பேச்சு:வட்டெழுத்து
நான் இந்த கட்டுரையின் ஊடே இரு படங்களை இணைத்தேன். ஆனால் ஏதோ காரணங்களுக்காக அவை சரியாக வரவில்லை. தயவு செய்து அதை சரி செய்யவும். அவ்விருகோப்புகளும் கீழே தரப்ப்ட்டுள்ளன.
Tamilvatteluttu.png - நான் பதிவேற்றியது Image:Vatteluttu.png - ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது
- விநோத், ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை அவ்வாறே பயன்படுத்த இயலாதெனினும் மேல் (Meta Wiki) இல் உள்ளதை எந்த விக்கிபீடியாவிலும் கையாளலாம். மீண்டும் மீண்டும் பதிவேற்றத்தேவையில்லை. --Umapathy 16:10, 11 டிசம்பர் 2006 (UTC)
- வினோத், எழுத்துமுறைகள் பற்றி அருமையாக தொகுத்து வருகின்றீர்கள். அண்மையில், (வரலாறு 'டாட் காம்) இன் கமல் என்பவர் தமிழ்பிராமியில் இருந்துதான் பிராமியே (அசோகன் பிராமியே) என்பது உறுதியானதாகக் கூறினார். வலுவான அடிச்சான்றுகள் கிடைத்தவுடன், இங்கு இடுகின்றேன் (பிராமி, தமிழ்-பிராமி
கட்டுரைகளில்)--செல்வா 14:07, 15 மார்ச் 2008 (UTC)
- செல்வா, பிராமி, தமிழ் பிராமி குறித்த எனது தனிப்பட்ட கருத்துகளை http://prakliptam.wordpress.com/2008/01/26/tamil-brahmi/ வலைப்பதிவில் இட்டுள்ளேன். இந்த கருத்தாக்கத்தில் தமிழ் பிராமி --> பிராமி கருத்தாக்கத்தில் சில அடிப்படை ஐயங்கள் உள்ளன. அவற்றை இந்த வலைப்பதிவில் காணவும். முடிந்தால் அந்த ஐயங்களை தீர்க்குமாறு வேண்டுகிறேன். వినోద్ வினோத் 14:23, 15 மார்ச் 2008 (UTC)
படம் நீக்கம்
தொகு(இ)ழான்-லூய்க் செவ்வியார் வழியாக கல்வெட்டியல் அறிஞர் பேராசிரியர் கோ. விசயவேனுகோபால் தெரிவித்த தகவலின் பேரில் இதில் இணைத்திருந்த படத்தை நீக்கியுள்ளேன். அது சோழர் கல்வெட்டு, வட்டெழுத்து அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார். -- சுந்தர் \பேச்சு 10:56, 1 ஏப்ரல் 2010 (UTC)
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 27, 2016 அன்று வெளியானது. |