பேச்சு:லினக்சு
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 28, 2011 அன்று வெளியானது. |
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
--Natkeeran 15:43, 28 ஜூன் 2006 (UTC)
செல்வா,
தொகு//க்னூ/லினக்ஸ் (GNU/Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும்.. இது எல்லா நிரல்களும் இயங்கத் தேவையான அடிப்படையான முதல் நிரல் எனலாம்.//
இந்த தொடரில், க்னூ/லினக்ஸ் தான் எல்லா நிரல்களும் இயங்க தேவையான முதல் நிரல் என்றவாறான பொருள் மயக்கம் வருகிறது. கவனிக்க! --மு.மயூரன் 15:08, 21 மார்ச் 2007 (UTC)
- உண்மை மயூரன். இப்பொழுது சிறிது மாற்றியிருக்கின்றேன். இதுவும் சரியில்லை/தேவை இல்லை எனில், அந்த இரண்டாவது சொற்றொடரை நீக்கிவிடலாம். அதாவது படிப்பவருக்கு இயக்குதளம் என்பது பற்றி ஒரு சிறு குறிப்பு இருந்தால் நல்லது என்று அப்படி இட்டேன். இயக்குதளம் என்று கட்டுரையே இருப்பதால், அங்கு சென்றும் முழு விலக்கமும் பெற முடியும். ஆகையால் ஏதும் குழப்பம் தரும் என்றோ, அல்லது தேவை இல்லை என்றோ யாரேனும் நினைத்தால், அந்த இரண்டாவது தொடரை நீக்கிவிடுங்கள். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி மயூரன்.--செல்வா 23:25, 21 மார்ச் 2007 (UTC)
லினக்ஸ் என்பது குனு/ லினக்ஸ் இயங்கு தளத்தின் மையக் கருவான கெர்னலாகும். இதற்கென தனி கட்டுரை எழுதலாம்.
குனு ஹர்ட் போல, லின்க்ஸ் ஒரு கெர்னல் என்பதால், லினக்ஸ் என்பதற்கு தனியான பக்கம் இருப்பது சரியாக இருக்கும் என கருதுகின்றேன்.
Amachu 15:25, 21 மார்ச் 2007 (UTC)
இயக்குதளம் என்ற பகுப்பினை தொடங்கினால் மற்றவை அனைத்தினையும் ஒரு முகம் செய்ய முடியும்.
தலைப்பு
தொகுஆங்கில விக்கியில் லினக்சு என்றே தலைப்பிட்டிருக்கிறார்கள். தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிரேன்.--Kanags \உரையாடுக 13:11, 30 திசம்பர் 2011 (UTC)