பேச்சு:யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா

யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம்

தொகு

José என்ற சொல்லை தமிழில் எப்படி பயன்படுத்துவது? மூல ஒலிப்பு ஹோசே என்பதாகவே இருக்கின்றது. ஆனால் José/Jose என்ற சொல்லிற்கு தமிழ் விவிலியத்தில் யோசே என்று வருகின்றது. ஆனால் அதன் ஈப்ரு மூலச் சொல் யாசாப் என்று வருகின்றது. அதனால் José என்பதை ஹோசே, யோசே, யாசாப் என நான்கு முறையில் தமிழில் எழுதும் நிலை ஏற்படுகின்றது. இதில் எதைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது. மாற்றுக் கருத்திருந்தால் பதியுங்கள். இதில் ஏதேனும் ஒன்றை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம். ஒருமித்த கருத்தில்லை என்றால் ஹோசே என்றே விட்டுவிடுகின்றேன். --விண்ணன் (பேச்சு) 07:24, 26 ஆகத்து 2015 (UTC)Reply

José என்று ஸ்பானிய மொழியில் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்லிற்கு இணையாக ஹோசே அல்லது யோசே என்பதை பயன்படுத்தலாம் என நான் நினைக்கின்றேன். விவிலியத்தில் பயின்று வரும் Jose என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் விவிலியம் பயன்படுத்தும் யோசே என்பதையே பயன்படுத்தலாம் என நான் கருதுகின்றேன். இரண்டையும் தனித் தனியாக ஒலிபெயர்ப்பதே சிறப்பானதாக இருக்கும். நன்றிகள் ! --விண்ணன் (பேச்சு) 07:28, 26 ஆகத்து 2015 (UTC)Reply

மேலதிகமாக ஹோசே, யோசே பற்றிய விவாதக் கருத்துக்களை இங்கு அறியலாம். --விண்ணன் (பேச்சு) 02:30, 28 ஆகத்து 2015 (UTC)Reply

Return to "யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா" page.