பேச்சு:வடமொழி

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

வடமொழி = பிராகிருதம், வடமொழி = சமஸ்கிருதம் இரு கருத்து உள்ளன. அதனால் வழிமாற்று செல்லாது. நீக்கியிருக்கிறேன். வடமொழி யார் யாரால் பிராகிருதமாகவும் யார் யாரால் சமஸ்கிருதமாகவும் அல்லது யார் யாரால் இரண்டாகவும் பார்க்கப்படுகிறது என்று தனிக்கட்டுரை வேண்டுமே தவிர இப்படி வடமொழியை சமஸ்கிருதத்துக்கு தான் ஊரியது என முடிவு கட்டி வழிமாற்றிவிடுவது தமிழ் விக்கிப்பீடியாவை சமஸ்கிருத சார்புடையதாய் காட்டலாம். அதனால் தனிக்கட்டுரை எழுத பயனர்:செல்வா, பயனர்:Sengai Podhuvan போன்றவர்களை அழைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 16 திசம்பர் 2013 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணியன், வடமொழி என்பது எல்லா நேரங்களிலும் சமற்கிருதம் அன்று. பல நேரங்களில் அது வட இந்தியப் பிராகிருத மொழிகளையும் குறிக்கும் (பாலி, மகதம், மகாராட்டிரம், போன்ற பல மொழிகளைக் குறிக்கும்). ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு தனி கட்டுரைகள் இப்பொழுது வரைவது கடினம். சிறிது செய்திகளைச் சேகரித்துப் பார்க்கின்றேன். போதிய தகவல்கள் கிடைத்தால் குறுங்கட்டுரையாவது எழுத முயல்கின்றேன். --செல்வா (பேச்சு) 18:43, 19 திசம்பர் 2013 (UTC)Reply

சரி செல்வா. நானும் தகவல்களை சேர்க்க முடியுமா எனப் பார்க்கிறேன். இந்த வடமொழி பக்கத்தை யாரோ சமஸ்கிருதத்துக்கு வழிமாற்றி விட்டிருந்தார்கள். அதனால் தான் கேட்டேன். ஒருவேளை இரண்டு மாதங்களுக்குள் கிடைக்காவிட்டாலும் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கமாக்கி விடலாம். அதன்பிறகு தகவல் கிடைத்ததும் குறுங்கட்டுரை ஆக்கிவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:48, 19 திசம்பர் 2013 (UTC)Reply

பிராகிருத மொழிகளை ஆரிய மொழி என எப்படிச் சொல்ல முடியும்? பிராகிருத மொழிகள் பல இருந்தன.

  1. பிராகிருதம் கல்வெட்டுகளில் அசோகன் காலம் முதலேயே பொறிக்கப்பட்டுவிட்டது.
  2. ஆனால் சமஸ்கிருதம் கல்வெட்டுகளில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் தான் பொறிக்கப்பட்டது. அதனால் வடமொழி என்றாலே ஆரியம் என்பது ஒத்துவராத வழிமாற்றாகும். அதனால் மீண்டும் வடமொழி என்பதற்கே மாற்றுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:05, 9 சூலை 2014 (UTC)Reply

பாணினி இலக்கணம் எழுதியது சந்தசு என்னும் மொழிக்கு என்பது தான் முதல் நிலைச் சான்று. இதில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் வடமொழி என்றாலே ஆரியம் என பொருள்படுத்துவது தவறாகும். [1]--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:08, 9 சூலை 2014 (UTC)Reply

திருத்தம் செய்வோர் எண்ணிச் செய்தால் நலம் --Sengai Podhuvan (பேச்சு) 10:41, 5 செப்டம்பர் 2015 (UTC)

அப்படி என்றால் நலமாகத்தான் வந்திருக்கிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:04, 5 செப்டம்பர் 2015 (UTC)

முதற்பத்திக்கு தனிக்கட்டுரை தொகு

முதல் பத்தியில் உள்ளவை எல்லாம் வேதமொழி அதன்காலம் பற்றிய கருத்துகள் பற்றி மட்டும் உள்ளது. அதற்கு தனிக்கட்டுரை ஆக்குவது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:06, 5 செப்டம்பர் 2015 (UTC)

விருப்பம் --Sengai Podhuvan (பேச்சு) 13:10, 5 செப்டம்பர் 2015 (UTC)

பாகதம் வடமொழி என்பதற்கானச் சான்று தொகு

செல்வா, பயனர்:Sengai Podhuvan இப்போது பாகத மொழிகளும் வடமொழிகள் என தமிழர்களால் குறிக்கப்பட்டதற்கான சான்றினை தந்திருக்கிறேன்.

எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:32, 6 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடமொழி&oldid=1911810" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வடமொழி" page.