யும் போது ஒன்று அதன் மூல ஒலிப்புக்கு நெருங்கி ஒலிக்கலாம், அல்லது விவிலியத்தில் ஏற்கனவே பயின்று வரும் பெயர்களாக இருந்தால் தமிழ் விவிலிய நடையை பின்பற்றலாம். அதுவே சிறந்ததாகப் படுகின்றது. --விண்ணன் (பேச்சு) 18:14, 26 ஆகத்து 2015 (UTC)
- இங்கு Jose என்பது ஹொசே என்றவாறு தான் பலுக்கப்படும். ஜொசே அல்ல. ஹ என்பதில் தொடங்கும் சொற்களை அ- என்றவாறு தமிழில் எழுதலாம் என நாம் ஏற்கனவே உடன்பட்டுள்ளோம். ஒசே என்பதே சிறந்த ஒலிப்பெயர்ப்பாக இருக்கும்.--Kanags \உரையாடுக 21:06, 26 ஆகத்து 2015 (UTC)
- மூல ஒலியின் ஹகரத்தை அகரமாக மாற்ற முடியும் என்றால் ஏன் யகரமாகவும் மாற்றக் கூடாது என்ற வினா எழுதுகின்றது? Jose என்ற ஐரோப்பிய பெயருக்கு தமிழில் ஏற்கனவே யோசே என்ற திருந்திய வடிவம் புழக்கத்தில் வந்த பின் மற்றொரு திருந்திய வடிவத்தை ஏன் கொண்டு வர வேண்டும் என்ற வினாவே எழுகின்றது? ஆகையால் மூல ஒலிப்பான ஹோசே என்றே இருக்கட்டும். --விண்ணன் (பேச்சு) 00:39, 27 ஆகத்து 2015 (UTC)
- இங்கு Jose என்பது ஹொசே என்றவாறு தான் பலுக்கப்படும். ஜொசே அல்ல. ஹ என்பதில் தொடங்கும் சொற்களை அ- என்றவாறு தமிழில் எழுதலாம் என நாம் ஏற்கனவே உடன்பட்டுள்ளோம். ஒசே என்பதே சிறந்த ஒலிப்பெயர்ப்பாக இருக்கும்.--Kanags \உரையாடுக 21:06, 26 ஆகத்து 2015 (UTC)
- ஒசே என்பதை விட யோசே என்பதே சரியாக இருக்கும் என்பது எனது எண்ணம். ஸ்பானிய José என்ற பெயர் விவிலியத்தில் வருகின்ற Jose, Joseph ஆகிய பெயர்களின் ஸ்பானிய வடிவம் ஆகும். இதன் மூல ஈப்ரு ஒலிப்பு யாசாப் என்றாலும், தமிழ் விவிலியத்தில் யோசே, யோசேப்பு என்றே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால், நாமும் அதனையே பின்பற்றலாம், தேவையில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிபெயர்ப்பு வடிவங்களை உருவாக்கி மற்றுமொரு குழப்பத்திற்கு வித்திட வேண்டியதில்லை. ஐரோப்பிய பெயர்களை தமிழாக்கம் செய்யும் போது ஒன்று அதன் மூல ஒலிப்புக்கு நெருங்கி ஒலிக்கலாம், அல்லது விவிலியத்தில் ஏற்கனவே பயின்று வரும் பெயர்களாக இருந்தால் தமிழ் விவிலிய நடையை பின்பற்றலாம். அதுவே சிறந்ததாகப் படுகின்றது. --விண்ணன் (பேச்சு) 18:14, 26 ஆகத்து 2015 (UTC)
- Jose என்ற சொல் மூல மொழியில் எவ்வாறு ஒல்லிக்கிறது என்பதை அறிவீர்களா? அது ஜோசே என்றவாறல்ல, ஹொசே என்றே ஒலிக்கிறது. இதனாலேயே ஹோசே - யோசே ஆக வராது. ஜோசே - யோசே ஆக வரும். ஹோசே - ஒசே என்று எழுதலாம். இதனையே நான் மேலே குறித்திருக்கிறேன். //மூல ஒலியின் ஹகரத்தை அகரமாக மாற்ற முடியும் என்றால் ஏன் யகரமாகவும் மாற்றக் கூடாது என்ற வினா எழுதுகின்றது?// ஜோசே என ஒலித்தால் யகரமாக மாற்றலாம். --Kanags \உரையாடுக 08:48, 27 ஆகத்து 2015 (UTC)
- ஹோசே என்பதைப் பயன்படுத்தாதீர்கள். ஒசே அல்லது யோசே என எழுதுங்கள். Jose மொழிக்கு மொழி வெவ்வேறு ஒலிப்பு உள்ளது.--Kanags \உரையாடுக 08:48, 27 ஆகத்து 2015 (UTC)
- தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பரே. ஹகரம் எனத் தொடங்கும் சொற்களை தமிழில் சில இடங்களில் அகரவரிசை கொண்டு மாற்றி எழுதுகின்றோம் என்பதை அறிவேன். (எ.கா. ஹோசூர் - ஓசூர் ) ஆனால் அனைத்து இடங்களிலும் அதனையே பின்பற்றத் தேவையில்லை. ஏனெனில் சில ஹகர மூலச் சொற்களுக்கு தமிழில் ஏற்கனவே இணையான சொற்கள் இருக்கின்றன ( எ.கா - ஹொய்சாளர் - போய்சாளர் என கல்வெட்டுக்களில் வருகின்றன ). அதே போல ஹோசே என ஸ்பானிய மூல ஒலிப்புடையச் சொற்கள் என்றாலும் அதன் வேர்ச்சொல்லைக் கொண்டு அதற்கிணையாக தமிழ் விவிலியங்களிலும், தமிழ் கிறித்தவ இலக்கியங்களிலும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டு புழக்கத்திலிருக்கும் யோசே என்பதையே பயன்படுத்தலாம். இவ்வாறான தமிழ் வடிவங்களில்லாத போது ஹகரம் நீக்கியோ, ஹகரம் சேர்த்தோ பயன்படுத்தலாம்.--விண்ணன் (பேச்சு) 02:49, 28 ஆகத்து 2015 (UTC)
- சரி ஏற்றுக் கொல்கிறேன். Rodo என்பது ரொடோ என்றிருக்க வேண்டும். ரொடொ அல்ல.--Kanags \உரையாடுக 02:56, 28 ஆகத்து 2015 (UTC)
- Rodo என்பதை தனியே உச்சரித்தால் ரொடோ என்று தான் வரும். ஆனால் ஸ்பானிய பெயர்களில் வேறு பெயர்களோடு சேர்ந்து ஒலிக்கின்ற போது அது குறுகியே ஒலிக்கின்றது. என்ரிக்கே ரொடொ என்று தான் மூல ஒலிப்பு இருக்கின்றது. ஒன்றிற்கும் அதிகமாகவே சோதித்துவிட்டேன். ஸ்பானிய மொழி நண்பரிடமும் கேட்டறிந்தேன். --விண்ணன் (பேச்சு) 03:25, 28 ஆகத்து 2015 (UTC)