பேச்சு:ழூல் வேர்ண்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
Untitled
தொகுபிரான்சிய ஒலிப்பு ஃழூல் வேர்ன் என்பதுபோல இருக்கும். சூல் அல்லது இஃழூல், ஃழூல், ழூல் என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். இங்கு விக்கியில் அவ்வப்பொழுது பங்குகொள்ளும் பிரான்சு நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர் Jean-Luc Chevelier அவர்கள் தன் பெயரை ழான் அல்லது ஃழான் என்று பல மடல்களில் எழுதுவதைக் கண்டிருக்கின்றேன். ஆகவே மேலே நான் பரிந்துரைத்திருப்பதில் ஒன்று சரியாக இருக்க்கூடும். --செல்வா 21:45, 10 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா, புதுச்சேரித் தமிழர் Jean என்பதை ழான் என்றே எழுதிவந்துள்ளனர். எனவே, Jules என்பதை ழூல் என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். --பவுல்-Paul 00:25, 11 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி செல்வா, பவுல், இப்போது நீங்கள் சொன்ன பின் தான் jean-paul ஐ ழான் - பால் என்று வெகுஜன் தமிழ் ஊடகங்களிலேயே எழுதுகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது (sartre க்கு ஆனந்த ”தமிங்கல” விகடனே ழான் தான் பயன்படுத்துகிறது). நான் தான் மறந்து விட்டேன். --சோடாபாட்டில் 04:14, 11 அக்டோபர் 2010 (UTC)
- பவுல் உங்கள் செய்திக்கும் கருத்துக்கும் நன்றி. சோடாபாட்டில், நீங்கள் கொடுத்த செய்திகளை அறிந்து மகிந்தேன். அதுவும் பொதுமக்கள் (வெகுசன) தமிழ் ஊடகங்களில் எழுதுவது பற்றி நீங்கள் குறிப்பிட்டதைக் கண்டும் மகிழ்ந்தேன். மூன்று பெரிய ஐரோப்பிய மொழிகளான பிராசியம், எசுப்பானியம், இடாய்ச்சு ஆகிய மொழிகளில் ஆங்கில j ஒலிப்பு இல்லை. --செல்வா 15:19, 11 அக்டோபர் 2010 (UTC)
- நல்ல உரையாடல். முப்பெரும் மொழிகளில் (fr, es, du) ச்ச (ஜ) எனும் ஒலிப்பு இல்லை என்ற செய்தி வியப்பளிக்கிறது. தகவலுக்கு நன்றி செல்வா.
--சூர்ய பிரகாசு.ச.அ. 04:47, 8 பெப்ரவரி 2011 (UTC)